Pages

Monday, February 29, 2016

சேலம் பெரியார் பல்கலைக்கழக தொலைநிலைக் கல்வி நிறுவனத்தின் தேர்வு முடிவுகள் வெளியீடு


Click Here

ஆய்வக உதவியாளர் தேர்வு முடிவு எப்போது? தேர்வு எழுதிய 8 லட்சம் பேர் காத்திருப்பு...


ஆய்வக உதவியாளர் பணிக்கான தேர்வு நடந்து முடிந்து, எட்டு மாதங்களுக்கு மேல் ஆகியும், இன்னும் தேர்வு முடிவுகள் அறிவிக்கப்படாததால், தேர்வெழுதிய, எட்டு லட்சம் பேர் கவலையில் ஆழ்ந்துள்ளனர்.அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் உள்ள, 4,362 ஆய்வக உதவியாளர் பணிக்கு, கடந்த ஆண்டு மே, 31ல் எழுத்துத் தேர்வு நடத்தப்பட்டது; இதில், எட்டு லட்சம் பேர் பங்கேற்றனர்.

TRB anounce exam for lecturer post


தனித்தேர்வர்களூக்கான எட்டாம் வகுப்பு பொதுத் தேர்வு ஏப்ரல் 2016- தேர்விற்கான கால அட்டவணை


கே.வி., மாணவர் சேர்க்கை மார்ச் 10 வரை அவகாசம்


தமிழகம் முழுவதும், கே.வி., எனப்படும் கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் மாணவர் சேர்க்கைக்கு விண்ணப்பிக்க, மார்ச், 10 வரை அவகாசம் தரப்பட்டு உள்ளது.தமிழகத்தில், மத்திய அரசின் கே.வி., பள்ளிகள், 43 இடங்களில் உள்ளன.

இப்பள்ளிகளில், முதல் வகுப்பில் சேர்வதற்கான விண்ணப்ப வினியோகம், பிப்., 18ல் துவங்கியது. 'ஆன்லைனில்' பதிவு செய்து, விண்ணப்பங்களை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.வரும் கல்வியாண்டில், முதல் வகுப்பு சேர, 2009 ஏப்., 1க்கு, பின், 2011 ஏப்., 1க்குள் பிறந்திருக்க வேண்டும்.

விண்ணப்பங்களை, மார்ச், 10க்குள் அளிக்க வேண்டும். மார்ச், 18ல் மாணவர்களை தேர்வு செய்ததற்கான முடிவுகள் அறிவிக்கப்படும். மாணவர்களை சேர்க்க, ஜாதி சான்றிதழ், பிறப்பு சான்றிதழ், ஒரு பெண் குழந்தை என்றால் அதற்கான மாஜிஸ்திரேட் சான்றிதழ், வருவாய் சான்றிதழ் போன்றவற்றை சமர்ப்பிக்க வேண்டும்.

சமத்து மாணவர்களுக்கு பரிசு மத்திய அமைச்சர் அறிவிப்பு


மாணவியரிடம், ஒழுக்கத்துடனும், மரியாதையுடனும் நடந்து கொள்ளும் மாணவர்களை, பரிசளித்து கவுரவிக்க உள்ளதாக, மத்திய பெண்கள் மற்றும் குழந்தைகள் நலத் துறை அமைச்சர் மேனகா தெரிவித்தார்.

7வது ஊதியக்குழுவில், இடைநிலை ஆசிரியர்களுக்கு,



7வது ஊதியக்குழுவில்,
இடைநிலை ஆசிரியர்களுக்கு,

1.86 வழங்கி ஊதியம் நிர்ணயம் செய்தால், Pay matrixன் படி, குறைந்தபட்ச ஊதியம் 29200,

Saturday, February 27, 2016

அழகப்பா பல்கலைகழகத்தின் கீழ் செயல்படும் தொலைதூரக் கல்வி 2015 டிசம்பருக்கான தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன.


அழகப்பா பல்கலைகழகத்தின் கீழ் செயல்படும் தொலைதூரக் கல்வி 2015 டிசம்பருக்கான தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன.

Log on
www.alagappauniversity.ac.in

29–ந்தேதி மத்திய பொது பட்ஜெட்: வருமானவரி விலக்கு உச்சவரம்பு ரூ.3 லட்சமாக உயர்த்தப்படுகிறது?


பாராளுமன்றத்தின் பட்ஜெட் கூட்டத்தொடர் நடைபெற்று வருகிறது. நேற்று ரெயில் மந்திரி சுரேஷ் பிரபு ரெயில்வே பட்ஜெட்டை தாக்கல் செய்தார். இதில் பயணிகள் கட்டணம் உயர்த்தப்படவில்லை. பழைய திட்டங்களை விரைந்து நிறைவேற்றும் வகையில் புதிய திட்டங்கள், புதிய ரெயில்கள் அறிவிக்கப்படவில்லை.

பிளஸ்–2 தேர்வு நடைபெறும் பள்ளிகளுக்கு தடை இல்லா மின்சாரம் என்ஜினீயர்களுக்கு மின்சாரத்துறை உத்தரவு


பிளஸ்–2 தேர்வு நடைபெறும் நாட்களில் காலை 7 மணிமுதல் மாலை 4 மணிவரை தேர்வு நடைபெறும் மைய பள்ளிக்கூடங்களில் தடை இல்லா மின்சாரம் வழங்க அந்தந்தப் பகுதி என்ஜினீயர்களுக்கு மின்சாரத்துறை உத்தரவிட்டுள்ளது.பிளஸ்–2 தேர்வுதமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் பிளஸ்–2 தேர்வு மார்ச் 4–ந்தேதி

ஏப்ரல் கடைசி வாரத்தில் தமிழக சட்டப்பேரவைத் தேர்தல்: மார்ச் 6-ல் அதிகாரப்பூர்வ அறிவிப்பு


தில்லியில் 5 மாநில தலைமை தேர்தல் அதிகாரிகளுடன் தலைமை தேர்தல் ஆணையர் நஜிம் ஜைதி நேற்று இறுதி கட்ட ஆலோசனை நடத்தினார்.
இந்த ஆலோசனைக் கூட்டத்தில் தமிழகம், புதுச்சேரி, கேரளா ஆகிய மாநிலங்களில் தேர்தல் ஒரே கட்டமாகவும், மே.வங்கம்,
அசாமில் பல கட்டங்களாகவும் தேர்தல் நடத்த முடிவு செய்யப்பட்டது. முதல் கட்ட தேர்தல் ஏப்ரல் மத்தியில் நடைபெறலாம். தமிழகத்துக்கு ஏப்ரல் கடைசி வாரம் அல்லது மே முதல்வாரத்தில் வாக்குப்பதிவு நடைபெறலாம் என தேர்தல் ஆணைய வட்டாரங்கள் தெரிவித்தன.
மேலும் மார்ச் 6ம் தேதிக்குள் தேர்தல் தேதி குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்படும் என தெரிகிறது.

