பாரம்பரிய கலைகளை அறியும் வகையில், பள்ளி மாணவர்கள் இடையே, 'கலை போட்டிகள்' நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இதற்காக, 10 லட்சம் ரூபாய் பரிசுத்தொகையாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் உள்ள ஒவ்வொரு மாநிலத்திற்கும் அடையாளமாக, பாரம்பரிய கலைகள் உண்டு.
கிராமப்புற விழாக்களில் மட்டும் நடந்து வரும் இக்கலைகளை, இளைய தலைமுறையினர் அறியும் வகையில், பள்ளி மாணவர்கள் இடையே இசை, நடனம், நுண்கலை, நாடகம் ஆகியவற்றை பாரம்பரிய கலை போட்டிகளாக நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.
ஒரு போட்டியில், 8 மாணவ, மாணவியர் வீதம் ஒரே பள்ளியைச் சேர்ந்தவர்களாக பங்கேற்க வேண்டும். கல்வி மாவட்ட அளவிலான போட்டிகளை அக்., 31ம் தேதிக்குள்ளும், வருவாய் மாவட்ட அளவிலான போட்டிகளை, அக்., 15ம் தேதிக்குள்ளும் நடத்தி முடிக்க, மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.தேசிய அளவில், முதல் மூன்று இடங்களை பிடிக்கும் பள்ளிகளுக்கு, 5 லட்சம், 3 லட்சம், 2 லட்சம் ரூபாய் பரிசு வழங்கப்பட உள்ளது.
ஏற்பாடுகளை மாநில கல்வி ஆராய்ச்சி நிறுவனம், அனைவருக்கும் இடைநிலைக்கல்வி திட்டம் அதிகாரிகள் செய்து வருகின்றனர்.
No comments:
Post a Comment