வேலூர் கண்டோன்மென்ட் ரயில் நிலையத்தில் மார்ச் மாதம் 1-ஆம் தேதி முதல் மூன்று நாள்களுக்கு நிறுத்தப்பட உள்ள சிறப்பு ரயிலில் தட்பவெப்ப நிலை மாற்றம் குறித்த கண்காட்சி அமைக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து, மாவட்ட ஆட்சியர் இரா.நந்தகோபால் வியாழக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:
அறிவியல் ரீதியாக ஏற்படும் தட்பவெப்பநிலை மாற்றம் குறித்து
மாணவர்கள், ஆசிரியர்கள், பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் குளிர்சாதன வசதியுடன் 16 பெட்டிகளைக் கொண்ட சிறப்பு ரயிலில் அமைக்கப்பட்டுள்ள கண்காட்சியை மார்ச் மாதம் 1-ஆம் தேதி முதல் மூன்று நாள்களுக்கு தினந்தோறும் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை பொதுமக்கள் இலவசமாகக் கண்டுகளிக்கலாம்.
No comments:
Post a Comment