Pages

Friday, February 19, 2016

பொன் மகன் பொது வைப்பு நிதி திட்டத்தில் புதிய சலுகை அறிமுகம்


இந்திய அஞ்சல்துறை சார்பில் தொடங்கப்பட்டுள்ள பொன் மகன் பொது வைப்பு நிதித் திட்டத்தி லிருந்து அவசிய தேவைகளுக்காக குறிப்பிட்ட காலத்துக்கும் முன்பே பணத்தை திரும்ப பெறும் வகையில் புதிய சலுகை வழங்கப்பட்டுள்ளது.


இதுகுறித்து இந்திய அரசின் பத்திரிகை தகவல் மையம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவித்திருப்பதாவது:

மத்திய அரசின் சட்டத்திட்டங் களுக்கு உட்பட்டு இந்திய அஞ்சல் துறை பொன் மகன் பொது வைப்பு நிதி திட்டத்தை தொடங்கியது. இந்த திட்டத்தின் கீழ் தனிநபர் மற்றும் சிறுவர்களின் பாதுகாவலர் ஆகியோர் ஆண்டுக்கு குறைந்த பட்சமாக ரூ.500 லிருந்து அதிகபட்சமாக ரூ.1 லட்சத்து 50 ஆயிரம் வரை செலுத்தி 15 ஆண்டுகளில் முதிர்வு பெறும் வைப்பு நிதி திட்டத்தில் சேரலாம்.

இந்த திட்டத்துக்கு வருமான வரி விலக்கு உண்டு. மேலும், திட்டம் முதிர்வடையும் காலத்துக்கு முன்பு பணத்தை திரும்ப பெற இயலாது என்கிற விதிமுறை உண்டு. இந்த விதியை அரசு தற்போது சற்று தளர்த்தியுள்ளது. திட்டத்தில் சேர்ந்து 5 ஆண்டுகள் கடந்த பயனாளர், குழந்தைகளின் உயர் கல்வி மற்றும் மருத்துவ சிகிச்சை போன்ற முக்கியமான தேவைகளுக்காக இந்த திட்டத்தில் சேமிக்கும் நிதியை திரும்ப பெறலாம்.

இதுகுறித்த தேவையான சட்ட திருத்தங்கள் விரைவில் வெளி வரும். அதிக வட்டி விகிதம் வழங் கும் இத்திட்டத்தில் வட்டி விகிதத் தில் மாற்றம் எதுவும் இருக்காது.

இவ்வாறு அந்த செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment