Pages

Thursday, August 27, 2015

போட்டியில் ஜெயித்தால் ஜப்பானில் படிக்கலாம்!

பெட்ரோலிய எரிபொருள் சேமிப்பு குறித்து, சிறந்த ஓவியம் வரையும் மற்றும் கட்டுரை எழுதும் மாணவர், ஜப்பான் நாட்டில் மேற்படிப்பு படிக்க, அனைத்து வசதிகளும் செய்து தரப்படும்' என, பெட்ரோலியத்துறை அறிவித்துள்ளது
.

பெட்ரோலிய எரிபொருளை சேமிப்பது குறித்து, மாநில மற்றும் தேசிய அளவில், ஓவியப் போட்டியை, பெட்ரோலிய பாதுகாப்பு ஆராய்ச்சி அமைப்பு நடத்துகிறது. இந்தியா முழுவதும் உள்ள அனைத்து அரசு மற்றும் தனியார் பள்ளி மாணவர்கள் இதில் பங்கேற்கலாம். இதற்கான விவரங்கள், கல்வி அதிகாரிகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.

தமிழ், ஆங்கிலம், இந்தி உட்பட, 23 மொழிகளில் போட்டிகள் நடத்தப்படுகின்றன. போட்டிகளை அந்தந்த பள்ளிகளே நடத்த வேண்டும். அதன் முடிவுகளை பெட்ரோலிய எரிபொருள் பாதுகாப்பு ஆராய்ச்சி அமைப்புக்கு தெரிவிக்க வேண்டும். ஓவியம் மற்றும் கட்டுரைப் போட்டியில் வெற்றி பெறும் தலா, ஒரு மாணவருக்கு, முதல் பரிசாக, 30 ஆயிரம் ரூபாய், ஒரு லேப்டாப் பரிசு வழங்கப்படும். மேலும், அந்த மாணவர்கள் ஜப்பான் நாட்டில் மேற்கல்வி கற்க அனைத்து வசதியும் செய்து தரப்படும். இரண்டாம் பரிசாக, 20 ஆயிரம் ரூபாய்; மூன்றாம் பரிசாக, 12,500 ரூபாய் வழங்கப்படும். இதற்கான விவரங்களை, www.pcra.org என்ற இணையதளத்தில் அறிந்து கொள்ளலாம்.

No comments:

Post a Comment