ஆசிரியர் தினத்தை முன்னிட்டு அடுத்த மாதம் 4-ஆம் தேதி மாணவர்களிடையே பிரதமர் நரேந்திர மோடி உரையாற்றவிருக்கிறார்.
கடந்த ஆண்டில் ஆசிரியர் தினமான செப்டம்பர் 5-ஆம் தேதியன்று பள்ளி வகுப்புகள் முடிந்த பிறகு மோடி உரை நிகழ்த்தினார். இதனால், மாணவர்கள் சிரமத்துக்கு ஆளானதாக சர்ச்சை எழுந்தது. இந்நிலையில், இந்த ஆண்டில் மோடி உரை நிகழ்த்துவது குறித்து மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சக அதிகாரிகள் வியாழக்கிழமை ஆலோசனை நடத்தினர்.
இதுகுறித்து அதிகாரிகள் கூறியதாவது:
அடுத்த மாதம் 5-ஆம் தேதி ஆசிரியர் தினத்தன்று விடுமுறை நாளாகும். அன்று கோகுலாஷ்டமியும் வருகிறது. எனவே, ஆசிரியர் தினத்துக்கு முந்தைய நாளான, செப்டம்பர் 4-ஆம் தேதி காலை 10 மணிக்கு பிரதமர் உரை நிகழ்த்துவதுடன், மாணவர்களுடனும் கலந்துரையாடுவார். இது ஒரு மணி நேரம் 45 நிமிடங்களுக்கு நீடிக்கும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
No comments:
Post a Comment