விழிப்புணர்வு சிறப்பு ரயில் மார்ச் 1-இல் வேலூர் வருகை


வேலூர் கண்டோன்மென்ட் ரயில் நிலையத்தில் மார்ச் மாதம் 1-ஆம் தேதி முதல் மூன்று நாள்களுக்கு நிறுத்தப்பட உள்ள சிறப்பு ரயிலில் தட்பவெப்ப நிலை மாற்றம் குறித்த கண்காட்சி அமைக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து, மாவட்ட ஆட்சியர் இரா.நந்தகோபால் வியாழக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:
அறிவியல் ரீதியாக ஏற்படும் தட்பவெப்பநிலை மாற்றம் குறித்து
மாணவர்கள், ஆசிரியர்கள், பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் குளிர்சாதன வசதியுடன் 16 பெட்டிகளைக் கொண்ட சிறப்பு ரயிலில் அமைக்கப்பட்டுள்ள கண்காட்சியை மார்ச் மாதம் 1-ஆம் தேதி முதல் மூன்று நாள்களுக்கு தினந்தோறும் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை பொதுமக்கள் இலவசமாகக் கண்டுகளிக்கலாம்.

பிளஸ் 2 மாணவர்களுக்கு கல்வித் துறை கட்டுப்பாடு: எழுதிய விடைகளை அடித்தால் தேர்வு முடிவுகள் நிறுத்தப்படும்


அரசு பொதுத் தேர்வு எழுதும் மாணவர்கள் தாங்கள் எழுதிய விடைகளை முழுமையாக அடித்தால் தேர்வு முடிவுகள் நிறுத்தி வைக்கப்படும். அடுத்த இரு பருவங்களுக்கு தேர்வு எழுதத் தடை விதிக்கப்படும் என கல்வித் துறை எச்சரித்துள்ளது.

EMIS - பதிவிடும் பொழுது கவனிக்கப்பட வேண்டியவை.


EMIS update all schools.முதல் வகுப்பு மாணவர்களை பதிவேற்றம் செய்யலாம்.

முதலில் நாம் செய்ய வேண்டியது நம்மிடம் படித்து ஜூன்-2015 க்கு பிறகுTC வாங்கி சென்ற மாணவர்களை transfer செய்ய வேண்டும்.

வி.ஏ.ஓ., தேர்வு: வினாத்தாளில் மாற்றம்


முறைகேட்டை தடுக்க நாளை (பிப்., 28) நடக்கும் வி.ஏ.ஓ., தேர்வுக்கான வினாத்தாளில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.தமிழகம் முழுவதும் காலியாக உள்ள 813 வி.ஏ.ஓ., பணியிடங்கள் டி.என்.பி.எஸ்.சி., மூலம் நிரப்பப்பட உள்ளன. இதற்கான தேர்வு நாளை நடக்கிறது. முறைகேடுகளை தடுக்க இந்த தேர்வுக்கான வினாத்தாளில் சில மாற்றங்கள் செய்யப்பட்டு உள்ளன.

16 ஆயிரம் பட்டதாரி ஆசிரியர்கள் வேலை இழக்கும் அபாயம்: அரசு நடவடிக்கைக்கு வலியுறுத்தல்


அனைவருக்கும் இடைநிலை கல்வித் திட்டத்தில் பணிபுரியும் 16 ஆயிரம் பட்டதாரி ஆசிரியர்கள் வேலையிழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.தமிழகத்தில் பள்ளிக் கல்வித் துறையின் சார்பில் 'டி.இ.டி.,' ஆசிரியர் தகுதி தேர்வின்றி 16 ஆயிரம் பட்டதாரி ஆசிரியர்கள் நியமனம் செய்யப்பட்டனர். இவர்கள் அரசு, அரசு நிதி உதவிபெறும் பள்ளி மற்றும் சிறுபான்மைப் பள்ளிகளில் பணி புரிகின்றனர்.

ஆண்டுக்கணக்கில் மாயமாகும் ஆசிரியர்கள் பட்டியல் எடுக்க அதிகாரிகள் உத்தரவு


அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் தங்கள் பணிக்காலத்தில், ஒரு நாள் விடுப்பு எடுக்க வேண்டும் என்றாலும், முறையான அனுமதி வாங்க வேண்டும். உயர் கல்வி படிக்க; பாஸ்போர்ட் பெற; வெளிநாடு செல்ல; சொத்துகள் வாங்க, உயர் அதிகாரிகளிடம் கடிதம் கொடுத்து, முன் அனுமதி பெற வேண்டும்.

Friday, February 26, 2016

சி.ஏ., நுழைவுத்தேர்வு, பாடத்திட்டம் மாற்றம்: இனி பிளஸ் 2 தேர்ச்சி கட்டாயம்


சி.ஏ., படிப்புக்கான நுழைவுத்தேர்வு மற்றும் பாடத்திட்டத்தில், அதிரடி மாற்றம் செய்யப்படுகிறது. இனி, பிளஸ் 2 முடித்தால் மட்டுமே, சி.ஏ., தேர்வை எழுத முடியும்.ஐ.சி.ஏ.ஐ., எனப்படும், இந்திய 'சார்ட்டர்ட் அக்கவுன்டன்ட்' அமைப்பின், தேசிய தலைவர் எம்.தேவராஜ ரெட்டி மற்றும் துணைத் தலைவர் நிலேஷ் ஷிவ்ஜி விகம்சே, நேற்று நிருபர்களுக்கு அளித்த பேட்டி:

அரசுப் பள்ளி ஆசிரியர்கள், தனியார் பள்ளிகளில் பணிபுரிவது தெரியவந்தால் கடும் நடவடிக்கை


அரசுப் பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்கள், ஆசிரியரல்லா பணியாளர்கள் தனியார் பள்ளிகளில் பகுதி நேரமாகப் பணிபுரிவது தெரியவந்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் (சி.இ.ஓ.) அ.ஞானகௌரி எச்சரித்துள்ளார். இதுதொடர்பாக அவர் புதன்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு:

மேல்நிலைத்தேர்வு மார்ச் - 2016 - மைய வாரியாக வினாத்தாட்கள் எண்ணிக்கை ஒதுக்கீடு - உறுதி செய்து சான்று அனுப்ப அனைத்து முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கும் அரசுத் தேர்வுகள் இயக்ககம் (மேல்நிலை) இணை இயக்குநர் அவர்களின் உத்தரவு கடிதம்.


