தமிழகத்தில் உள்ள தனியார் சுயநிதி பள்ளிகளில், கல்வி கட்டணம் நிர்ணயம் செய்ய, அரசு சார்பில், நீதிபதி சிங்காரவேலர் தலைமையில், கல்வி கட்டண நிர்ணய கமிட்டி அமைக்கப்பட்டுள்ளது. இந்த கமிட்டியின் சார்பில், தனியார் பள்ளிகளில் கல்வி கட்டணம் நிர்ணயித்து, அதிகாரப்பூர்வ அனுமதி வழங்கப்படுகிறது.
ஒவ்வொரு பள்ளிக்கும், உள்கட்டமைப்பு, நில அளவு, அங்கீகார நிலை, அரசு விதிமுறைகளை பின்பற்றுதல், மாணவர், ஆசிரியர்களுக்கான அடிப்படை வசதி அமைத்தல் போன்ற பல அம்சங்களை கருத்தில் கொண்டு, கல்வி கட்டணம் நிர்ணயிக்கப்படுகிறது.இதன்படி, முதல் கட்டமாக, கடந்த ஆண்டுடன் கட்டண நிர்ணயம் காலம் முடிந்த, 10 ஆயிரம் பள்ளிகளுக்கு அடுத்த,இரண்டு ஆண்டுகளுக்கான கல்வி கட்டணம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இதனால், பல பள்ளிகளுக்கு, 40 சதவீதம் கட்டணம் உயர்ந்துள்ளது. எல்.கே.ஜி., முதல் பிளஸ் 2 வரை கல்வி கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. சென்னையில் தான், கல்வி கட்டணம் அதிக அளவு வசூலிக்கப்படுகிறது. சென்னை, கோபாலபுரத்தில் உள்ள நேஷனல் பப்ளிக் பள்ளியில், எல்.கே.ஜி.,க்கான கல்வி கட்டணமாக, 42 ஆயிரத்து, 500 ரூபாய் நிர்ணயம்செய்யப்பட்டுள்ளது.
நாமக்கல் பள்ளிகள்:
நாமக்கல் மாவட்டத்தில் பெரும்பாலான பள்ளிகள், 6ம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரை மட்டுமே வகுப்புகள் நடத்துகின்றன. இவற்றிலும் பல பள்ளிகள், 10ம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 பொதுத் தேர்வுக்கு மட்டும் முக்கியத்துவம் அளிக்கின்றன. இவற்றில், வித்யா விகாஸ், வெற்றி விகாஸ் ஆகிய பள்ளிகளில், பிளஸ் 2 படிப்புக்கு, 30 - 35 ஆயிரம் ரூபாய் வரை கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment