Pages

Tuesday, August 25, 2015

போதிய ஆசிரியர்களை நியமிக்கக் கோரி மாணவர்கள் சாலைமறியல் ஒரு மணிநேரம் போக்குவரத்து பாதிப்பு

உசிலம்பட்டி அருகே போதிய ஆசிரியர்களை நியமிக்கக் கோரி உசிலம்பட்டி–எழுமலை சாலையில் மாணவர்கள் சாலைமறியலில் ஈடுபட்டனர். இதனால் அந்த பகுதியில் ஒரு மணிநேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. பற்றாக்குறைஉசிலம்பட்டி அருகே உள்ளது தாடையம்பட்டி. இந்த ஊரில் அரசு கள்ளர் மேல்நிலைப் பள்ளி உள்ளது. இந்தப் பள்ளியில் 455 மாணவ மாணவிகள் படிக்கின்றனர்.



இங்கு ஒரு தலைமையாசிரியர் உள்பட 17 ஆசிரியர்கள் பணியில் இருக்க வேண்டும். ஆனால் கடந்த பல வருடங்களாக ஒரு தலைமையாசிரியர் 8 ஆசிரியர்கள் மட்டும் பணியில் இருந்து வருகின்றனர். காலியாக உள்ள பணியிடங்களை நிரப்பக்கோரி மாணவர்களும் ஊர் பொதுமக்களும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு பலமுறை கோரிக்கை வைத்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை.

மாறாக வேறு பள்ளிகளிலிருந்து ஆசிரியர்கள், மாற்றுப் பணிக்காக அவ்வப்பொழுது இந்தப் பள்ளிக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். மேலும் 6–ஆம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரை படிக்கும் மாணவ மாணவிகளுக்கு கடந்த 2 ஆண்டுகளாக தமிழ் ஆசிரியரே இல்லை என்று கூறப்படுகிறது. ஆசிரியர் பற்றாக்குறையினால் இங்கு படிக்கும் மாணவ மாணவிகளுக்கு போதிய கல்வி கிடைக்காமல் சிரமப்பட்டு வந்துள்ளனர்.

சாலை மறியல்இந்த நிலையில் நடப்பு கல்வி ஆண்டில் காலாண்டு தேர்வு நடைபெற உள்ள நிலையில், போதிய ஆசிரியர்களை நியமிக்காமல் சந்தப்பட்ட அதிகாரிகள் மெத்தனம் காட்டி வருவதாகவும், இதனால் மாணவ, மாணவிகளின் கல்வித்தரம் மிகவும் பாதிக்கப்படுவதாக கூறி நேற்று திடீரென இந்த பள்ளி மாணவர்கள் உசிலம்பட்டி பேரையூர் சாலையில் உள்ள கோடாங்கிநாயக்கன்பட்டி விலக்கில் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

தகலவறிந்து வந்த எழுமலை போலீஸ் இன்ஸ்பெக்டர் சிவக்குமார், சப்–இன்ஸ்பெக்டர் கணேசன் உள்ளிட்ட போலீசார் பேச்சு வார்த்தை நடத்தினர். இதையடுத்து போலீசார் சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் தொலை பேசியில்பேசினர். அதில் விரைவில் தாடையம்பட்டி கள்ளர் மேல்நிலைப் பள்ளிக்கு போதிய ஆசிரியர்கள் நியமிக்கப்படுவார்கள் என்று கூறியதாக மறியல் செய்த மாணவர்களிடம் கூறப்பட்டது. அதைத்தொடர்ந்து மாணவ, மாணவிகள் மறியலை கைவிட்டனர். இதனால் அந்த பகுதியில் சுமார் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

உசிலம்பட்டி மாவட்ட கல்வி அதிகாரி ராமகிருஷ்ணன், பள்ளி துணை ஆய்வாளர் செல்வம் ஆகியோர் பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் மற்றும் ஊர் பெரியவர்களுடன் பேச்சு வார்த்தை நடத்தினர் அப்பொழுது கள்ளர் சீரமைப்புத்துறை அலுவலகத்தில் பேசியதில் 15 தினங்களுக்குள் இந்தப் பள்ளிக்கு போதிய ஆசிரியர்களை நியமிப்பதாக தெரிவித்தகாக கூறினர்.

No comments:

Post a Comment