Pages

Saturday, February 20, 2016

பி.இ. சான்றிதழின் உண்மைத் தன்மை: இணையதளத்தில் அறியலாம்


பொறியியல் பட்டச் சான்றிதழின் உண்மைத் தன்மையை www.annauniv.edu என்ற இணையதளத்தில் அறிய அண்ணா பல்கலைக்கழகம் ஏற்பாடு செய்துள்ளது.

போலிச் சான்றிதழ்கள் குறித்த சர்ச்சை தொடர்ந்து எழுந்து வருகின்றன. இதனால், சான்றிதழ் உண்மைத் தன்மையை அறிவதற்கான வசதி இருப்பது குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில், பல்கலைக்கழக இணையதளத்தில் வசதி இணைக்கப்பட்டுள்ளது.
இதற்கு ரூ.500 கட்டணமாக வசூலிக்கப்படும். தேவைப்படுபவர்கள் இணையதளத்தில் விண்ணப்பித்து சான்றிதழ் உண்மைத் தன்மையை அறியலாம் என்று பல்கலை. வட்டாரங்கள் தெரிவித்தன.

No comments:

Post a Comment