தமிழக சட்டசபையின் பதவிக்காலம் வரும் மே மாதம் 22–ந் தேதி முடிவடைவதையொட்டி, விரைவில் சட்டமன்ற தேர்தல் நடைபெற இருக்கிறது. தமிழ்நாடு, கேரளா, புதுச்சேரி, அசாம், மேற்கு வங்காளம் ஆகிய 5 மாநிலங்களும் சட்டமன்ற தேர்தலை எதிர்கொள்ள இருக்கிறது.தேர்தலுக்கான முன்னேற்பாடுகளில் தலைமை தேர்தல் அதிகாரியும், இந்திய தேர்தல் ஆணையர்களும் மும்முரமாக ஈடுபட்டுள்ளார்கள்.
தமிழக சட்டசபைக்கு வருகிற மே மாதம் தேர்தல் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதற்கான தேதி இன்னும் முடிவு செய்து தேர்தல் ஆணையம் அறிவிக்கவில்லை. இருந்தாலும் தமிழகத்தில் உள்ள அனைத்து கட்சிகளும் தேர்தலுக்கு தயாராகி வருகின்றன.
இந்த் நிலையில் தமிழகத்தில் சட்டசபை தேர்தலை மே 14ம் தேதி நடத்த தேர்தல் ஆணையம் பரிசீலிப்பதாக தகவல் வெளியாகி உள்ளது மேலும்மே 18ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறலாம் என எதிர்பார்க்கபடுகிறது.
No comments:
Post a Comment