நிகழ் கல்வியாண்டு செவிலியர் பட்டயப் படிப்பில் 2000 இடங்களுக்கு சேர்க்கை நடைபெறவுள்ளது என மருத்துவக் கல்வி தேர்வுக்குழு அறிவித்துள்ளது.
இதற்கான அறிவிப்பு சுகாதாரத் துறையின் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.
தமிழகத்தில் உள்ள 23 செவிலியர் பள்ளிகளில் உள்ள 2000 இடங்களுக்கு கலந்தாய்வு நடத்துவதற்கு அனுமதி கிடைத்துள்ளது. இதுவரை மூன்றரை ஆண்டுகளாக இருந்த செவிலியர் பட்டயப் படிப்பின் படிப்புக் காலம், இந்த ஆண்டு முதல் 3 ஆண்டுகளாகக் குறைக்கப்பட்டுள்ளது.
இந்தப் படிப்பில் மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வு ஆகஸ்ட் 31, செப்டம்பர் 1,2 ஆகிய தேதிகளில் சென்னை ஓமந்தூரார் பல்நோக்கு சிறப்பு மருத்துவமனையில் நடைபெறவுள்ளது.
இதில் கலந்து கொள்வதற்கான அழைப்புக் கடிதம் தனித்தனியாக ஒவ்வொரு மாணவருக்கும் அனுப்பப்பட்டுள்ளது. அழைப்புக் கடிதம் கிடைக்கப் பெறாத மாணவர்கள் www.tnhealth.org, www.tngov.in ஆகிய இணையதளங்களில் ஆகஸ்ட் 24-ஆம் தேதி முதல் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
கலந்தாய்வில் பங்கேற்கும் மாணவர்கள் "செயலாளர், தேர்வுக்குழு' என்ற பெயரில் ரூ. 200-க்கு எடுக்கப்பட்ட வரைவோலையைச் சமர்ப்பிக்க வேண்டும். மாணவர்கள் தங்களின் அசல் சான்றிதழ்களுடன் கலந்தாய்வில் பங்கேற்க வேண்டும் என்று தேர்வுக்குழு அதிகாரிகள் தெரிவித்தனர்.
No comments:
Post a Comment