தோட்டக்கலைத் துறையில், 183 அலுவலர் பணியிடங்கள் காலியாக இருந்தன; இதை நிரப்ப, இரு ஆண்டுகளுக்கு முன், டி.என்.பி.எஸ்.சி., தேர்வு நடத்தியது. ஆனால், தேர்வு முடிவு அறிவிக்க, சென்னை உயர் நீதிமன்றம் தடை விதித்தது; இந்த தடையை சமீபத்தில், உயர் நீதிமன்றம் ரத்து செய்தது. இதையடுத்து, தேர்வு முடிவுகளை அறிவித்து,
பணியிடங்களை நிரப்ப ஏற்பாடு செய்யுமாறு, தோட்டக்கலைத் துறை மூலம், டி.என்.பி.எஸ்.சி.,க்கு பரிந்துரை செய்யப்பட்டு உள்ளது.தேர்வு பெற்றவர்கள் விவரம், விரைவில் அறிவிக்கப்படும் என, கூறப்படுகிறது.
No comments:
Post a Comment