சென்னை உள்பட மாவட்ட தலைநகரங்களில், மனிதச் சங்கிலி போராட்டத்தை சனிக்கிழமை நடத்த "ஜாக்டோ' முடிவு செய்துள்ளது.
மத்திய அரசு ஆசிரியர்களுக்கு இணையான ஊதியம், பிற பணப்பயன்கள் ஆகியவைகளை வழங்குதல் உள்பட 15 அம்சக் கோரிக்கைகளை வலியறுத்தி, ஆசிரியர்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த நிலையில், இடைக்கால பட்ஜெட்டில் ஊதிய உயர்வு தொடர்பான அறிவிப்புகள் எதுவும் வெளியிடப்படாததால் ஆசிரியர்கள் சங்கத்தினர் ஏமாற்றம் அடைந்தனர்.
இதைத் தொடர்ந்து, முதல் கட்டமாக பிப்ரவரி 20-ஆம் தேதி மாவட்ட தலைநகரங்களில் மனிதச் சங்கிலி போராட்டம் நடத்த முடிவு செய்துள்ளனர். பின்னர் தலைமைச்செயலகம் முன் 25-ஆம் தேதி பேரணியும், 26-ஆம் தேதி முதல் தொடர் வேலைநிறுத்தப் போராட்டத்திலும் ஈடுபடப் போவதாகவும் "ஜாக்டோ' செய்தித் தொடர்பாளர் பெ.இளங்கோவன் வியாழக்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment