கல்விக்கட்டண நிர்ணய கமிட்டியின் சிறப்பு அதிகாரியாக,மெட்ரிக் இணை இயக்குனர் ஸ்ரீதேவிநியமிக்கப்பட்டு உள்ளார்.கடந்த, 2009ல், கட்டாய கல்வி உரிமைச் சட்டம் வந்ததும், சுயநிதி தனியார் பள்ளிகளுக்கான கட்டண நிர்ணய கமிட்டியை தமிழக அரசு அமைத்தது. 2012 ஜனவரியில், உயர் நீதிமன்ற ஓய்வுபெற்ற நீதிபதி சிங்காரவேலு, இந்த கமிட்டி தலைவரானார்.
அவரது பதவிக்காலம், 2015 டிசம்பர், 31ல் முடிந்தது. அந்த இடத்தில், இதுவரை எந்த நீதிபதியையும் தமிழக அரசு நியமிக்கவில்லை.நிலுவையில் இருக்கும் வழக்குகள் மற்றும் புகார்களை, கட்டண கமிட்டியின் சிறப்பு சட்ட அதிகாரி மனோகரன் பெற்று வந்தார். அவரும், நேற்றுடன் ஓய்வு பெற்றார்.அவரது இடத்திலும், அதிகாரியை நியமிக்க அரசு நடவடிக்கைஎடுக்காததால், கட்டண கமிட்டி மூடப்படும் அபாயத்தில் இருந்தது.இதுகுறித்து, நமது நாளிதழில் விரிவான செய்தி,மார்ச், 30ல் வெளியானது. இதையடுத்து, பள்ளிக்கல்வி செயலர் தலைமையில், கல்வித்துறை இயக்குனர்கள் அவசரமாக ஆலோசனை நடத்தினர். கல்விகக்கட்டண கமிட்டியின் சிறப்பு அதிகாரி பணியிடத்தில், மெட்ரிக் பள்ளிகள் இணைஇயக்குனர் ஸ்ரீதேவியை பொறுப்பு அதிகாரியாகநியமித்துள்ளனர்.அனுமதி வாங்கவில்லை:தனியார் மெட்ரிக் பள்ளிகள் மற்றும் சி.பி.எஸ்.இ., பள்ளிகள், விதிகளை மீறி அதிகமாக கட்டணம் வசூலிக்கின்றன. அதை, மெட்ரிக் பள்ளிகளுக்கு அங்கீகாரம் அளிக்கும் மெட்ரிக் துறை கட்டுப்படுத்த இயலவில்லை என்பதால் தான், சுயநிதி பள்ளி கல்விக் கட்டண கமிட்டியே சட்டப்படியான ஆணையத்திற்கு இணையாக அமைக்கப்பட்டது.
அப்படிப்பட்ட கமிட்டியில், மெட்ரிக் பள்ளிகளை நிர்வாகம் செய்யும் இணை இயக்குனரை நியமித்தால், பள்ளிகளுக்கு எதிரான புகார்களை முறையாக விசாரிக்க முடியாது என, பெற்றோர் அச்சம் அடைந்துஉள்ளனர்.அதுமட்டுமின்றி சட்டத்துறையில் இருந்து அதிகாரியை நியமிப்பதற்கு பதிலாக கல்வித்துறையில் இருந்து நியமிக்கப்பட்டுள்ளதும், இதற்கு தேர்தல் கமிஷனிடம் அனுமதி வாங்கவில்லை என்றும் சர்ச்சை எழுந்துள்ளது
No comments:
Post a Comment