இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர்களுக்கான மாவட்டம் விட்டு மாவட்டம் மாறுதல் கலந்தாய்வு வரும் 29, 30 தேதிகளில் நடைபெறுகிறது. இதுகுறித்து கிருஷ்ணகிரி மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலர் சின்னராஜ், வியாழக்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு: 2015 - 16-ஆம் கல்வி ஆண்டில் ஊராட்சி ஒன்றிய, நகராட்சி, மாநகராட்சி,
அரசு மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் பணிபுரியும் இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசியர்களுக்கான மாவட்டம் விட்டு மாவட்டம் மாறுதல் கலந்தாய்வு இணையதளம் மூலம் கிருஷ்ணகிரி கட்டிகானப்பள்ளி புதூர் வட்டார வளமைய அலுவலக வளாகத்தில் உள்ள மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலகத்தில் நடைபெறவுள்ளது.
வரும் சனிக்கிழமை (ஆக. 29) காலை 9.30 மணிக்கு பட்டதாரி ஆசிரியர்களுக்கான பொது மாறுதல் கலந்தாய்வும், ஞாயிற்றுக்கிழமை (ஆக.30) இடைநிலை ஆசிரியர்களுக்கான பொது மாறுதல் கலந்தாய்வும் நடைபெறுகிறது.
Posted by suresh v
No comments:
Post a Comment