கோவை அரசு கலைக் கல்லுாரியில், அரியர் தேர்வுக்கு விண்ணப்பிக்க வரும், 29ம் தேதி கடைசி நாளாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் இதுவரை, 300 பேர் விண்ணப்பித்துள்ளனர்.
கோவை அரசு கலைக் கல்லுாரியில், 23 இளங்கலை மற்றும், 21 முதுகலை படிப்புகள் வழங்கப்பட்டு வருகின்றன. இக்கல்லுாரியில் கடந்த, 1987ம் ஆண்டு முதல் இதுவரை அரியர் வைத்துள்ள மாணவர்களுக்கு ஏப்., 11ம் தேதி முதல் தேர்வுகள் நடக்கிறது.
இதற்கான விண்ணப்பங்கள் கடந்த, 1ம் தேதி முதல் வரும், 29ம் தேதி வரை வழங்கப்படுகிறது; இதுவரை, 300 மாணவர்கள் விண்ணப்பித்துள்ளனர். விண்ணப்பங்களை, கல்லுாரியின் தேர்வு கட்டுப்பாட்டு அதிகாரி அலுவலகத்தில் காலை, 10:00 முதல் மாலை, 5:00 மணி வரை பெற்றுக்கொள்ளலாம். அல்லது, www.gacbe.ac.in என்ற கல்லுாரி இணையதளத்தில் விண்ணப்பங்களை பதிவிறக்கம் செய்தும் விண்ணப்பிக்கலாம்.
தேர்வுக்கு விண்ணப்பிக்கும் முறை,
கட்டணம் உள்ளிட்ட அனைத்து தகவல்களும் இந்த இணையதளத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மாணவர்கள் கல்லுாரி வளாகத்திலுள்ள யூகோ வங்கியில் தேர்வு கட்டணத்தை செலுத்தி, பூர்த்திசெய்த விண்ணப்பங்களுடன் இணைத்து வரும், 29ம் தேதி மாலை, 5:00 மணிக்குள் தேர்வு கட்டுப்பாட்டு அதிகாரி அலுவலகத்தில் சமர்ப்பிக்க வேண்டும் என, கல்லுாரி முதல்வர் ஜெயலட்சுமி தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment