Pages

Thursday, August 27, 2015

தமிழ்நாடு கால்நடை பராமரிப்பு துறையில் 1101 பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன

தமிழ்நாடு கால்நடை பராமரிப்பு துறையில் பல்வேறு பணிகளில் நிரப்பப்பட உள்ள 1101 பணியிடங்களுக்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

1. பணி: கால்நடை ஆய்வாளர் நிலை -2 (பயிற்சி)

காலியிடங்கள்: 294

தகுதி: பிளஸ் 2 தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்

சம்பளம்: மாதம் ரூ.5,200 - 20,200 + தர ஊதியம் ரூ.2,400 மற்றும் இதர சலுகைகள்.

2. பணி: கதரியக்கர் (Radiographer)
காலியிடங்கள்: 24
தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சியுடன் Radiological Assistantகோர்ஸ் முடித்து இருக்க வேண்டும். அத்துடன் இயற்பியல் துறையில் பட்டம் பெற்றவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும்.
சம்பளம்: மாதம் ரூ.5,200 - 20,200 + தர ஊதியம் ரூ.2,800 மற்றும் இதர சலுகைகள்.

3. பணி: ஆயாவக உதவியாளர்
காலியிடங்கள்: 17
தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
சம்பளம்: மாதம் ரூ.4,800 - 10,000 + தர ஊதியம் ரூ.1,400 மற்றும் இதர சலுகைகள்.

4. பணி: ஆய்வுக் கூட தொழில்நுட்பாளர்
காலியிடங்கள்: 02தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சியுடன் மெட்ராஸ் கால்நடை மருத்துவக் கல்லூரி நடத்தும் 12 மாத கால ஆய்வுக் கூட தொழில்நுட்பாளர் கோர்ஸ்ம் முடித்திருக்க வேண்டும்.
சம்பளம்: மாதம் ரூ.5,200 - 20,200 + தர ஊதியம் ரூ.2,400 மற்றும் இதர சலுகைகள்.

5. பணி: மின்னாளர் (Electrician)
காலியிடங்கள்: 03
தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சியுடன் எலக்ட்ரிக்கல் ஒயரிங் டிரேடில் ஐடிஐ அல்லது டிப்ளமோ முடித்து 1 வருட பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
சம்பளம்: மாதம் ரூ.5,200 - 20,200 + தர ஊதியம் ரூ.2,400 மற்றும் இதர சலுகைகள்.
தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். எழுத்துத் தேர்வு அந்தந்த மாவட்ட தலைநகரங்களில் வைத்து நடத்தப்படும்.

6. பணி: அலுவலக உதவியாளர்

காலியிடங்கள்: 36

தகுதி: எட்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

சம்பளம்: மாதம் ரூ.4,800 - 10,000 + தர ஊதியம் ரூ.1,300 மற்றும் இதர சலுகைகள்.

7. பணி: கால்நடை பராமரிப்பு உதவியாளர்

காலியிடங்கள்: 725

தகுதி: எட்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

சம்பளம்: மாதம் ரூ.4,800 - 10,000 + தர ஊதியம் ரூ.1,400 மற்றும் இதர சலுகைகள்.

தேர்வு செய்யப்படும் முறை: நேர்முகத் தேர்வின் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். நேர்முகத் தேர்வு கால்நடை பராமரிப்பு மருத்துவப் பணிகள் இயக்குநரகத்தில் நடைபெறும்.

வயதுவரம்பு: 01.07.2015 தேதியின்படி 18 - 30க்குள் இருக்க வேண்டும். இடஒதுக்கீடு பிரிவினருக்கு அரசுவிதிகளின்படி வயதுவரம்பு தளர்வு அளிக்கப்படும்.

விண்ணப்பக் கட்டணம்: ரூ.100. இதனை இயக்குநர், கால்நடை பராமரிப்பு (ம) மருத்துவப் பணிகள், சென்னை - 6 என்ற பெயரில் சென்னையில் மாற்றத்தக்க வகையில் தேசியமயமாக்கப்பட்ட ஏதாவதொரு வங்கியில் டி.டி.யாக எடுத்து அனுப்ப வேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை: www.tn.gov.in என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து பூர்த்தி செய்து தேவையான சான்றிதழ்கள் சுய சான்று செய்து வங்கி டி,டி. இணைத்து அஞ்சலில் விண்ணப்பிக்க வேண்டும்.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி: 15.09.2015

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி:
The Director, Department of Animal Husbandry and Medical Service, Central Office Building, Block-II, DMS Complex, Chennai - 600006.

மேலும் விண்ணப்பதாரர்களுக்கு எழும் சந்தேகங்களுக்கு முழுமையான விவரங்கள் அறிய www.tn.gov.in என்ற இணையதளத்தை பார்க்கவும்.

No comments:

Post a Comment