பிளஸ் 2 தேர்வு அறைக்குள் கொண்டு செல்ல தடைவிதிக்கப்பட்ட பொருள்கள் விவரம்


பிளஸ் 2 தேர்வு அறைக்குள் எலக்ட்ரானிக்ஸ் பொருள்கள் உள்ளிட்டவை கொண்டு செல்வதற்கு தடைசெய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் வரும் மார்ச் 4ஆம் தேதி முதல் பிளஸ் 2 பொதுத் தேர்வு நடைபெறுகிறது. இத்தேர்வை, மதுரை மாவட்டத்தில் 92 மையங்களில் 37,863 மாணவ, மாணவியர் எழுதுகின்றனர்.

புள்ளியியல் ஆய்வாளர் பணிக்கு மார்ச் 1 முதல் 3 வரை சான்றிதழ் சரிபார்ப்பு: டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு


உதவி புள்ளியியல் ஆய்வாளர் பணிக்கு மார்ச் 1 முதல் 3-ம் தேதி வரை சான்றிதழ் சரிபார்ப்பு நடைபெறும் என்று டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ளது.

இதுதொடர்பாக டிஎன்பிஎஸ்சி செயலாளர் எம்.விஜயகுமார் நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பு:

தமிழக அரசின் பொருளாதாரம் மற்றும் புள்ளியியல் துறையில் உதவி புள்ளியியல் ஆய்வாளர் பதவியில் 270 காலியிடங்களை (2014-ம் ஆண்டுக்கானவை) நேரடியாக நிரப்பும் பொருட்டு கடந்த 11.7.2015 அன்று எழுத்துத்தேர்வு

அழகப்பா பல்கலைகழகத்தின் கீழ் செயல்படும் தொலைதூரக் கல்வி 2015 டிசம்பருக்கான தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன.


அழகப்பா பல்கலைகழகத்தின் கீழ் செயல்படும் தொலைதூரக் கல்வி 2015 டிசம்பருக்கான தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன.

Log on
www.alagappauniversity.ac.in

Thursday, February 25, 2016

தேர்தல் பணியில் ஈடுபடும் அரசு ஊழியர்களின் பட்டியலை இரண்டு நாட்களுக்குள் சமர்ப்பிக்க வேண்டும் என்று அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.


தமிழக சட்டமன்ற தேர்தல் விரைவில் நடைபெற உள்ளதையடுத்து தேர்தல் முன்னேற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றது. ஈரோடு 
மாவட்டத்தில் உள்ள ஈரோடு கிழக்கு, ஈரோடு மேற்கு, மொடக்குறிச்சி, பவானி, கோபி, பெருந்துறை, அந்தியூர், பவானிசாகர் ஆகிய 8 சட்டமன்ற தொகுதிகளில் 18 லட்சத்து 12 ஆயிரம் வாக்காளர்கள் உள்ளனர். 

வேலூர் மாவட்டத்தில் யாருக்கு வாக்களித்தோம் என்பதை தெரிந்துகொள்ளும் வசதி அறிமுகம்


நடைபெற உள்ள சட்டப் பேரவைத் தேர்தலில் யாருக்கு வாக்களித் தோம் என்பதை வாக்காளர்கள் தெரிந்துகொள்ளும் வசதி செய்யப்பட்டுள்ளது. இதற்கான இயந்திரத்தின் செயல் விளக்கம் பொதுமக்கள் முன்னிலையில் அளிக்கப்பட உள்ளது.

செல்வமகள் சேமிப்பு திட்டம்: ஊடகங்களில் வெளியான தகவலுக்கு விளக்கம்


செல்வமகள் சேமிப்பு திட்டத்தின் மதிப்புக் குறித்து ஊடகங்களில் வெளியான தவறான தகவல்களுக்கு விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

முன்பதிவு இல்லாத ரயில் டிக்கெட்டுகள்: மார்ச் 1 முதல் புதிய விதி அமல்


மார்ச் 1-ம் தேதி முதல் 199 கி.மீ தூரத்துக்கான முன்பதிவு இல்லாத ரயில் டிக்கெட்டுகள் 3 மணி நேரத்துக்கு மட்டுமே செல்லும் என மத்திய அரசு அறிவித்துள்ளது.

தமிழக சட்டசபை தேர்தல் எப்போது?


தமிழக சட்டசபை தேர்தலுக்கான தேதி அட்டவணை மார்ச் முதல் வாரத்தில் வெளியிடப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. தற்போது நடைபெற்று வரும் பார்லிமென்ட் பட்ஜெட் கூட்டத் தொடரில், பொது பட்ஜெட் பிப்ரவரி 29ம் தேதி தாக்கல் செய்யப்பட்ட பிறகு 5 மாநில சட்டசபை தேர்தல் தேதியை அறிவிக்க தேர்தல் கமிஷன் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

உண்மை தன்மை சான்று இல்லைஆசிரியர்கள் பதவி உயர்வுக்கு சிக்கல் ராமநாதபுரம் :

பல ஆண்டுகளாகியும் உண்மை தன்மை சான்று கிடைக்காததால் பதவி உயர்வுக்கான சீனியாரிட்டி பட்டியலில் இடம்பெறுவதில் பட்டதாரி ஆசிரியர்களுக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது.

மாணவர்களின் கணித, அறிவியல் திறனை அதிகரிக்க புதிய திட்டம்: தமிழகத்தில் துவக்கம்


பள்ளி மாணவர்களின் கணித, அறிவியல் திறனை அதிகரிக்க மத்திய அரசின் புதிய திட்டமான 'ராஷ்ட்ரிய ஆவிஸ்கார் அபியான்' திட்டம் தமிழகத்தில் துவங்கப்பட்டுள்ளது.

ரெயில்வே பட்ஜெட் இன்று தாக்கல் தமிழகத்துக்கு புதிய திட்டங்கள் அறிவிக்கப்படுமா?


