பொறுப்பு மேற்பார்வையாளர்களாக இருக்கும் மூத்த ஆசிரியர் பயிற்றுநர்களுக்கு பள்ளி செல்லவே விருப்பம் இல்லையாம். அனைவரு்க்கும் கல்வி இயக்கத்தில் பதவி சுகம் கண்டுவிட்டதாலும், பள்ளிக்கு சென்றால் பாடங்கள் எடுக்க வேண்டும் என்ற காரணத்தாலும் பல பேர் இதனை வெறுக்கின்றனராம்.
1. பொறுப்பு மேற்பார்வையாளர்களுக்கு காம்போனன்ட் இல்லை.
2. பயிற்சிகளுக்கு செல்ல தேவையில்லை
3. பயிற்சிகள் கொடுக்கத்தேவையில்லை
4. இவர்களின் பள்ளி பார்வையை ஆய்வு செய்யவும் யாரும் இல்லை.
5. ஆசிரியர் பயிற்றுநர்களை விட மிக சுகமாக இருப்பது பொறுப்பு மேற்பார்வையாளர்கள்தான் என்பது ஒட்டு மொத்த கருத்தாக இருக்கிறது.
6. பொறுப்பு மேற்பார்வையாளர்கள் தற்போது என்ன செய்கிறார்கள் என்றும் அவர்களுடைய மாத சம்பளம் 45000லிருந்து 54000 வரை ஆகிவிட்டதாகவும் மேலும் இவர்கள் இத்திட்டத்தில் இருப்பதால் கூடுதல் செலவும் ஆகிறது எனவும் இவர்களை பள்ளிக்கு மாற்றினால் பெருமளவு பணம் மிச்சமாகும் என இயக்குநர் ஒருவர் அரசுக்கு கூறியுள்ளதாக தகவல்.
சங்கமானது பாடுபட்டு இந்த மாற்றத்தை வாங்கியிருந்தாலும் பொறுப்பு மேற்பார்வையாளர்களால் மேலும் சங்கடங்களை சந்திக்காமல் இருந்தால் சரி. இதற்கு ஒரே தீர்வு கட்டாயமாக பள்ளிக்கு சென்றே ஆகவேண்டும் என்று அரசு ஆணை பிறப்பிக்க வேண்டும்.
No comments:
Post a Comment