Pages

Saturday, February 20, 2016

இனி ரயில் பயணத்தின் போதும் படங்களை டவுண்லோட் செய்யலாம்


சில குறிப்பிட்ட அதிவேக மற்றும் டபுள்டக்கர் ரயில்களில் பயணம் செய்யும் ஸ்மார்ட் மொபைல் போன் பயன்பாட்டாளர்கள் இனி வரையறுக்கப்பட்ட வை-பை பகுதிகளில் படங்கள் மற்றும் விளையாட்டுக்களை டவுன்லோட் செய்யும் வசதியை வடமேற்கு ரயில்வே அறிமுகம் செய்துள்ளது. இந்த புதிய வசதி மூலம் ரயில்கள் குறித்த தற்போதைய தகவல்கள் மற்றும் ரயில்கள் சம்பந்தமான பல முக்கிய தகவல்களை அறிந்து கொள்ள முடியும்.


இந்த புதிய வசதியை சில குறிப்பிட்ட பாதைகளில் செல்லும் ரயில்களில் பயணிக்கும் ரயில் பயணிகளுக்கு வழங்க வடமேற்கு ரயில்வே முடிவு செய்துள்ளது. சோதனை முயற்சியாக பிகானிர் - சாராய் ரோகில்லா ரயிலில் இந்த வசதி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதற்கு மக்களிடம் எந்த அளவிற்கு வரவேற்பு இருக்கிறது என்பதை தெரிந்து கொண்டு, பின்னர் மற்ற ரயில்களிலும் விரிவுபடுத்த ரயில்வே நிர்வாகம் முடிவு செய்துள்ளது. இந்த குறிப்பிட்ட பாதையில் செல்லும் சில குறிப்பிட்ட ரயில்களில் பயணிகளின் வசதிக்காக வை-பை வசதி செய்யப்பட்டுள்ளதாம். இதனால் பயணிகள் இலவசமாக "பிரஸ் பிளே" ('Press Play) என்ற ஆப்ஸ்-ஐ டவுன்லோட் செய்து கொள்ளலாம்.

இந்த ஆப்ஸை கொண்டு விளையாட்டுக்கள், பாடல்கள், படங்கள் போன்றவற்றை இலவசமாக டவுன்லோட் செய்து கொள்ளலாம். ஒருமுறை இந்த ஆப்ஸை டவுன்லோட் செய்து கொண்டால் போது. அடுத்த முறை ரயிலில் பயணிக்கும் போது இதனை பயன்படுத்தி படங்கள் போன்றவற்றை டவுன்லோட் செய்து கொள்ளலாம். குறிப்பிட்ட அந்த ரயிலுக்குள் பயணிக்கும் போது மட்டும் தான் இந்த ஆப்ஸ்-ஐ பயன்படுத்த முடியுமாம்.

முதல்கட்டமாக பல்வேறு பாதைகளில் செல்லும் 9 ரயில்களில் இந்த வசதி துவங்கப்பட உள்ளது. ஜெய்ப்பூர் - டில்லி சாராய் ரோகில்லா டபுள் டெக்கர் ரயில் உள்ளிட்ட ரயில்களில் இந்த வசதி அளிக்கப்பட உள்ளது. இதற்காக லக்னோ ஆராய்ச்சி வடிவமைப்பு மற்றம் தர நிர்ணய அமைப்பிடம் ஒப்புதல் பெறப்பட்டு விட்டதாகவும் ரயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

No comments:

Post a Comment