மாநில அரசு ஊழியர் சங்கம், ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கூட்டணியுடன் இணைந்து, தமிழ்நாடு முதுநிலை பட்டதாரி ஆசிரியர் கழகமும் இன்று (பிப்.,16) முதல் காலவரையற்ற போராட்டத்தில் ஈடுபடுகிறது.
பட்டதாரி ஆசிரியர் கழக மாநிலத் தலைவர் சுரேஷ் கூறியதாவது:
ஆசிரியர்களுக்கான 15 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஜாக்டோவுடன் இணைந்து ஓராண்டாக போராடுகிறோம். எங்கள் கழகத்தில் 25 ஆயிரம் உறுப்பினர்கள் உள்ளனர். பிளஸ் 2 பொதுத் தேர்வுக்கான செய்முறைத் தேர்வு நடக்கிறது. இத்தேர்வில் பங்கேற்கும் ஆசிரியர்கள் தவிர மற்றவர்கள் மறியலில் ஈடுபடுவர். இதனால் மாணவர்கள் பாதிக்கப்பட மாட்டார்கள், என்றார்.
No comments:
Post a Comment