சென்னை: அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கு பாடப்புத்தகங்கள், நோட்டுப் புத்தகங்கள், வண்ணப் பென்சில், காலணிகள் மற்றும் சீருடைகள் வழங்குதல் உட்பட, 14 இலவச திட்டங்களை, தமிழக அரசு செயல்படுத்தி வருகிறது.
இவற்றை, நேரடியாக பள்ளிகள் மூலமே பள்ளிக்கல்வித் துறை அமல்படுத்துகிறது.
பாடம் நடத்தும் ஆசிரியர்களே, இந்த பணிக்கும் பயன்படுத்தப்படுவதால், கல்விப் பணி பாதிக்கப்படுவதாக புகார்கள் எழுந்துள்ளன. இதுபற்றி, தமிழ்நாடு மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் சங்க பொதுக்குழுவிலும் விவாதிக்கப்பட்டது. இந்நிலையில், சங்கத்தின் கிழக்கு சென்னை மாவட்ட தலைவர் வெளியிட்டுள்ள அறிக்கை:
தமிழக அரசு பள்ளிகளில், பள்ளிக்கல்வி அலுவலர் பணியிடம் காலியாக உள்ளது. ஓய்வு பெறுவோருக்கு பதிலாக, புதியவர்கள் நியமிக்கப்படுவதில்லை. அரசின், 14 வகை நலத்திட்டப் பணிகளிலும், ஆசிரியர்களே ஈடுபடுவதால், பல்வேறு சிரமங்கள் ஏற்படுகின்றன. எனவே, இந்த பணிகளை கவனிக்க, மாணவர் நலத்திட்ட அலுவலர் என்ற பெயரில் ஊழியர்களை நியமிக்க வேண்டும். இவ்வாறு, அதில் கூறப்பட்டு உள்ளது.

No comments:
Post a Comment