Pages

Monday, August 31, 2015

பள்ளிக்கல்வி - பள்ளிகள் 2015/2016 கல்வி ஆண்டிற்கான இரண்டாம் பருவ பாடபுத்தகங்களை "தமிழ்நாடு பாடநூல் கழகம்" இணையதளத்தில் "ONLINE" பதிந்து, புத்தகங்களை பெற்றுக்கொள்ளும் வசதி செய்யப்பட்டுள்ளது - இயக்குனர் செயல்முறைகள்



சம்பளப் பட்டியல் & ஊதிய நிலுவைத் தொகை விவரம் நாமே அறியலாம்.

CHECK YOUR PAY STATUS :-
அகவிலைப்படி ஊதிய நிலுவைத் தொகை பெற்றுவிட்டீர்களா?
அலுவலகத்தைத் தொடர்பு கொண்டால், ஊதியப்பட்டியல் கருவூலத்தில் சமர்ப்பித்துவிட்டோம் என்று இழுத்தடிக்கிறார்களா?
கருவூலத்தில் ஊதியப் பட்டியல் சமர்பிக்கப்பட்டதா?
எந்த நாளில் சம்பளம் வரவு வைக்கப்படும் போன்ற தகவகல்களை நீங்களே இணையத்தில் தெரிந்து கொள்ளலாம்.

1. www.treasury.tn.gov.in/Public/ ecstokenno.aspx என்ற தளத்திற்குச் செல்லவும்.
2. உங்களது மாவட்டத்தினைத் தெரிவு செய்யவும்.
3. Sub treasury ஐத் தெரிவு செய்யவும்.
4. Select branch என்னும் பகுதிக்கு அருகில் உள்ள கட்டத்தில் உங்கள் வங்கியின் MICR code ஐப் பதிவு செய்யவும்.
(உங்கள் காசோலைப் புத்தகத்தில் பார்த்தால் தெரியும்)

5. உங்கள் வங்கிக் கணக்கு எண்ணைப் பதிவு செய்யுங்கள். அவ்வளவு தான் நண்பர்களே!
எந்த தேதியில் உங்கள் அலுவலர் கருவூலத்தில் ஊதியப்பட்டியலைச் சமர்பித்தார்,
எந்த தேதியில் அது காசாக்கப்படும் என அறியலாம்.
மேலும் கடந்த காலத்தில் நீங்கள் பெற்ற ஊதிய விபரங்களையும் அறிய முடியும்.

TET Article : ஆசிரியர் தகுதித்தேர்வர்களுக்கு மனநிம்மதியை தருவது டெல்லி அறவிப்பா? தமிழக அறிவிப்பா? ›

ஆசிரியர் தகுதித்தேர்வு வழக்குகள் :

    2013ம் ஆண்டு தேர்ச்சிப்பெற்ற ஆசிரியர்கள் உச்சநீதிமன்றத்தில் தொடுத்துள்ள வழக்குள் இறுதி விசாரணைக்காக வரும் செப்டம்பர் முதல் தேதியில் வருகிறது. ... இதையொட்டி தமிழக அமைச்சரவையின் பள்ளிக்கல்விததுறையின் மானியக்கோரிக்கையும் செப்டம்பர் 1ம் தேதி வந்துள்ளது இந்நிகழ்வு பெருத்த மாற்றத்தை நிச்சயம் தரும் ... அவ்விதமான நல்ல செய்தி எங்கிருந்து வரப்போகிறது என்று தேர்வர்கள் மிகுந்த எதிர்பார்ப்புடன் உள்ளனர்...

கலந்தாய்வு நிறைவு: 6,402 ஆசிரியர்களுக்கு பணியிட மாறுதல்

இந்த ஆண்டு பதவி உயர்வு, பணியிட மாறுதல் கலந்தாய்வு மூலம், பள்ளிக் கல்வித் துறையில் பணியாற்றும் ஆசிரியர்கள், தலைமை ஆசிரியர்களில் 6,402 பேர் பணியிடமாறுதல் பெற்றுள்ளனர். இதில் 2,307 பட்டதாரி ஆசிரியர்கள், பணி நிரவல் மூலம் பணியிட மாறுதல் செய்யப்பட்டுள்ளனர்.

ஆசிரியர் இடமாறுதல், பதவி உயர்வு கலந்தாய்வ நேற்று நிறைவு.

ஆசிரியர்கள், தலைமையாசிரியர்கள் இடமாறுதல், பதவி உயர்வு கலந்தாய்வு ஞாயிற்றுக்கிழமையோடு நிறைவடைகிறது.பள்ளிக் கல்வித் துறையில் பணியாற்றும் ஆசிரியர்கள், தலைமையாசிரியர்களுக்கான கலந்தாய்வு ஆகஸ்ட் 12-ஆம் தேதி தொடங்கியது. 

சுயநிதி பி.எட். கல்லூரிகள் கல்விக் கட்டணம்: பரிந்துரைகளைச் சமர்ப்பிக்க இன்று கடைசி நாள்

சுயநிதி ஆசிரியர் கல்வியியல் கல்லூரிகள் கல்விக் கட்டணப் பரிந்துரைகளைக் கட்டண நிர்ணயக் குழுவிடம் சமர்ப்பிக்க திங்கள்கிழமை (ஆக. 31) கடைசி நாளாகும்.

செப்டம்பர் மாத நாட்காட்டி- 2015 உயர் நிலை ,மேல்நிலை,தொடக்க ,நடுநிலை பள்ளிகளுக்கான வேலைநாட்கள் பட்டியல் !


செல்லிடப்பேசி முக்கிய எண்கள்... [Mobile Phone Important Codes]...

செல்லிடப்பேசி முக்கிய எண்கள்... [Mobile Phone Important Codes]... !!!

*#06# – அனைத்து மொபைலுக்கும் IMEI எண் பார்க்க 
*#0000# – தயாரிப்பு தேதி பார்க்க
#*2472# –... தங்கள் போனின் சார்ஜிங் நிலைமை அறிய 
*#7780# – பேக்டரி அமைப்பை கொண்டுவர
*8375# – மொபைல் போனில் உள்ள சாப்ட்வேர் தொகுப்பின் பதிப்பு எண் என்று அறிய

மீண்டும் வருகிறது TET வழக்கு !!!


வருமான வரிக் கணக்கை தாக்கல் செய்ய இன்றே கடைசி நாள்

     கடந்த நிதியாண்டுக்கான (2014-15) வருமான வரிக் கணக்கை சம்பளதாரர்கள், ஓய்வூதியதாரர்கள் தாக்கல் செய்வதற்கு திங்கள்கிழமை (ஆகஸ்ட் 31) கடைசி நாளாகும்.

உயர் கல்வியில் சேருபவர்களில் சிறுபான்மையினர் எத்தனை பேர்?

      உயர் கல்வி நிறுவனங்களில் கிறிஸ்தவர்கள், இஸ்லாமியர்கள் உள்ளிட்ட சிறுபான்மையின மாணவர்கள் எத்தனை பேர் படிக்கின்றனர் என்கிற புள்ளி விவரம் வெளியிடப்பட்டுள்ளது.

சுயநிதி பி.எட். கல்லூரிகள் கல்விக் கட்டணம்: பரிந்துரைகளைச் சமர்ப்பிக்க இன்று கடைசி நாள்

  சுயநிதி ஆசிரியர் கல்வியியல் கல்லூரிகள் கல்விக் கட்டணப் பரிந்துரைகளைக் கட்டண நிர்ணயக் குழுவிடம் சமர்ப்பிக்க திங்கள்கிழமை (ஆக. 31) கடைசி நாளாகும்.

கலந்தாய்வு நிறைவு: 6,402 ஆசிரியர்களுக்கு பணியிட மாறுதல்

          இந்த ஆண்டு பதவி உயர்வு, பணியிட மாறுதல் கலந்தாய்வு மூலம், பள்ளிக் கல்வித் துறையில் பணியாற்றும் ஆசிரியர்கள், தலைமை ஆசிரியர்களில் 6,402 பேர் பணியிடமாறுதல் பெற்றுள்ளனர். இதில் 2,307 பட்டதாரி ஆசிரியர்கள், பணி நிரவல் மூலம் பணியிட மாறுதல் செய்யப்பட்டுள்ளனர்.

'டிப்ளமோ நர்சிங்' இன்று கலந்தாய்வு


           இரண்டு ஆண்டு, 'டிப்ளமோ நர்சிங்' படிப்புக்கான கலந்தாய்வு, இன்று துவங்குகிறது. தமிழகத்தில், அரசு மருத்துவக் கல்லுாரிகள் மற்றும் மாவட்ட தலைமை மருத்துவமனைகள் என, 27 இடங்களில், இரண்டு ஆண்டு டிப்ளமோ நர்சிங் படிப்புக்கு, 2,100 இடங்கள் உள்ளன. 

இடைநிலை ஆசிரியர்கள் மாவட்ட மாறுதல் முன்னுரிமைப்பட்டியல்!!!

பள்ளி மாணவர்களுக்கு 4 லட்ச ரூபாய் கடன் அட்டை: நிதிஷ்குமார் அதிரடி திட்டம்

பள்ளி படிப்பை முடித்த அனைவருக்கும் 4 லட்சம் ரூபாய் பெரும் வகையில் கடன் அட்டை வழங்கப்படும் என்று பிகார் முதல்வர் நிதிஷ்குமார் கூறியுள்ளார்.

நாட்டு முன்னேற்றத்திற்கு காரணமான பாடத்திட்டங்கள் அமைய வேண்டும்: யுஜிசி தலைவர்

இன்றய கல்வி, ஒரு தனிப்பட்ட மாணவனின் முன்னேற்றத்திற்கு மட்டும் அல்லாது, நாட்டின் முன்னேற்றத்திற்கும் காரணமான பாடதிட்டங்கள் அமைய வேண்டும் என்று புதுதில்லியில் உள்ள பல்கலைக்கழக மானியக் குழு துணைத் தலைவர் எச்.தேவராஜ் கூறினார்.

பி.எட். கலந்தாய்வு: விண்ணப்பங்கள் எங்கு கிடைக்கும்? விண்ணப்பத்தை சமர்ப்பிக்க செப்.11 கடைசிநாள்

இந்தக் கல்வியாண்டில் (2015-16) பி.எட். படிப்பு சேர்க்கைக்கான விண்ணப்பங்கள் சென்னை விலிங்டன் சீமாட்டி கல்வியியல் மேம்பாட்டு நிறுவனம் உள்பட தமிழகம் முழுவதும் 13 மையங்களில் செப்டம்பர் 3 ஆம் தேதி முதல் விநியோகிக்கப்படுகின்றன. 

காலியிடங்களை தெரிவிக்காமல் கலந்தாய்வு:ஆசிரியர்கள் வாக்குவாதம்

திண்டுக்கல்:திண்டுக்கல்லில் தொடக்கக்கல்வி பட்டதாரி ஆசிரியர்களுக்கான மாவட்ட மாறுதல் கலந்தாய்வில் காலியிடங்களை அறிவிக்காததால், ஆசிரியர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.நேற்று நடந்த கலந்தாய்வில் இவர்களில் 45 பேர் பங்கேற்றனர். முதலில் அறிவியல் பட்டதாரி ஆசிரியர்களுக்கு காலியிடங்கள் அறிவிக்கப்பட்டன. அதில் முதல் 3 இடங்களை தேர்வு செய்தனர்.

'கல்விக்கடன் வட்டி தள்ளுபடி செய்யுங்களேன்!'

'மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அனுமதித்துள்ள, கல்வி கடன் வட்டி தள்ளுபடியை அளிக்க, வங்கிகள் விரைந்து செயல்பட வேண்டும்' என, பெற்றோர் தரப்பில் கோரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது. 'உயர்கல்வி பயில, 2009 ஏப்ரல், 1 முதல், 2014 மார்ச், 31ம் தேதி வரை கல்விக்கடன் பெற்றவர்களுக்கு, நிலுவையில் உள்ள வட்டி தள்ளுபடியை, வங்கிகள் அளிக்க வேண்டும்' என, மனிதவள மேம்பாட்டுத் துறை, இந்திய வங்கிகள் சங்கத்தை வலியுறுத்தி உள்ளது.

கூடுதல் பணிகளுக்கு எதிர்ப்பு:தலைமை ஆசிரியர் போராட முடிவு

காரைக்குடி: 'அரசு நலத்திட்ட பணிகளுடன், கூடுதலாக, 'ஆதார்' அட்டை வழங்கும் பணிகளையும் கவனிக்க வேண்டும்' என, அரசு உத்தரவிட்டுள்ளதற்கு எதிர்ப்பு தெரிவித்து, போராட்டம் நடத்த, தலைமை ஆசிரியர்கள் முடிவு செய்துள்ளனர்.தமிழக அரசு, அரசு மற்றும் அரசு நிதியுதவி பெறும் பள்ளி மாணவர்களுக்கு, இலவச சைக்கிள், 'லேப்-டாப்' உட்பட, 14 வகை நலத்திட்ட உதவிகளை வழங்குகிறது.

சிலபசில் இல்லாத புத்தகங்களை வாங்க நிர்ப்பந்திக்க கூடாது: பள்ளிகளுக்கு எச்சரிக்கை

'பாடத்திட்டத்தில் இல்லாத புத்தகங்களை கூடுதல் விலைக்கு வாங்கி, மாணவர்களின் புத்தகச் சுமையை அதிகரிக்கக் கூடாது' என, பள்ளிகளுக்கு மத்திய அரசு எச்சரித்து உள்ளது.
'புத்தகச் சுமையில்லாமல், மன அழுத்தம் இல்லாமல் மாணவர்களை படிக்க வைக்க வேண்டும்' என, மத்திய அரசு அமைத்த, பேராசிரியர் யஷ்பால் குழு பரிந்துரை செய்துள்ளது. இதற்கான பல முயற்சிகளை மத்திய அரசு எடுத்து வருகிறது.

மாணவியர் விடுதிகளில் விஸ்வரூபம் எடுக்கும் பிரச்னை

அனைவருக்கும் இடைநிலைக்கல்வி திட்டத்தில் செயல்படும் மாணவியர் விடுதிகளில், தொகுப்பூதிய அடிப்படையில், பிளஸ் 2 வரை படித்த பெண்களே வார்டனாக நியமிக்கப்பட்டுள்ளனர். இதனால், தலா, 100 மாணவியர் தங்கியிருக்கும் விடுதியில், அதில் ஏற்படும் பிரச்னைகளை சமாளிக்க முடியாமல் திணறும் நிலை உள்ளது.


கோரிக்கை:ஆசிரியர் கல்வித்தகுதியில், காலமுறை ஊதியத்தில், வார்டன் நியமிக்கப்பட வேண்டும் என, கோரிக்கை எழுந்துள்ளது.தமிழகத்தில் கல்வியில் பின்தங்கிய மாவட்டங்களில், தேர்வு செய்யப்பட்ட, 44 ஒன்றியங்களில், 9, 10ம் வகுப்பு படிக்கும் மாணவியருக்கான விடுதிகள், கடந்த ஆண்டில் துவங்கப்பட்டது. அனைவருக்கும் இடைநிலைக்கல்வி திட்டத்தில் செயல்படும் இவ்விடுதிகளில், அரசு மற்றும் மாதிரிப்பள்ளிகளில் படிக்கும் மாணவியரில், 100 பேர் தங்கிப்படிக்கும் வகையில், ஏற்பாடு செய்யப்பட்டு
உள்ளது.இதில், 15வயது முதல், 17 வயது வரையிலான மாணவியர் தங்கியிருப்பதால், நித்தம் நித்தம் பல்வேறு பிரச்னைகள் உருவாகின்றன. காதல் பிரச்னையில் துவங்கி, ரோமியோக்களின் ஈவ் டீசிங் வரை, மாணவியரின் மனநிலையை பாதிக்கின்றன.

இவ்விடுதிகளில், வார்டனாக, பிளஸ் 2 வரை படித்துள்ள பெண் ஒருவர், தொகுப்பூதிய அடிப்படையில் நியமிக்கப்பட்டுள்ளனர். இவர்கள், 100 பெண்களையும் கவனித்து, அவர்களின் மனநிலை மாற்றம், பிரச்னைகள் ஆகியவற்றை தீர்த்து வைக்கும் தகுதியில்லாததால், கடும் தவிப்புக்கு உள்ளாகின்றனர். ஆசிரியர் கல்வித்தகுதியில், வார்டன் நியமிப்பதுடன், பாதுகாப்பு ஏற்பாடுகளையும் பலப்படுத்த வேண்டும் என, கோரிக்கை எழுந்துள்ளது.

இதுகுறித்து ஆசிரியர்கள் கூறியதாவது:அரசு மாணவியர் விடுதியில், பொதுவாக கூலி வேலைக்கு வெளியூருக்கு செல்வோரும், ஆதரவற்ற குழந்தைகளுமே, தங்கி படிக்கின்றனர்.
வளர் இளம் பருவத்தில் உள்ள மாணவியர், 100 பேரை, தங்க வைத்து பார்த்துக்கொள்வதில், பல்வேறு சிக்கல்கள் உள்ளன. இடைநிலைக் கல்வித்திட்டத்தில் செயல்படும் இவ்விடுதிகளில், ஆசிரியர் கல்வித்தகுதியில் வார்டனை நியமிக்க வேண்டும் என்றே, மத்திய அரசும் வலியுறுத்தி உள்ளது.
தொகுப்பூதியம்:தொகுப்பூதிய அடிப்படையில் நியமிக்கப்படும் பெண்களை, மாணவியரும் பெரிதாக மதிப்பதில்லை. அவர்களால், பிரச்னைகளையும் சமாளிக்க முடிவதில்லை. தொகுப்பூதியம் என்பதால், தன் பணி குறித்த கவலையின்றி, பொறுப்புகளுக்கு உள்ளாவதில்லை.
மேலும் வேலையை விட்டு, அவர்கள் சென்றுவிடுவதாலும், அடிக்கடி வேறு வார்டன் மாறுவதாலும், மாணவியரிடம் வார்டன் குறித்த அலட்சியப்போக்கு அதிகரிக்கிறது.

ஆதிதிராவிடர் நலத்துறை உள்ளிட்டவை நடத்தும் விடுதிகளில் கூட, ஆசிரியர்களே வார்டன்களாக உள்ளது குறிப்பிடத்தக்கது. கட்டுப்பாடுகள் இல்லாததால், திசை மாறும் மாணவியர் ஒரு புறம் இருக்க, கேட்க ஆள் இல்லாமல், விடுதி அருகில், அத்துமீறும் ரோமியோக்களின் தொல்லையும் அதிகரிக்கிறது.மேலும், 100 மாணவியருக்கு தகுந்த வசதிகளை, ஒரு வார்டன் கவனிப்பதும் மிகுந்த சிரமத்தை உருவாக்குகிறது. இதனால், உடல்நலக்குறைவு ஏற்படும் பட்சத்தில், அதை உடனடியாக கவனிக்க முடியாத நிலையும் ஏற்படுகிறது. மத்திய அரசின் திட்ட நிதியில் செயல்படும் இவ்விடுதிகளில், அத்திட்டத்தில் அறிவுறுத்திய படி, ஆசிரியர் கல்வித்தகுதியில், ஒன்றோ அல்லது அதற்கு மேற்பட்வேரையோ வார்டனாக நியமித்து, மாணவியரை பிரச்னைகளில் இருந்து காப்பாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு, அவர்கள் கூறினர்.

அரசு பள்ளி மாணவர்களுக்குஇலவச அறிவியல் சுற்றுலா

அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்களுக்கு, அறிவியல் பாட விழிப்புணர்வை செய்முறை பயிற்சி வழியே ஏற்படுத்த, பல திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன. இதற்கு, மத்திய அரசு நிதி உதவி வழங்குகிறது. 'அனைவருக்கும் கல்வி இயக்ககம்' திட்டத்தில், எட்டாம் வகுப்பு மாணவர்களுக்கு, இலவச அறிவியல் சுற்றுலா ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

டிசம்பருக்குள் மாணவர்களுக்கு லேப் - டாப் வழங்க உத்தரவு

தமிழகத்தில், பள்ளி மாணவர்களுக்கு வழங்கப்படும் இலவச லேப் - டாப்புக்கான செலவுத்தொகை, ஆண்டுக்கு, ஆண்டு எகிறி வரும் நிலையில், சட்டசபை தேர்தல் நெருங்கி வருவதை கருத்தில் கொண்டு, நடப்பாண்டில் டிசம்பர் மாதத்துக்குள், லேப் - டாப் வழங்க அதிகாரிகளுக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் பயிலும் பள்ளி, கல்லுாரி மாணவர்கள்,
தொழில்நுட்ப கல்லுாரி மாணவர்களுக்கு, அரசின் சார்பில் இலவச லேப் -- டாப் வழங்கப்பட்டு வருகிறது. கடந்த, 2011 செப்., 15ல் இத்திட்டத்தை, தமிழக முதல்வர் ஜெயலலிதா, திருவள்ளூர் மாவட்டம் காக்களுரில் துவக்கி வைத்தார். கடந்த, 2011 முதல், 2013 வரை, இத்திட்டத்தில், மாணவர்களுக்கு தங்கு தடையின்றி லேப் - டாப் வழங்கி முடிக்கப்பட்டது. இதில், குறிப்பாக, 2014 - 2015 கல்வி ஆண்டில், 50 சதவீதத்துக்கும் மேலான மாணவ, மாணவியருக்கு, லேப் - டாப் வழங்கப்படவில்லை. இதில் சென்னையில் பயிலும் மாணவர்களுக்கு, 90 சதவீதம் வரை, வழங்கப்பட்ட நிலையில், பிற மாவட்டங்களில் பயிலும் மாணவ, மாணவியருக்கு, 30 சதவீதம் மட்டுமே வழங்கப்பட்டது.

இடைநிலை ஆசிரியர்கள் மாவட்ட மாறுதல் முன்னுரிமைப்பட்டியல்!!!

நிரந்தர பணியிடத்துக்கு பட்டதாரி ஆசிரியர்கள் தேவை : pay - 9300 - 34800 + 4600

இனி தொழிலாளர்களின் குறைந்தபட்ச மாத சம்பளம் ரூ.20 ஆயிரம்: மத்திய அரசு முடிவு!

நாடு முழுவதும் தொழிலாளர்களின் குறைந்தபட்ச மாத சம்பளமாக மாநிலங்களுக்கு ஏற்ப 20 ஆயிரம் ரூபாய் வரை நிர்ணயிக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இது தொடர்பாக தொழிற்சங்கங்களுடன் பேச்சு நடத்தி, பதில் அளிக்க கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. 

Saturday, August 29, 2015

அதிர்ச்சியில் பொறுப்பு மேற்பார்வையாளர்கள்....6 வார காலத்திற்குள் பள்ளிக்கு இடம் மாற்ற கோர்ட் ஆணையா?

பொறுப்பு மேற்பார்வையாளர்களாக இருக்கும் மூத்த ஆசிரியர் பயிற்றுநர்களுக்கு பள்ளி செல்லவே விருப்பம் இல்லையாம். அனைவரு்க்கும் கல்வி இயக்கத்தில் பதவி சுகம் கண்டுவிட்டதாலும், பள்ளிக்கு சென்றால் பாடங்கள் எடுக்க வேண்டும் என்ற காரணத்தாலும் பல பேர் இதனை வெறுக்கின்றனராம்.

அனைவருக்கும் கல்வி இயக்கம் - ஆசிரியர் பயிற்றுனர்களுக்கு விரைவில் பட்டதாரி ஆசிரியர்களாக பதிவு மூப்பின் அடிப்படையில் பணி மாறுதல் - முதல்வரின் தனிப்பிரிவில் பெறப்பட்ட தகவல்



மாணவர் சேர்க்கையில் எஸ்.எம்.எஸ்., வசதி

சென்னை : பி.எட்., படிப்பில், இன்ஜினியரிங் படித்தவர்களும் சேர, இந்த ஆண்டு முதல், அனுமதி வழங்கப்பட்டு உள்ளது. இந்த ஆண்டு பி.எட்., படிப்புக்கு மட்டுமே, ஒற்றைச் சாளர முறையில் மாணவர் சேர்க்கை நடத்தப்படுகிறது. எம்.எட்., படிப்புக்கு அந்தந்த கல்லுாரிகளே மாணவர்களை சேர்த்து கொள்ள அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
விண்ணப்ப பரிசீலனைக்கு பின், தேர்வானவர்கள் கலந்தாய்வுக்கு வர, இந்த ஆண்டு முதல் முறையாக, எஸ்.எம்.எஸ்., அனுப்பப்பட உள்ளது.

மாணவியருக்கு புது 'நாப்கின்'

பள்ளி மாணவியர், வளர் இளம் பெண்களுக்கு இலவசமாக வழங்கப்படும் 'நாப்கின்' வடிவமைப்பில் மாற்றம் கொண்டு வர, சுகாதாரத்துறை முடிவு செய்து உள்ளது.