ரெயில்வே பட்ஜெட்டை மத்திய ரெயில்வே மந்திரி சுரேஷ் பிரபு இன்று(வியாழக்கிழமை) தாக்கல் செய்கிறார். தொடர்ந்து 2–வது ஆண்டாக அவர் தாக்கல் செய்யும் ரெயில்வே பட்ஜெட் இதுவாகும்.இதில் பயணிகள் மற்றும் சரக்கு ரெயில் கட்டணம் உயர்வு இருக்கும் என்று எதிர்பார்ப்பு நிலவுகிறது. குறைந்து வரும் வருமானம் மற்றும் ரெயில்வே இலாகாவின் பல்வேறு திட்டங்களுக்கான நிதித் தேவை ஆகியவற்றுக்காக ரெயில் கட்டணம் உயர்த்தப்படும் என்ற எதிர்பார்ப்பும் உள்ளது. அதேநேரம் ரெயில்வே இலாகாவின் ஒரு பிரிவினர் கட்டண உயர்வு இந்த நேரத்தில் தேவை இல்லை என்று கருதுகின்றனர்.கடும் நிதிப்பற்றாக்குறையை ரெயில்வே நிர்வாகம் கொண்டு உள்ளபோதிலும் விரைவில் நடைபெற இருக்கும் தமிழ்நாடு, புதுச்சேரி, கேரளா, அசாம், மேற்கு வங்காளம் ஆகிய 5 மாநில சட்டசபை தேர்தல் மற்றும் டீசல் விலை சரிவு ஆகியவை காரணமாக பயணிகள் மற்றும் சரக்கு ரெயில் கட்டணம் உயர்வு பற்றிய அறிவிப்பை ரெயில்வே மந்திரி சுரேஷ் பிரபு இன்று தாக்கல் செய்யும் பட்ஜெட்டில் வெளியிட மாட்டார் என்றே அந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.வருமானம் குறைந்தது

பிளஸ் 2 பொதுத்தேர்வு விதிமுறைதேர்வுத்துறை சுற்றறிக்கை.


பிளஸ் 2 தேர்வு மார்ச், 4ல் துவங்குகிறது. மாணவர்கள் எப்போது தேர்வு எழுதலாம் என்பதற்கான விதிமுறைகளை, தேர்வுத்துறை அறிவித்துள்ளது.
இதுகுறித்த சுற்றறிக்கை, பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு அனுப்பப்பட்டு உள்ளது. அதன் விவரம்: 

தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள் மற்றும் தன்னார்வலத் தனி நபர்கள் நமது அரசுப் பள்ளிக் குழந்தைகளுக்கு உதவக் காத்திருக்கிறார்கள்...ஆகவே தங்கள் பள்ளிகளின் விபரங்கள் இப்படிவத்தில் பகிரவும்..முடிந்தவர்களிடம் தங்களை நேரிடையாக அறிமுகப்படுத்த ,எடுத்துக் கூற வாய்ப்பாக இருக்கும்....(தமிழில் பகிரவும்)


என்ன வகை உதவி தேவை எனில் கீழ்கண்ட Click Here சொடுக்கி online-ல் விவரத்தை பூர்த்தி செய்க.

Tuesday, February 23, 2016

யங் வேர்ல்ட் சார்பில் மாணவர்களுக்கான ஓவியப்போட்டி. இன்றைய தி ஹிந்து செய்தி:



யங் வேர்ல்ட் சார்பில் மாணவர்களுக்கான ஓவியப்போட்டி.
ஜூனியர் 4, 5, 6 வகுப்புகள், சீனியர் 7,8,9 வகுப்புகள்.
இணையதள முகவரி : www.thehindu.com/ywpainting
பதிவு செய்த பின்னர் பதிவெண் உங்கள் மின்னஞ்சலுக்கு அனுப்பப்படும்.
பின்னர் பதிவெண்ணைக் குறிப்பிட்டு பிப்.27 ம் தேதிக்குள் அனுப்ப வேண்டும். மேலும் தகவல்களை இணையப் பக்கத்தில் காணுங்கள்.

சிறு வழக்குகள் நீதிமன்றத்தில் பத்தாம் வகுப்பு கல்வித்தகுதியில் பல்வேறு காலிப்பணியிடகளை நிரப்புவதற்கான அறிவிப்பு


சென்னை உயர் நீதிமன்ற வளாகத்தில் உள்ள சிறு வழக்குகள் நீதிமன்றத்தில் பத்தாம் வகுப்பு கல்வித்தகுதியில் பல்வேறு காலிப்பணியிடகளை நிரப்புவதற்கான அறிவிப்பு  வெளியாகி  உள்ளது. கடைசி தேதி 11.3.2016

Click Here

சென்னை மாநகரப் பேருந்துகளில் மூத்த குடிமக்கள் இலவச பஸ் பாஸ் வழங்கபடும் முதல்வர் அறிவிப்பு


சென்னை மாநகரப் பேருந்துகளில் மூத்த குடிமக்கள் இலவச பஸ் பாஸ் வழங்கபடும் முதல்வர் அறிவிப்பு

போராட்ட களமான டி. பி.ஐ வளாகம் !!!


பிளஸ் 2 தனித்தேர்வகர்களுக்கு ’ஹால் டிக்கெட்’ வெளியீடு


பிளஸ் 2 பொதுத் தேர்வுக்கு தட்கல் முறையில் விண்ணப்பித்த தனிதேர்வகர்கள் தங்களது தேர்வுகூட நுழைவுச் சீட்டுகளை (ஹால் டிக்கெட்) பிப்.23ம் தேதி முதல் 25ம் தேதி வரை www.tndge.in என்ற இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என்று, அரசு தேவுகள் இயக்கம் அறிவித்துள்ளது.

இந்திய அரசின் பட்ஜெட் தயாரிக்கும் முறை..!


அதிநவீன அச்சக இயந்திரங்கள் மூலம் தலா 2500 பிரதிகள் கொண்ட நிதிநிலை அறிக்கைகள் தயாரிக்கப்படும்

விரைவில் அமலாகிறது சட்டம்: 3 மாத வாடகை மட்டுமே முன்பணம்!


வீட்டை வாடகை விடுவோர், பல மடங்கு முன்பணம் வசூலிக்க தடை செய்யும், அதேநேரத்தில், மூன்று மடங்கு மட்டுமே முன்பணமாக வசூலிக்க வகை செய்யும், மத்திய அரசின் புதிய சட்டத்தை அமல்படுத்த, தமிழக அரசு சம்மதம் தெரிவித்துள்ளது.

Monday, February 22, 2016

7 வது ஊதியக் குழு பரிந்துரைகளில் திருத்தம்: மத்திய அரசு ஊழியர்களுக்கு 30% ஊதிய உயர்வு; நிதிநிலை அறிக்கையில் அறிவிப்பு வெளியாக வாய்ப்பு


Empowered Committee of Secretaries processing the recommendations of 7th Pay Commission (7thCPC) in an overall perspective, are likely to double the percentage of pay hike recommended by the pay commission.

"தொடக்கப்பள்ளி மாணவர்களுக்கான மூன்றாம் பருவ குறுந்தகடு தயார்" !


1லிருந்து 5ஆம் வகுப்பு வரை கணிதம் தவிர அனைத்துப் பாடங்களுக்கும் ஆடியோ மற்றும் வீடியோ கொடுக்கப் பட்டுள்ளன. பாடல்கள் மற்றும் ஆங்கிலப் பாடங்களுக்கு வீடியோவுடன் பாட வரிகளும் கொடுக்கப் பட்டுள்ளன. வார்த்தைகளால் விளக்கமுடியாத பல பாடக்கருத்துகள் உரிய விளக்கங்களுடன் வீடியோ காட்சிகளாக உள்ளன.

தேர்தல், தேர்வு நெருங்குவதால் அரசு ஊழியர் போராட்டம் தற்காலிகமாக ஒத்திவைப்பு


அரசு ஊழியர்கள் போராட்டம் தற்காலிகமாக ஒத்திவைக்கப் படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

‘விடுபட்ட கோரிக்கைகளை வரைவு அறிக்கையாக தயாரித்து தலைமைச் செயலாளரிடம் அளிக்க உள்ளோம். இவற்றை அரசு தனது அரசாணையில் வெளியிட வேண்டும். அதன்பிறகும் எங்களது கோரிக்கைகள் நிறைவேற்றப்படவில்லை என்றால் அடுத்தகட்ட போராட்டம் குறித்து முடிவு எடுக்கப்படும்’ என்று கூறியுள்ளனர்.

எல்.இ.டி பல்புகளால் 421 மில்லியன் யூனிட் மின்சாரத்தை சேமிக்கும் ஆந்திர பிரதேசம்


ஆந்திர பிரதேச மாநிலத்தில் எல்.இ.டி. பல்புகளை பயன்படுத்த மக்களிடம் தொடர்ந்து வலியுறுத்தப்பட்டு வந்தது. அங்குள்ள 13 மாவட்டங்களில் 4 மாவட்டங்களில் எல்.இ.டி பல்புகளை அரசு புழக்கத்திற்கு கொண்டு வந்தது. இதன் பயனாக, சென்ற ஆண்டில் 421 மில்லியன் யூனிட் மின்சாரத்தை சேமித்துள்ளதாக அம்மாநிலம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து, அங்கு எடுக்கப்பட்ட சர்வேயில் ஆந்திர அரசு 57.03 லட்சம் எல்.இ.டி. பல்புகளை வினியோகித்துள்ளது.

'குரூப் பி, குரூப் சி' பணி-விண்ணப்பிக்க மார்ச் 10 கடைசி.


நாடு முழுவதும் உள்ள பல்வேறு பணியிடங்களுக்கு, 'குரூப் பி' மற்றும் 'குரூப் சி' பணியாளர்களை 'ஸ்டாப் செலக் ஷன் கமிஷன்' (எஸ்.எஸ்.சி.,) தேர்ந்தெடுக்க

மத்திய அரசு கல்விக்கூடங்களில் 3-வது மொழியாக சமஸ்கிருதத்தை கொண்டு வரக்கூடாது; கருணாநிதி வலியுறுத்தல்


மத்திய அரசு கல்விக்கூடங்களில் 3-வது மொழியாக சமஸ்கிருதத்தை கொண்டு வரக்கூடாது என்று கருணாநிதி கூறியுள்ளார்.

பகுதிநேர ஆசிரியர்கள் 23.2.16 மாபெரும் காலவரையற்ற உண்ணாவிரத போராட்டம்.


நம் வாழ்வாதார ஒரே அம்ச  கோரிக்கையான பணி நிரந்தரம் செய்திட வலியுறுத்தி மாபெரும் மாநிலம் தழுவிய காலவரையற்ற உண்ணாவிரதம் அனைத்து மாவட்ட ஒன்றிய பகுதிநேர ஆசிரியர்கள் தவறாமல் கலந்து கொள்ளவும்.

Saturday, February 20, 2016

மாணவர்களுக்கு தேர்வு பயம் போக்க கவுன்சிலிங்!

தேர்வு பயத்தால், இறுதி நேரத்தில் பள்ளிக்கு வராமல் &' ஆப்சென்ட் ஆகும் பிளஸ் 2 மற்றும் பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு, சிறப்பு கவுன்சிலிங் அளிக்கும் திட்டம் துவங்கப்பட்டுள்ளது.

இனி ரயில் பயணத்தின் போதும் படங்களை டவுண்லோட் செய்யலாம்


சில குறிப்பிட்ட அதிவேக மற்றும் டபுள்டக்கர் ரயில்களில் பயணம் செய்யும் ஸ்மார்ட் மொபைல் போன் பயன்பாட்டாளர்கள் இனி வரையறுக்கப்பட்ட வை-பை பகுதிகளில் படங்கள் மற்றும் விளையாட்டுக்களை டவுன்லோட் செய்யும் வசதியை வடமேற்கு ரயில்வே அறிமுகம் செய்துள்ளது. இந்த புதிய வசதி மூலம் ரயில்கள் குறித்த தற்போதைய தகவல்கள் மற்றும் ரயில்கள் சம்பந்தமான பல முக்கிய தகவல்களை அறிந்து கொள்ள முடியும்.

CPS:அரசு ஊழியர்களிடம் பிடித்தம் செய்த ரூ.14 ஆயிரம் கோடி பென்ஷன் பணம் அரசு கஜானாவில் பாதுகாப்பாக உள்ளது: நிதி அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தகவல்


புதிய ஓய்வூதியத் திட்டத்தின்கீழ் அரசு ஊழியர்களிடம் பிடித்தம் செய்யப்பட்ட ரூ.14 ஆயிரம் கோடி, அரசு கஜானாவில் வட்டியுடன் பாதுகாப்பாக உள்ளது என்று நிதி அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்தார்.சட்டப்பேரவையில் நேற்று இடைக்கால பட்ஜெட் மீது நடந்த விவாதம் வருமாறு:

பொதுத்தேர்வு பணிகள்: ஆசிரியர்கள் விடுப்பு எடுக்க தடை


ஆசிரியர்களின் போராட்டத்தால், 10ம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 பொதுத்தேர்வு பணிகள் முடங்கி உள்ளன. இதனால், தனியார் பள்ளி ஆசிரியர்கள் விடுப்பு எடுக்க தடை விதிக்கப்பட்டு உள்ளது.
பிப்., 25ல் பேரணி'ஜாக்டோ' ஆசிரியர் கூட்டுக்குழுவின் உயர்மட்டக் குழு, பட்டதாரி ஆசிரியர் கூட்டமைப்பு பொதுச் செயலர் பேட்ரிக் ரைமண்ட் மற்றும் தொடக்கப் பள்ளி ஆசிரியர் கூட்டணி பொதுச் செயலர் ரங்கராஜன் தலைமையில், இன்று கூடி, மாவட்ட தலைநகரங்களில் பேரணி; பிப்., 25ல் சென்னையில் கோட்டை நோக்கி பேரணி போராட்டத்தை அறிவித்துள்ளது.

