Pages

Tuesday, August 25, 2015

நீதிமன்ற அவமதிப்பு வழக்காகல்வித்துறை எச்சரிக்கை அலறும் கல்விப்பணியாளர்கள்.

யாரேனும் நீதிமன்ற அவமதிப்பு தொடர்ந்தால், வழக்குகளை கவனிக்கும்
பணியாளர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என, கல்வித்துறை எச்சரித்துள்ளது. இதனால் கல்வித்துறை பணியாளர்கள் மன உளைச்சலில் உள்ளனர். கல்வித்துறையில் ஆசிரியர் நியமனம், ஊதிய உயர்வு, பதவி உயர்வு, தகுதித்தேர்வு குறித்த ஏராளமான வழக்குகள் நீதிமன்றங்களில் நிலுவையில் உள்ளன.




இந்த வழக்குகளை முதன்மை கல்வி அலுவலகம், மாவட்ட கல்வி அலுவலகம், மாவட்ட தொடக்க கல்வி அலுவலகம், மெட்ரிக் பள்ளிகள் ஆய்வாளர் அலுவலகத்தில் தனித்தனி உதவியாளர்கள் கவனிக்கின்றனர்.

 அவர்களே நீதிமன்றங்களுக்கு தாக்கல் செய்ய வேண்டிய பதில்களை தயாரிக்கின்றனர். சட்ட நுணுக்கம் சரியாக தெரியாததால் பதில்களை முறையாக தயாரிப்பதில்லை. இதனால் பல வழக்குகளில் கல்வித்துறைக்கு எதிரான தீர்ப்பு வருகின்றன. சிலநேரங்களில் பணிச்சுமையால் பதிலை தாக்கல் செய்வதில்லை. இதனால் அவமதிப்பு வழக்கு தொடரப்பட்டு கல்வித்துறை செயலர், இயக்குனர்கள் நீதிமன்றங்களுக்கு வரவேண்டியுள்ளது. இதையடுத்து யாரேனும் நீதிமன்ற அவமதிப்பு தொடர்ந்தால் வழக்குகளை கவனிக்கும் பணியாளர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என, கல்வித்துறை எச்சரித்துள்ளது.

 இதனால் வழக்குகளை கவனிக்கும் பணியாளர்கள் மனஉளைச்சலில் உள்ளனர். கல்வித்துறை பணியாளர்கள் கூறியதாவது: சட்ட நுணுக்கம் தெரியாததால் நீதிமன்றத்திற்கு பதில் தயாரிக்க முடியாமல் தவிக்கிறோம். அவமதிப்பு வழக்கிற்காக எங்கள் மீது நடவடிக்கை எடுப்பது எந்தவிதத்தில் நியாயம். இப்பிரச்னையை தீர்க்க மாவட்டந்தோறும் கல்வித்துறைக்கென சட்ட அலுவலரை நியமிக்க வேண்டும், என்றனர்.

No comments:

Post a Comment