இந்த ஆண்டு பதவி உயர்வு, பணியிட மாறுதல் கலந்தாய்வு மூலம், பள்ளிக் கல்வித் துறையில் பணியாற்றும் ஆசிரியர்கள், தலைமை ஆசிரியர்களில் 6,402 பேர் பணியிடமாறுதல் பெற்றுள்ளனர். இதில் 2,307 பட்டதாரி ஆசிரியர்கள், பணி நிரவல் மூலம் பணியிட மாறுதல் செய்யப்பட்டுள்ளனர்.
பள்ளிக் கல்வித் துறையில் பணியாற்றும் மேல்நிலைப் பள்ளித் தலைமை ஆசிரியர்கள், உயர்நிலைப் பள்ளித் தலைமை ஆசிரியர்கள், முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர்கள், பட்டதாரி ஆசிரியர்கள், சிறப்பு ஆசிரியர்களுக்கான இடமாறுதல், பதவி உயர்வுக் கலந்தாய்வு ஆகியவை ஆகஸ்ட் 12-ஆம் தேதி தொடங்கின.
இந்தக் கலந்தாய்வு பட்டதாரி ஆசிரியர் பணி நிரவலோடு ஞாயிற்றுக்கிழமை நிறைவடைந்தது. இந்த ஆண்டு அரசுப் பள்ளிகளில் உபரியாக இருந்த பட்டதாரி ஆசிரியர்களில் 2,307 பேர் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
இடமாறுதல் பெற்ற ஆசிரியர்களின் எண்ணிக்கை விவரம்:
* மேல்நிலைப் பள்ளித் தலைமை ஆசிரியர்கள் (மாவட்டத்துக்குள்) - 265, மாவட்டம் விட்டு மாவட்டம் - 130
* சிறப்பு ஆசிரியர்கள் (மாவட்டத்துக்குள் ) - 327
* மேல்நிலைப் பள்ளித் தலைமை ஆசிரியர்களாக பதவி உயர்வு - 430
* உயர்நிலைப் பள்ளித் தலைமை ஆசிரியர்கள் இடமாற்றம் (மாவட்டத்துக்குள்) - 249
* சிறப்பு ஆசிரியர்கள் (மாவட்டம் விட்டு மாவட்டம்) -157
* உயர்நிலைப் பள்ளித் தலைமை ஆசிரியர்கள் (மாவட்டம் விட்டு மாவட்டம்) - 177
* மேல்நிலைப் பள்ளித் தலைமை ஆசிரியர்களாக பதவி உயர்வு - 330
* முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர்கள் (மாவட்டத்துக்குள்) - 865
* முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர்கள் (மாவட்டம் விட்டு மாவட்டம்) - 570
* முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர்களாக பதவி உயர்வு - 542
* முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர்கள் பணி நியமனம் - 53
* பணி நிரவல் பெற்ற பட்டதாரி ஆசிரியர்கள்:
தமிழ் - 443
ஆங்கிலம் - 451
கணிதம் - 543
அறிவியல் - 570
சமூக அறிவியல் - 300
மொத்தம் - 2,307
* இடமாறுதல் பெற்ற ஆசிரியர்களின் மொத்த எண்ணிக்கை - 6,402.
No comments:
Post a Comment