Pages

Wednesday, August 26, 2015

சி.பி.எஸ்.இ.பள்ளிகளில் சமஸ்கிருத வாரம் :இன்று முதல் கொண்டாட உத்தரவு

       அனைத்து சி.பி.எஸ்.இ., பள்ளிகளிலும், இன்று முதல் செப்., 1ம் தேதி வரை, சமஸ்கிருத வாரம் கொண்டாட, மத்திய இடைநிலை கல்வி வாரியம் உத்தரவிட்டு உள்ளது.இதுதொடர்பாக, சி.பி.எஸ்.இ., பள்ளிகளுக்கு, நேற்று அவசர சுற்றறிக்கை அனுப்பப்பட்டு உள்ளது.


             கட்டுரை, கவிதை, பேச்சு போட்டிகள், நாட்டியம், நாடகம், சமஸ்கிருத ஸ்லோகம் போட்டிகள், சமஸ்கிருத திரைப்படங்கள் வெளியிடுதல், சமஸ்கிருத நிபுணர்கள் மற்றும் அறிஞர்கள் தொடர்பான வினாடி - வினா, இந்திய வளர்ச்சியில் சமஸ்கிருதத்தின் பங்கு என்ற கட்டுரை போட்டி என, பலவித நிகழ்ச்சி கள் நடத்தி, சமஸ்கிருத வாரத்தை கொண்டாட, அனைத்து சி.பி.எஸ்.இ., பள்ளிகளுக்கும் அறிவுறுத்தப்பட்டு உள்ளது.

No comments:

Post a Comment