''மாணவர்கள் வழக்கமான படிப்புகளை தேர்வு செய்வதை விட புதிய படிப்புகளை தேர்வு செய்தால் உடன் வேலைவாய்ப்பு கிடைக்கும்,'' என, சென்னை சாய்ராம் பொறியியல் கல்லுாரி இயக்குனர் மாறன் தெரிவித்தார்.
மதுரையில் தினமலர் வழிகாட்டி நிகழ்ச்சியில் 'புதிய படிப்புகள்' தொடர்பாக அவர் பேசியதாவது:
ஒவ்வொரு ஆண்டும் பொறியியல், கலை மற்றும் அறிவியல் துறைகளில் வேலைவாய்ப்பு அளிக்கும் புதிய படிப்புகள் அறிமுகமாகின்றன. சாப்ட்வேர் இன்ஜி., துறையில் ஒவ்வொரு ஆண்டும் 35 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்புகள் கிடைக்கின்றன. பொறியியலில் மெக்கட்ரானிக்ஸ் படிப்பை தேர்வு செய்யலாம். கலை பிரிவில் சுற்றுலா தொடர்பான படிப்புகளுக்கு நல்ல எதிர்காலம் உள்ளது. இதுதவிர மைனிங் இன்ஜி., மரைன் இன்ஜி., எலக்ட்ரிக்கல் மரைன் இன்ஜி., கம்யூனிகேஷன் மரைன் இன்ஜி., போன்ற தனித் திறன் படிப்புகளை தேர்வு செய்யலாம்.
இதுதவிர ரோபோட்டிக் இன்ஜி., படிப்பை இப்போது தேர்வு செய்தால் படிப்பு முடியும் போது அதற்கு சிறப்பான எதிர்காலம் இருக்கும். இதுதவிர சோலார் எனர்ஜி டெக்., ஜெனிட்டிக்ஸ் டெக்., ஜியோ இன்பர்மேட்டிக் இன்ஜி., உணவு பதப்படுத்துதல், பவுல்ட்ரி டெக்., போன்ற படிப்புகளுக்கு படித்தவுடன் வேலைவாய்ப்புகள் உள்ளன. எந்த படிப்பு படித்தாலும் அதை எவ்வாறு ஆர்வமுடன் படிக்க வேண்டும் என்பது தான் முக்கியம், என்றார்.
No comments:
Post a Comment