"ஜாக்டோ' சார்பில் இன்று மனிதச் சங்கிலி


சென்னை உள்பட மாவட்ட தலைநகரங்களில், மனிதச் சங்கிலி போராட்டத்தை சனிக்கிழமை நடத்த "ஜாக்டோ' முடிவு செய்துள்ளது.

பி.இ. சான்றிதழின் உண்மைத் தன்மை: இணையதளத்தில் அறியலாம்


பொறியியல் பட்டச் சான்றிதழின் உண்மைத் தன்மையை www.annauniv.edu என்ற இணையதளத்தில் அறிய அண்ணா பல்கலைக்கழகம் ஏற்பாடு செய்துள்ளது.

எல்.கே.ஜி.,க்கு ரூ.42 ஆயிரம் 'பீஸ்' சிங்காரவேலர் கமிட்டி அறிவிப்பு


தமிழகத்தில் உள்ள தனியார் சுயநிதி பள்ளிகளில், கல்வி கட்டணம் நிர்ணயம் செய்ய, அரசு சார்பில், நீதிபதி சிங்காரவேலர் தலைமையில், கல்வி கட்டண நிர்ணய கமிட்டி அமைக்கப்பட்டுள்ளது. இந்த கமிட்டியின் சார்பில், தனியார் பள்ளிகளில் கல்வி கட்டணம் நிர்ணயித்து, அதிகாரப்பூர்வ அனுமதி வழங்கப்படுகிறது.

மத்திய அரசு ஊழியர்களுக்கு 6 சதவீத அகவிலைப்படி உயருகிறது


மத்திய அரசு ஊழியர்களுக்கு 6 சதவீத அக விலைப்படி உயரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஆசிரியர்களுக்கு சம்பளம் 'கட்'ஒழுங்கு நடவடிக்கையும் பாய்கிறது : SR - ல் பதிவு செய்ய உத்தரவு


பிப்., 10 முதல், 'ஸ்டிரைக்'கில் ஈடுபட்டு, வேலைக்கு வராத ஆசிரியர்களுக்கு, ஒரு வார சம்பளத்தை பிடிக்க, கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது. அரசு ஊழியர் சங்கங்களுடன் சேர்ந்து, சில ஆசிரியர் சங்கங்களும், சில கல்வி அலுவலக ஊழியர் சங்கங்களும் ஸ்டிரைக்கில் ஈடுபட்டுள்ளன. இதனால், வழக்கமான பணிகள் பாதிக்கப்பட்டுள்ளன.

பள்ளிக்கூடங்களில் உளவியல் நிபுணர்களை நியமிக்க நடவடிக்கை: மத்திய, மாநில அரசுகளுக்கு ஐகோர்ட்டு உத்தரவு


சென்னை ஐகோர்ட்டில், பாரிமுனையை சேர்ந்த வக்கீல் எ.ரங்கநாயகி தாக்கல் செய்துள்ள பொதுநல மனுவில் கூறியிருப்பதாவது:-

Friday, February 19, 2016

20 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு ஊழியர் 8-வது நாளாக போராட்டம்:

தமிழக முழுவதும் ஒரு லட்சம் பேர் கைது
அரசு ஊழியர்களின் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டம் நேற்று 8-வது நாளாக தொடர்ந்தது. சாலை மறியலில் ஈடுபட முயன்றதாக தமிழகம் முழுவதும் ஒரு லட்சம் பேர் கைது செய்யப்பட்டனர்.

பொன் மகன் பொது வைப்பு நிதி திட்டத்தில் புதிய சலுகை அறிமுகம்


இந்திய அஞ்சல்துறை சார்பில் தொடங்கப்பட்டுள்ள பொன் மகன் பொது வைப்பு நிதித் திட்டத்தி லிருந்து அவசிய தேவைகளுக்காக குறிப்பிட்ட காலத்துக்கும் முன்பே பணத்தை திரும்ப பெறும் வகையில் புதிய சலுகை வழங்கப்பட்டுள்ளது.

7,000 மாணவர்கள் தமிழ் தேர்வு எழுத விலக்கு!


தமிழகத்தில், எஸ்.எஸ்.எல்.சி., தேர்வு எழுதும் சிறுபான்மை மொழி மாணவ, மாணவியருக்கு, தமிழ் பாட தேர்வில் இருந்து, அரசு தேர்வுத்துறை இயக்குனரகம் விலக்கு அளித்துள்ளது.தமிழகத்தில் உள்ள அரசு மற்றும் தனியார் பள்ளிகளில், தமிழ் பாடத்தை கட்டாயமாக்கும் சட்டத்தை கடந்த, 2006 ஜூன், 12ம் தேதி தமிழக அரசு கொண்டு வந்தது. 

தேர்வு அறையில் நாற்காலிக்கு தடை


பிளஸ் 2 மற்றும் 10ம் வகுப்பு பொதுத் தேர்வுகளில், கடந்த ஆண்டை போல், தேர்வு அறையில் ஆசிரியர்களுக்கு நாற்காலிக்கு தடை விதிக்க, தேர்வுத்துறை அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர்.பிளஸ் 2வுக்கு மார்ச், 4; மார்ச், 15ல் 10ம் வகுப்புக்கு பொதுத் தேர்வுகள் துவங்குகின்றன. தேர்வு அறையில் ஆசிரியர்களின் கண்காணிப்பு பணிகளில் மாற்றம்கொண்டு வரப்படுகிறது.

உங்கள் ஆண்டு வருமானம் ரூ.10 லட்சத்திற்கு மேல் இருக்கிறதா? சமையல் கியாஸ் மானியத்தை கைவிட எண்ணெய் நிறுவனங்கள் எஸ்.எம்.எஸ்.


உங்கள் ஆண்டு வருமானம் ரூ.10 லட்சத்திற்கு மேல் இருக்கிறதா? என்று கேட்டு சமையல் கியாஸ் மானியத்தை கைவிடக்கோரி எண்ணெய் நிறுவனங்கள் வாடிக்கையாளர்களுக்கு எஸ்.எம்.எஸ். அனுப்பி வருகின்றன.சமையல் கியாஸ்

கலெக்டர் அலுவலகங்களில் அரசு ஊழியர்கள் காத்திருப்பு போராட்டம்:

அரசு பணிகள் முடங்கியது அரசு ஊழியர்கள் போராட்டம் தமிழகம் முழுவதும் தீவிரம் அடைந்து வருகிறது.

