Pages

Thursday, August 27, 2015

ஒரே இடத்துக்கு 2 பேர் நியமனம் நீலகிரியில் இடியாப்ப சிக்கல்

          நீலகிரி மாவட்டத்தில், ஒரே இடத்துக்கு, இரண்டு ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டுள்ளதால், யாருக்கு பணி ஒதுக்குவது என்ற குழப்பம் ஏற்பட்டுள்ளது.பட்டதாரி மற்றும் முதுகலை பட்டதாரி ஆசிரியர்களுக்கான விருப்ப மாறுதல் மற்றும் பதவி உயர்வு நடவடிக்கைகள், நேற்று முன்தினம் முடிவுக்கு வந்தன.தஞ்சை மாவட்டத்தில் உள்ள, அரசு மேல்நிலைப்பள்ளி ஒன்றில் பணியாற்றிய முதுகலை ஆசிரியருக்கு, நீலகிரி மாவட்டம், கோத்தகிரி பள்ளிக்கு, 23ம் தேதி பணி இட மாறுதல் வழங்கப்பட்டது.


               அவர் தஞ்சை மாவட்டத்தில் விடுவிப்பு ஆணை பெற்று, நீலகிரி மாவட்ட பள்ளிக்கு சென்ற போது, அங்கு ஆசிரியை ஒருவர் அதே இடத்துக்கு பணி மாறுதல் வாங்கி வந்துள்ளார்.நீலகிரி மாவட்டம் மஞ்சக்கம்பை உயர்நிலை பள்ளியில் பணியாற்றிய அவருக்கு, முதுநிலை ஆசிரியராக பதவி உயர்வு வழங்கப்பட்டு, கோத்தகிரி பள்ளி ஒதுக்கப்பட்டுள்ளது. இந்தக் குழப்பத்தால், இரண்டு பேரில் யாருக்கு பணி வழங்குவது என, அதிகாரிகள் குழப்பத்தில் உள்ளனர்.

No comments:

Post a Comment