Pages

Saturday, February 20, 2016

மத்திய அரசு ஊழியர்களுக்கு 6 சதவீத அகவிலைப்படி உயருகிறது


மத்திய அரசு ஊழியர்களுக்கு 6 சதவீத அக விலைப்படி உயரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


இது தொடர்பாக மத்திய அரசு ஊழியர், தொழிலாளர்கள் கூட்டமைப்பின் தலைவர் கே.கே.என். குட்டி கூறியதாவது:–மத்திய அரசு ஊழியர்களுக்கு ஆண்டுக்கு 2 முறை அகவிலைப்படி உயர்த்தப்படுகிறது. கடந்த 6–வது ஊதியக்குழு பரிந்துரையில் அகவிலைப்படி உயர்வை நிர்ணயிக்க தனி கணக்கீட்டு முறை உருவாக்கப்பட்டது.கடந்த ஜனவரி 2015 முதல் டிசம்பர் வரையில் சராசரி நுகர்வோர் குறியீட்டு எண். 6.73 சதவீதமாக உள்ளது.அதன் அடிப்படையில் மத்திய அரசு ஊழியர்களுக்கு 6 சதவீத அகவிலைப்படி உயர்வு வழங்கப்படலாம். அடிப்படை ஊதியத்துடன் இணைந்து அகவிலைப்படி விகிதம் தற்போதுள்ள 119 சதவீதத்தில் இருந்து 125 சதவீதமாக உயர்த்தப்படலாம்.இவ்வாறு அவர் கூறினார்.இந்த அகவிலைப்படி உயர்வுக்கு அமைச்சரவை விரைவில் ஒப்புதல் அளிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த அகவிலைப்படி உயர்வு ஜனவரி 1–ந் தேதி முதல் கணக்கிட்டு வழங்கப்படும். இதன் மூலம் 48 லட்சம் மத்திய அரசு ஊழியர்களும், 55 லட்சம் ஓய்வூதியதாரர்களும் பயன் அடைவார்கள்.

No comments:

Post a Comment