உதவி புள்ளியியல் ஆய்வாளர் பணிக்கு மார்ச் 1 முதல் 3-ம் தேதி வரை சான்றிதழ் சரிபார்ப்பு நடைபெறும் என்று டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ளது.
இதுதொடர்பாக டிஎன்பிஎஸ்சி செயலாளர் எம்.விஜயகுமார் நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பு:
தமிழக அரசின் பொருளாதாரம் மற்றும் புள்ளியியல் துறையில் உதவி புள்ளியியல் ஆய்வாளர் பதவியில் 270 காலியிடங்களை (2014-ம் ஆண்டுக்கானவை) நேரடியாக நிரப்பும் பொருட்டு கடந்த 11.7.2015 அன்று எழுத்துத்தேர்வு
நடத்தப்பட்டது. விண்ணப்பதாரர்களின் ஆன்லைன் வழி விண்ணப்பங்களில் தெரிவிக்கப்பட்டுள்ள விவரங் களை சரிபார்க்கும் வகையில் சான்றிதழ் சரிபார்ப்புக்கு 541 பேர் அழைக்கப்பட்டுள்ளனர். சான்றிதழ் சரிபார்ப்பு மார்ச் 1 முதல் 3-ம் தேதி வரை நடைபெற உள்ளது.
சான்றிதழ் சரிபார்ப்புக்கு அழைக்கப்பட்ட விண் ணப்பதாரர்களுக்கான அழைப்புக் கடிதம் டிஎன்பிஎஸ்சி இணையதளத்தில் (www.tnpsc.gov.in) பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. விண்ணப்பதாரர்கள், அழைப்புக் கடிதத்தை இந்த இணையதளத்திலிருந்து பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்.
அழைப்புக்கடிதம் சம்பந்தப்பட்ட விண்ணப்பதாரர் களுக்கு விரைவஞ்சல் மூலமாகவும் அனுப்பப்பட்டுள் ளது. சான்றிதழ் சரிபார்ப்புக்கு அழைக்கப்பட்டதா லேயே அவர்கள் நேர்காணல் தேர்வு மற்றும் அதைத் தொடர்ந்த தெரிவுப் பணிகளுக்கு தகுதி பெற்றுவிட்ட தாக கருத இயலாது. குறிப்பிட்ட நாள் மற்றும் நேரத் தில் சான்றிதழ் சரிபார்ப்புக்கு கலந்து கொள்ள தவறும் விண்ணப்பதாரர் களுக்கு மறுவாய்ப்பு வழங்கப்பட மாட்டாது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment