சென்னையில் பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.2.19–ம், டீசல் லிட்டருக்கு ஒரு ரூபாயும் உயர்ந்தது.
பெட்ரோல் விலை உயர்வு இந்திய எண்ணெய் நிறுவனங்கள் பெட்ரோல், டீசல் விலைகளை மாதம் இருமுறை மாற்றி அமைத்து வருகின்றன. சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெயின் விலை, அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு ஆகியவற்றின் அடிப்படையில் பெட்ரோல், டீசல் விலைகள் மாற்றி அமைக்கப்படுகின்றன.
இதன்படி நேற்று டெல்லியில் பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.2.19–ம், டீசல் விலை லிட்டருக்கு 98 பைசாவும் உயர்த்தப்பட்டது.
சென்னையில் பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.2.19 உயர்ந்து, ஒரு லிட்டர் ரூ.61.32 ஆனது. டீசல் விலை லிட்டருக்கு ஒரு ரூபாய் அதிகரித்து லிட்டர் ரூ.50.49 ஆனது.
முக்கிய நகரங்களில் இதர முக்கிய மாநகரங்களில் பெட்ரோல், டீசல் விலைகள் வருமாறு:–
டெல்லியில் பெட்ரோல் ஒரு லிட்டர் ரூ.59.68–ல் இருந்து ரூ.61.87 ஆகவும், டீசல் ஒரு லிட்டர் ரூ.48.33–ல் இருந்து ரூ.49.31 ஆகவும் ஆனது. மும்பையில் ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.65.79–ல் இருந்து ரூ.67.96 ஆகவும், டீசல் ரூ.55.06–ல் இருந்து ரூ.56.09 ஆகவும் உயர்ந்தது. கொல்கத்தாவில் பெட்ரோல் ஒரு லிட்டர் ரூ.63.76–ல் இருந்து ரூ.65.48 ஆகவும், டீசல் ரூ.50.75–ல் இருந்து ரூ.51.58 ஆகவும் உயர்ந்தது.
நேற்று நள்ளிரவு முதல் இந்த விலை உயர்வுகள் அமலுக்கு வந்தது.
No comments:
Post a Comment