Pages

Wednesday, August 26, 2015

தொழிற்கல்வி ஆசிரியர்கள் 3ஆம் கட்ட கவன ஈர்ப்பு போராட்டம் நடத்த முடிவு

      தொழிற்கல்வி ஆசிரியர்கள் கோரிக்கையை வலியுறுத்தி, 3-ஆம் கட்ட கவன ஈர்ப்பு போராட்டம் நடத்த தமிழ்நாடு மேல்நிலைப் பள்ளி தொழிற்கல்வி ஆசிரியர் கழகத்தின் மாநிலப் பொதுக்குழுவில் முடிவு செய்யப்பட்டுள்ளதாக அதன் மாநில பொதுச் செயலர் செ.நா.ஜனார்த்தனன் தெரிவித்தார்.
இதுகுறித்த அவரது அறிக்கை:

சங்கத்தின் மாநில பொதுக்குழுக் கூட்டம் தஞ்சாவூரில் நடைபெற்றது.
இதில் தொகுப்பூதிய காலத்தை கணக்கிட்டு ஓய்வூதியம், பதவி உயர்வில்லா பணியிடங்களுக்குத் தேர்வுநிலை தர ஊதியம் 5,400-க்கான தெளிவுரை, வெவ்வேறு பாடங்களில் உயர்கல்வி பெற்றவர்களுக்கு ஊக்க ஊதிய உயர்வு உள்ளிட்ட 10 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி 3ஆவது கட்ட கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டது.
முதல் கட்டமாக 31 வரை மாவட்ட நிர்வாகிகள்
கோரிக்கை மனுக்களை அஞ்சலில் அனுப்புவது, 2-ஆவது கட்டமாக செப்டம்பர் 1 முதல் 5 வரை அஞ்சல் அட்டை இயக்கம் நடத்துவது, 3-ஆவது கட்டமாக செப்டம்பர் 15-இல் மாநில அளவில் சென்னை பள்ளிக் கல்வி இயக்குநரிடம் பெருந்திரள் முறையீடு செய்வது என தீர்மானிக்கப்பட்டது.
அனைத்து மேல்நிலைப் பள்ளிகளிலும் தொழிற்கல்விப் பாடத்தை கட்டாயமாக்க வேண்டும்.
அனைவருக்கும் இடைநிலைக் கல்வித் திட்டம், மத்திய அரசின் தொழிற்கல்வி திட்டத்தின் கீழ் தொழிற்கல்விப் பாடத்தை உயர்நிலைப் பிரிவிலும், மேல்நிலைப் பிரிவிலும் கட்டாய பாடமாக்க வேண்டும் என்பன உள்ளிட்டத் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

No comments:

Post a Comment