பி.இ., பட்டதாரிகள் பி.எட்., படிக்க அனுமதி ஆசிரியர் பணி யாருக்கு என்பதில் குளறுபடி

பி.எட்., படிப்பில், இன்ஜினியரிங் படித்தவர்களும் சேர, இந்த ஆண்டு முதல், அனுமதி வழங்கப்பட்டு உள்ளது. அதனால், கலை, அறிவியல் பட்ட தாரிகளிடம் குழப்பம் ஏற்பட்டுள்ளது. பி.இ., முடித்தவர்களுக்கு, ஆசிரியர் பணி வழங்க முடியுமா என்ற சந்தேகமும் எழுந்துள்ளது.

காலாண்டு தேர்வு 14ம் தேதி துவக்கம்

அரசுப் பள்ளிகளில், 14ம் தேதி முதல், காலாண்டுத் தேர்வை நடத்தி, 26ம் தேதிக்குள் முடிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. தேர்வு அட்டவணை, மாவட்ட தொடக்கக் கல்வி மற்றும் மாவட்ட கல்வி அதிகாரிகளால் பள்ளிக்கு அனுப்பப்படும் என, அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
சமச்சீர் கல்வித் திட்டம் அமல்படுத்தி இருக்கும், தனியார் பள்ளிகளில் வரும், 7ம் தேதி, முதல் பருவத் தேர்வான, காலாண்டுத் தேர்வு துவங்குகிறது; 22ம் தேதி முடிவடைகிறது.

டி.என்.பி.எஸ்.சி., தேர்வு 2 ஆண்டுக்கு பின் முடிவு


தோட்டக்கலைத் துறையில், 183 அலுவலர் பணியிடங்கள் காலியாக இருந்தன; இதை நிரப்ப, இரு ஆண்டுகளுக்கு முன், டி.என்.பி.எஸ்.சி., தேர்வு நடத்தியது. ஆனால், தேர்வு முடிவு அறிவிக்க, சென்னை உயர் நீதிமன்றம் தடை விதித்தது; இந்த தடையை சமீபத்தில், உயர் நீதிமன்றம் ரத்து செய்தது. இதையடுத்து, தேர்வு முடிவுகளை அறிவித்து,

சான்று கிடைக்குமா, இல்லையா? தவிக்கின்றனர் மாணவர்கள்

பெற்றோரின் வருமானச் சான்றிதழ் பெற முடியாததால், பள்ளி, கல்லுாரி மாணவர்கள், கல்வி உதவித்தொகை பெறுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. எனவே, பள்ளி, கல்லுாரிகளில், வருமான சான்று வழங்கும் முகாம் நடத்த வேண்டும் என்ற கோரிக்கை எழுந்து உள்ளது.

அரசு மருத்துவக் கல்லூரிக்கு ஆசிரியர் தம்பதி உடல் தானம்

சிவகங்கை அரசு மருத்துவக்கல்லுாரி மாணவர்களின் படிப்பிற்கு உதவ, அரசு பள்ளி ஆசிரியர் தம்பதியர் உடல் தானம் செய்தனர்.சிவகங்கை காளையார்கோவில் அருகிலுள்ள மரக்காத்துார் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி ஆசிரியர் பெஞ்சமின்,45. இவரது மனைவி சகாயமேரி,39. இவரும், செவல் புஞ்சை அரசு பள்ளியில் ஆசிரியை. 

பள்ளியில் மொபைல் போன் வைத்திருந்தால் சஸ்பெண்ட்! தலைமை ஆசிரியர்களுக்கு சி.இ.ஓ., உத்தரவு

பள்ளிக்கு மொபைல் போன் கொண்டு வரும் மாணவரை 'சஸ்பெண்ட்' செய்ய தலைமை ஆசிரியர்களுக்கு மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரி உத்தரவிட்டுள்ளார். கடலுார் மாவட்டம் கல்வி மற்றும் பொருளாதாரத்தில் மிகவும் பின்தங்கியுள்ளது. இந்நிலையில் மாவட்டத்தில், பள்ளிகளில் மாணவர்களுக்கிடையே ஜாதிய அடிப்படையில் ஏற்பட்ட மோதலைத் தொடர்ந்து இரு சமுதாயத்தினருக்கிடையே மோதலாகும் சூழல் உருவானது. 

கல்விக்கடன் வட்டி தள்ளுபடி! மாணவர்களுக்கு கடைசி வாய்ப்பு

வங்கிகளில், 2009 ஏப்., 1 முதல், 2014 மார்ச் 31ம் தேதி வரை, கல்விக்கடன் பெற்றவர்களுக்கு, வட்டித்தொகையை அரசு தள்ளுபடி செய்தது. ஆனால், வட்டி தள்ளுபடி அளிக்க வங்கிகள் மறுப்பதாகஏராளமான புகார்கள் வந்தன.