சென்னை மாநகரப் பேருந்துகளில் மூத்த குடிமக்கள் இலவச பஸ் பாஸ் வழங்கபடும் முதல்வர் அறிவிப்பு



ஜாக்டோ 26 முதல் வேலைநிறுத்தம் அறிவிப்பு.


Wednesday, February 17, 2016

+1 comman exam time table 2016


சுகாதார துறையில் 1,200 பேருக்கு வேலை


?'சுகாதார துறையில், மருந்தாளுனர்கள், இரண்டாம் நிலை லேப் டெக்னீஷியன் உட்பட, 1,202 இடங்கள், மருத்துவ பணியாளர் தேர்வு வாரியமான, எம்.ஆர்.பி., மூலம் நிரப்பப்பட உள்ளன.

அரசு கலைக் கல்லூரியில் ’அரியர்’ விண்ணப்பம் வரவேற்பு


கோவை அரசு கலைக் கல்லுாரியில், அரியர் தேர்வுக்கு விண்ணப்பிக்க வரும், 29ம் தேதி கடைசி நாளாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் இதுவரை, 300 பேர் விண்ணப்பித்துள்ளனர்.

பட்டதாரி ஆசிரியர் கழகமும் போராட்டத்தில் இறங்குகிறது


மாநில அரசு ஊழியர் சங்கம், ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கூட்டணியுடன் இணைந்து, தமிழ்நாடு முதுநிலை பட்டதாரி ஆசிரியர் கழகமும் இன்று (பிப்.,16) முதல் காலவரையற்ற போராட்டத்தில் ஈடுபடுகிறது.

ஏப்ரல் 11-ந்தேதி முதல் காலவரையற்ற வேலைநிறுத்தம் அறிவிப்பு;

ரெயில்வே உள்பட மத்திய அரசு ஊழியர்கள் போராட்டம்
ரெயில்வே உள்பட மத்திய அரசு ஊழியர்கள் ஏப்ரல் 11-ந்தேதி முதல் காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபடுகின்றனர். மார்ச் 11-ந்தேதி அரசிடம் வேலைநிறுத்த நோட்டீசு வழங்குகின்றனர்.

2016 - 17 பட்ஜெட் : பள்ளி கல்வித்துறை அறிவிப்புகள்


பிப்.16-தமிழ்நாடு சட்டசபையில் இன்று பட்ஜெட் தாக்கல் செய்து நிதி அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் கூறியதாவது:2016–2017 ஆம் ஆண்டிற்கான இடைக்கால வரவு–செலவுத் திட்ட மதிப்பீடுகளில் பள்ளிக்கல்வித் துறைக்கென 24,820 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

NMMS EXAM HALL TICKET 2016 DOWNLOAD..


NMMS EXAM HALL TICKET 2016 DOWNLOAD click here ...

Saturday, February 13, 2016

ரயில் கட்டணம் 10 சதவீதம் உயருகிறது?


ரயில்வே பட்ஜெட்டில் ரயில் பயணக் கட்டணம் 10 சதவீதமும், சரக்கு கட்டணம் 5 சதவீதமும் உயத்தப்படலாம் என ரயில்வே அமைச்சக வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

சிறுசேமிப்பு வட்டி: இனி காலாண்டுக்கு ஒரு முறை மாற்றம்


சிறுசேமிப்பு திட்டத்தில், இனி காலாண்டுக்கு ஒருமுறை வட்டி விகிதம் மாற்றி அமைக்கப்படும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது. இதுகுறித்து மத்திய அரசின் பொருளாதார விவகாரங்களுக்கான செயலர் சக்திகாந்த் தாஸ் கூறியுள்ளதாவது..

தனியார் பள்ளி கட்டணம் 40 சதவீதம் உயர்வு


தனியார் பள்ளிகளின் அடுத்த, மூன்று ஆண்டுகளுக்கான கல்விக் கட்டணத்தை, அரசு வெளியிட்டு உள்ளது. இதில், கடந்த ஆண்டை விட, 40 சதவீதம் அதிக கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.தனியார் சுயநிதி பள்ளிகளுக்கு கல்விக் கட்டணம் நிர்ணயிக்க, நீதிபதி சிங்காரவேலர் தலைமையில், கமிட்டி அமைக்கப்பட்டுள்ளது. 

70 துறைகளைக் கைவிட 30 பொறியியல் கல்லூரிகள் முடிவு


மாணவர்கள் சேர்க்கை ஆண்டுக்கு ஆண்டு குறைந்து வருவதைத் தொடர்ந்து, வருகிற 2016-17 கல்வியாண்டில் 70 துறைகளைக் கைவிட 30 பொறியியல் கல்லூரிகள் அண்ணா பல்கலைக்கழகத்திடம் விண்ணப்பித்திருப்பது தெரியவந்துள்ளது.இதுபோல, மாணவர் சேர்க்கை இடங்களைக் குறைக்க 20-க்கும்மேற்பட்ட பொறியியல் கல்லூரிகள் விண்ணப்பித்துள்ளன.

8ம் வகுப்பு தனித்தேர்வு அறிவிப்பு


தனித்தேர்வர்களுக்கு 8ம்வகுப்பு பொதுத்தேர்வு ஏப்ரலில் நடக்கவுள்ளது. இதை எழுத விரும்புவோர் பிப்.18 முதல் 29 வரை www.tndge.in என்ற இணையளத்தில் பதிவு செய்து கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது.பனிரெண்டரை வயது பூர்த்தியடைந்த தனித்தேர்வர்கள் இத்தேர்வு எழுதலாம்.

இந்திரா காந்தி திறந்தபல்கலைகழக BE.d -2015 தேர்வுமுடிவுகள் வெளியீடு!!!


IGNOU DECEMBER 2015 RESULT PUBLISHED

அரசு பள்ளி மாணவர்களுக்கு ஊக்கம்!


நடப்பாண்டில் பிளஸ் 2, எஸ்.எஸ்.எல்.சி.,பொது தேர்வில் அதிக  மாணவ, மாணவிகள்ஒட்டு மொத்த தேர்ச்சி பெற செய்ய வேண்டும் என்ற நோக்கில், பள்ளிகல்வி துறை கல்வியாண்டு துவக்கம் முதல் மாணவ, மாணவியருக்குமட்டுமின்றி பாட வாரியான ஆசிரியர்கள், தலைமை ஆசிரியர்கள் உள்ளிட்டோருக்கு சிறப்புவகுப்பு, பயிற்சிகளை வழங்கி வருகிறது.&nsp;இந்நிலையில் 

Wednesday, February 10, 2016

10ம் வகுப்பு தனித்தேர்வு- ஆன்லைனில் பிப். 11, 12ல் விண்ணப்பிக்க வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது


10ம் வகுப்பு பொதுத்தேர்வுக்கு தனித்தேர்வர்கள் சிறப்பு அனுமதி திட்டத்தின் கீழ் (தட்கல்) ஆன்லைனில் பிப். 11, 12ல் விண்ணப்பிக்க வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.மார்ச் 15ல் 10ம் வகுப்பு பொதுத்தேர்வு துவங்கவுள்ளது.

