ஆசிரியர்கள், தலைமையாசிரியர்கள் இடமாறுதல், பதவி உயர்வு கலந்தாய்வு ஞாயிற்றுக்கிழமையோடு நிறைவடைகிறது.பள்ளிக் கல்வித் துறையில் பணியாற்றும் ஆசிரியர்கள், தலைமையாசிரியர்களுக்கான கலந்தாய்வு ஆகஸ்ட் 12-ஆம் தேதி தொடங்கியது.
மேல்நிலைப் பள்ளித் தலைமையாசிரியர்கள், உயர்நிலைப் பள்ளித் தலைமையாசிரியர்கள், முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர்களுக்கான பதவி உயர்வு, இடமாறுதல் கலந்தாய்வு ஆகியவை நடைபெற்று முடிந்தன.பட்டதாரி ஆசிரியர்களுக்கான பணி நிரவல் கலந்தாய்வு கடந்த மூன்று நாள்களாக நடைபெற்று வருகிறது. இதுவரை ஆங்கிலம், கணிதம், அறிவியல் பாட ஆசிரியர்களுக்கான பணி நிரவல் கலந்தாய்வு முடிவடைந்துள்ளது. தமிழ், சமூக அறிவியல் பாடத்துக்கான பணிநிரவல் கலந்தாய்வு ஞாயிற்றுக்கிழமையுடன் நிறைவடைகிறது.மாநிலம் முழுவதும் சனிக்கிழமை நடைபெற்ற கலந்தாய்வில் 578 அறிவியல் பட்டதாரிஆசிரியர்கள் பணி நிரவல் செய்யப்பட்டனர். கடந்த 3 நாள்களில் 1,600 பட்டதாரி ஆசிரியர்கள் பணி நிரவல் செய்யப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
No comments:
Post a Comment