நடப்பாண்டில் பிளஸ் 2, எஸ்.எஸ்.எல்.சி.,பொது தேர்வில் அதிக மாணவ, மாணவிகள்ஒட்டு மொத்த தேர்ச்சி பெற செய்ய வேண்டும் என்ற நோக்கில், பள்ளிகல்வி துறை கல்வியாண்டு துவக்கம் முதல் மாணவ, மாணவியருக்குமட்டுமின்றி பாட வாரியான ஆசிரியர்கள், தலைமை ஆசிரியர்கள் உள்ளிட்டோருக்கு சிறப்புவகுப்பு, பயிற்சிகளை வழங்கி வருகிறது.&nsp;இந்நிலையில்
நடப்பாண்டு பொதுத்தேர்வுஎழுதவுள்ள மாணவ, மாணவியரை ஊக்குவிக்கும் வகையில் அரையாண்டு தேர்வில் முதலிடம்பெற்றவர்களுக்குப் பரிசு வழங்கப்பட்டது. ஈரோடு அரசு மகளிர் மேல்நிலை பள்ளியில்,அரையாண்டு தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவ, மாணவிகளுக்குபரிசு, சான்று வழங்கும் நிகழ்ச்சி நேற்று நடந்தது.
&nsp;அரசு, மாநகராட்சி,அரசு உதவி பெறும் பள்ளிகளை சேர்ந்த மாணவ, மாணவிகள்பங்கேற்றனர். ஒவ்வொரு பள்ளியிலும் அதிக மதிப்பெண் பெற்ற முதல் மூன்று பேர் தேர்வுசெய்யப்பட்டு பரிசு, சான்றிதழ் வழங்கப்பட்டது. தேசிய கல்வியியல் மற்றும் ஆராய்ச்சி நிலையஇணை இயக்குனர் பால முருகன் தலைமை வகித்து பரிசு, சான்றுகளைவழங்கினார்.&nsp;ஈரோடு சி.இ.ஓ. அய்யண்ணன் பங்கேற்றார். பொது தேர்வில் அதிக மதிப்பெண்பெற்று மாநில அளவில் முதலிடம் பிடிக்க மாணவ, மாணவிகளுக்குஅறிவுறுத்தப்பட்டது.
No comments:
Post a Comment