இதையொட்டி தேர்வுத்துறை மூலம் தனித் தேர்வர்கள் அறிவிக்கப்பட்ட நாட்களுக்குள் விண்ணப்பிக்க அறிவுறுத்தப்பட்டது. விண்ணப்பிக்க தவறிய, தற்போது விண்ணப்பிக்க விரும்பும் தனித்தேர்வர்கள் சிறப்பு அனுமதி திட்டத்தின் (தட்கல்) கீழ் ஆன்லைனில் பிப். 11, 12ல் விண்ணப்பிக்க வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

தமிழக சட்டப்பேரவை 16ம் தேதி கூடுகிறது


தமிழக சட்டப்பேரவை வருகிற 16ம் தேதி காலை 11 மணிக்கு கூடுகிறது. அன்றைய தினம் 2016-2017ம் ஆண்டுக்கான இடைக்கால பட்ஜெட்டை நிதி அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தாக்கல் செய்கிறார். தமிழக சட்டப்பேரவை  கூட்டம் ஒவ்வொரு ஆண்டு தொடக்கத்தில் கவர்னர் உரையுடன் கூடுவது  மரபு. அதன்படி, 2016ம் ஆண்டின் முதல் சட்டப்பேரவை கூட்டம் கடந்த 20ம்  தேதி கூடியது. அன்றைய தினம் தமிழக கவர்னர் ரோசய்யா உரையாற்றினார். அதைத்தொடர்ந்து 3 நாட்கள் சட்டப்பேரவை கூட்டம் நடைபெற்றது. அதன்பிறகு கூட்டம் தேதி குறிப்பிடப்படாமல் ஒத்திவைக்கப்பட்டது. இதையடுத்து தமிழக சட்டப்பேரவையின் அடுத்த கூட்டம் வருகிற 16ம் தேதி காலை 11 மணிக்கு தலைமை செயலகத்தில் உள்ள சட்டமன்ற பேரவை மண்டபத்தில் பேரவை தலைவர் தனபால் கூட்டியுள்ளார்.

அரசு ஐடிஐயில் காலியாக உள்ள பணிமனை உதவியாளர் பணிக்கு விண்ணப்பிக்கலாம்


அரசு ஐடிஐயில் காலியாகவுள்ள பணிமனை உதவியாளர் பணியிடத்துக்கு தகுதியுள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம் என சென்னை கலெக்டர் கோவிந்தராஜ் தெரிவித்துள்ளார்.இதுதொடர்பாக, சென்னை கலெக்டர் கோவிந்தராஜ் வெளியிட்ட அறிக்கை:சென்னை, கிண்டியில் உள்ள அரசினர் தொழிற்பயிற்சி நிலையம் மற்றும் அரசினர் தொடர் அறிவுரை மையம்  ஆகியவற்றில்  காலியாகவுள்ள  பணிமனை உதவியாளர் பணியிடங்கள் நேரடி நியமனம் மூலம் நிரப்பிட விண்ணப்பங்கள்   வரவேற்கப்படுகின்றன. நான்கு பிரிவுகளின் கீழ் (COPA, FITTER, MRAC, CUTTING AND TAILORING) பணிமனை உதவியாளர்கள் தேர்வு செய்யப்படுகின்றனர்.

ஜாக்டோ பேச்சுவார்த்தை முழு விவரம்-தமிழ்நாடுஆசிரியர் கூட்டணிபொதுசெயலர் செ.முத்துசாமி அவர்களின் அறிக்கை


ஜாக்டோ தரப்பில் 15 அம்சக்கோரிக்கைகளை, ஒவ்வொரு கோரிக்கையாக ஒவ்வொரு சங்கபிரதிநிதிகள் தெளிவாக எடுத்துக்கூறினர்.

பிப்ரவரி 01 ம் தேதி நடைபெற்ற போராட்டத்திற்கு ஊதியம் பிடிக்கப்படுவதில்லை-இயக்குநர்


ஜாக்டோவின் இன்றைய பேச்சுவார்த்தையில் இயக்குனர் அளித்த தகவல்..

பிப்ரவரி 01 ம் தேதி நடைபெற்ற போராட்டத்திற்கு ஊதியம் பிடிக்கப்படுவதில்லை-இயக்குநர்

தேர்தல் பணி & தேசிய மக்கள் தொகை கணக்கெடுப்பு பணியில் இருந்து ஆசிரியர்களுக்கு விலக்கு அளிக்க வேண்டும்.


தமிழகத்தில் சட்டசபை தேர்தல் மே மாதம் 14ம் தேதி? தேர்தல் ஆணையம் பரிசீலிப்பு


தமிழக சட்டசபையின் பதவிக்காலம் வரும் மே மாதம் 22–ந் தேதி முடிவடைவதையொட்டி, விரைவில் சட்டமன்ற தேர்தல் நடைபெற இருக்கிறது. தமிழ்நாடு, கேரளா, புதுச்சேரி, அசாம், மேற்கு வங்காளம் ஆகிய 5 மாநிலங்களும் சட்டமன்ற தேர்தலை எதிர்கொள்ள இருக்கிறது.தேர்தலுக்கான முன்னேற்பாடுகளில் தலைமை தேர்தல் அதிகாரியும், இந்திய தேர்தல் ஆணையர்களும் மும்முரமாக ஈடுபட்டுள்ளார்கள்.

ஜாக்டோவின் கோரிக்கைகள் முதல்வர் பரிசீலித்து பட்ஜெட்டில் அறிவிப்பார் என அமைச்சர்கள் குழு உறுதிமொழி; இதையடுத்து அடுத்த கட்ட முடிவு குறித்து பிப்ரவரி 16 அன்று கூட ஜாக்டோ முடிவு


அரசு தரப்பில் கூறப்பட்டுள்ள உறுதிமொழிக்கேற்ப தமிழக அரசின் பட்ஜெட் உரையில் அனைத்து கோரிக்கைகளும் நிறைவேற்றப்படும் என ஜாக்டோ நம்பிக்கை வைக்கிறது, பட்ஜெட்டில் கோரிக்கைகள் இடம் பெறவில்லை எனில் அடுத்தகட்ட போராட்டம் குறித்து பிப்ரவரி 16ந்தேதி அறிவிக்கப்படும்
என ஜாக்டோ உயர்மட்டக்குழு முடிவு எடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.