தமிழகம் முழுவதும், கே.வி., எனப்படும் கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் மாணவர் சேர்க்கைக்கு விண்ணப்பிக்க, மார்ச், 10 வரை அவகாசம் தரப்பட்டு உள்ளது.தமிழகத்தில், மத்திய அரசின் கே.வி., பள்ளிகள், 43 இடங்களில் உள்ளன.
இப்பள்ளிகளில், முதல் வகுப்பில் சேர்வதற்கான விண்ணப்ப வினியோகம், பிப்., 18ல் துவங்கியது. 'ஆன்லைனில்' பதிவு செய்து, விண்ணப்பங்களை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.வரும் கல்வியாண்டில், முதல் வகுப்பு சேர, 2009 ஏப்., 1க்கு, பின், 2011 ஏப்., 1க்குள் பிறந்திருக்க வேண்டும்.
விண்ணப்பங்களை, மார்ச், 10க்குள் அளிக்க வேண்டும். மார்ச், 18ல் மாணவர்களை தேர்வு செய்ததற்கான முடிவுகள் அறிவிக்கப்படும். மாணவர்களை சேர்க்க, ஜாதி சான்றிதழ், பிறப்பு சான்றிதழ், ஒரு பெண் குழந்தை என்றால் அதற்கான மாஜிஸ்திரேட் சான்றிதழ், வருவாய் சான்றிதழ் போன்றவற்றை சமர்ப்பிக்க வேண்டும்.
No comments:
Post a Comment