திண்டுக்கல்:திண்டுக்கல்லில் தொடக்கக்கல்வி பட்டதாரி ஆசிரியர்களுக்கான மாவட்ட மாறுதல் கலந்தாய்வில் காலியிடங்களை அறிவிக்காததால், ஆசிரியர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.நேற்று நடந்த கலந்தாய்வில் இவர்களில் 45 பேர் பங்கேற்றனர். முதலில் அறிவியல் பட்டதாரி ஆசிரியர்களுக்கு காலியிடங்கள் அறிவிக்கப்பட்டன. அதில் முதல் 3 இடங்களை தேர்வு செய்தனர்.
தேர்வு செய்த ஆசிரியர்கள் பணிபுரிந்த இடங்களை அதிகாரிகள் அறிவிக்கவில்லை. அந்த இடங்களை தெரிந்துகொள்வதில் குழப்பம் நீடித்தது. இதனால் மாவட்ட தொடக்க கல்வி அலுவலர் பாண்டியராஜனிடம் ஆசிரியர்கள் முறையிட்டனர். காலிப்பணியிடங்களை அறிவிக்காததால், அடுத்தடுத்த கலந்தாய்வில் பங்கேற்ற ஆசிரியர்கள், அதிருப்தி அடைந்தனர். தொடர்ந்து 4 மணி நேரம் அதிகாரிகளிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். ஆசிரியர் ஆலீஸ் (விளாம்பட்டி) கூறுகையில், ''2007ல் பணியில் சேர்ந்தேன்.
இதுவரை 8 கலந்தாய்வில் பங்கேற்றும் மாறுதல் கிடைக்கவில்லை. இன்று, பாட வாரியாக காலிப்பணியிடங்களை அறிவிப்பதிலும் குளறுபடி நீடித்தது. கணித ஆசிரியர்களுக்கு காலிப்பணியிடங்கள் இல்லை என்பது முன்பே தெரிந்தும், அதை அறிவிக்கவில்லை. கலந்தாய்வில் இடங்களை தேர்வு செய்தவர்கள் பணிபுரியும் இடங்களையும் அறிவிக்கவில்லை,'' என்றார்.
மாவட்ட தொடக்கல்வி அலுவலர் பாண்டியராஜனிடம் கேட்டபோது, “இயக்குனரகம் அறிவுறுத்திய காலிப்பணியிடங்களையே நாங்கள் அறிவிக்க முடியும். அதன்படியே கலந்தாய்வும் நடந்தது,'' என்றார்.வராந்தாவில் கலந்தாய்வுஆசிரியர்கள் சங்க மாவட்ட நிர்வாகி சங்கர் கூறுகையில், அலுவலக வளாகத்தில் உட்காரவைத்து கலந்தாய்வு நடத்துகின்றனர்.
குடிநீர்கூட வழங்கவில்லை,'' என்றார்.
No comments:
Post a Comment