தமிழ்நாடு, ஆந்திரா, கேரளா, ஜம்மு - காஷ்மீர் உட்பட, ஒன்பது மாநிலங்களில், மத்திய மனிதவள அமைச்சகத்தின் நேரடி கட்டுப்பாட்டில் மத்திய பல்கலைகள் செயல்படுகின்றன. இந்த பல்கலைகளில், 3,000 இடங்களில், இளநிலை மற்றும் முதுநிலை பட்டப்படிப்புகளில் மாணவர் சேர்க்கப்படுகின்றனர். குறைந்த கட்டணத்தில், விடுதி வசதி கொண்ட இந்த படிப்புகளில் சேர, பொது நுழைவுத்தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும். இந்த ஆண்டிற்கான நுழைவுத் தேர்வு மே, 21, 22ல் நடக்கிறது. இதற்கான, ஆன்லைன் விண்ணப்ப பதிவு, மார்ச், 14ல் துவங்கியது. ஏப்., 15 வரை பதிவு செய்யலாம். தேர்வு முடிவுகள், ஜூன், 17ல் வெளியிடப்படும். இதுகுறித்த விவரங்களை, http:/cucet16.co.in/WebPage/Home.aspx என்ற இணையதள இணைப்பில் அறிந்து கொள்ளலாம்.
கடலியல் நுழைவுத்தேர்வு: மத்திய அரசின் கப்பல் போக்குவரத்து துறை அமைச்சகம் சார்பில் இயங்கும், கடல்சார் பல்கலைகளின் மூலம், அரசு மற்றும் தனியார் கல்லுாரிகளில், கடலியல் சார்ந்த படிப்புகள் நடத்தப்படுகின்றன. துறைமுகம் மற்றும் கப்பல் நிர்வாகம், சர்வதேச போக்குவரத்து, சரக்கு போக்குவரத்து நிர்வாகம், கப்பல் கட்டுதல், கடலில் ஆழப்படுத்தும் தொழில்நுட்பம், துறைமுக நிர்வாகம் போன்ற பல படிப்புகளில், 2,000 மாணவர்கள் சேர்க்கப்படுகின்றனர். இந்த படிப்புகளில் சேர, இந்திய கடலியல் பல்கலை நடத்தும் பொது நுழைவுத் தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும். இந்த கணினி வழி தேர்வு இந்த ஆண்டு, ஜூன், 4 பிற்பகலில் நடக்கிறது. இதற்கான, ஆன்லைன் விண்ணப்ப பதிவு ஏப்ரல், 1ல் துவங்கியது. மே, 13 வரை விண்ணப்பிக்கலாம். ஜூன், 8ல் தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டு, உடனடியாக, ஆன்லைன் கவுன்சிலிங் துவங்க உள்ளது. இதன் விவரங்களை, http:/www.imu.edu.in இணையதளத்தில் அறியலாம்.
No comments:
Post a Comment