2015 - BT TEACHER - DISTRICT TRANSFER ONLINE COUNSELLING SENIORITY LIST [ Tentative ] - REVISED

பள்ளிக்கல்வி : 21.06.2012 -ல் நியமனம் பெற்ற 192 கணினி பயிற்றுனர்களை முறைப்படுத்தி ஆணை.



ஆசிரியர் பதவி உயர்வு கவுன்சிலிங்கில் மாற்றுத்திறனாளிகளுக்கு 3 சதவீதம் இடஒதுக்கீடு உண்டா? தமிழக அரசுக்கு ஐகோர்ட்டு கேள்வி

சென்னை ஐகோர்ட்டில் ஆசிரியர் ஒருவர் பொதுநல மனு ஒன்றை தாக்கல் செய்தார். அந்த மனுவில், ‘தலைமை ஆசிரியர் பதவி உயர்வுக்கான கவுன்சிலிங் கடந்த ஏப்ரல் மாதம் நடந்தது. இதில் ஏராளமான ஆசிரியர்கள் கலந்துக் கொண்டுள்ளனர்.மாற்றுத்திறனாளிகளுக்கு வேலை வாய்ப்பு மற்றும் பதவி உயர்வின்போது மொத்த இடங்களில் 3 சதவீதம் ஒதுக்கீடு செய்ய வேண்டும் என்று சட்டம் உள்ளது.

Friday, August 28, 2015

சமூகநலத்துறை - G.O MS : 53 - புரட்சித்தலைவர் M.G.R சத்துணவுத் திட்டம் மற்றும் ஒருங்கிணைத்த குழந்தை வளர்ச்சி மையங்களில் பணிபுரியும் பணியாளர்களுக்கு பொது வருங்கால வைப்புநிதி திட்டம்(GPF) தொடங்க அரசானை வெளியீடு



வேலூரில் செப்டம்பர் 3-இல் பள்ளி மாணவர்களுக்கான கேரம் போட்டி

தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் வேலூர் மாவட்டப் பிரிவின் சார்பில், பள்ளி மாணவ, மாணவிகளுக்கான மாவட்ட அளவிலான கேரம் போட்டி வேலூரில் செப்டம்பர் 3-இல் நடைபெறுகிறது.

மாணவர்கள் இல்லாமல் மூடும் நிலைக்கு தள்ளப்பட்ட பள்ளியில் தற்போது 16 மாணவர்கள்


நாகை மாவட்டம், வேதாரண்யம் அருகே அரை நூற்றாண்டை கடந்த அரசுப் பள்ளி 2 ஆண்டுகளுக்கு முன்பு ஒரு மாணவர்கூட இல்லாத நிலையில், மூடும் நிலைக்கு தள்ளப்பட்டது.

பள்ளி அருகில் உள்ள மதுக்கடையை மூட உயர்நீதிமன்றம் உத்தரவு சிவகாசி அருகே மாரனேரியில் பள்ளி அருகே உள்ள டாஸ்மாக்


மதுக்கடையை உடனடியாக மூட சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்கிளை வியாழக்கிழமை உத்தரவிட்டது.

இடைநிலை, பட்டதாரி ஆசிரியர்களுக்கான மாவட்ட மாறுதல் கலந்தாய்வு நாளை தொடக்கம்

இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர்களுக்கான மாவட்டம் விட்டு மாவட்டம் மாறுதல் கலந்தாய்வு வரும் 29, 30 தேதிகளில் நடைபெறுகிறது. இதுகுறித்து கிருஷ்ணகிரி மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலர் சின்னராஜ், வியாழக்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு: 2015 - 16-ஆம் கல்வி ஆண்டில் ஊராட்சி ஒன்றிய, நகராட்சி, மாநகராட்சி,

ஆசிரியர் தினம்: செப்.4-ஆம் தேதி மோடி உரை

ஆசிரியர் தினத்தை முன்னிட்டு அடுத்த மாதம் 4-ஆம் தேதி மாணவர்களிடையே பிரதமர் நரேந்திர மோடி உரையாற்றவிருக்கிறார்.
 கடந்த ஆண்டில் ஆசிரியர் தினமான செப்டம்பர் 5-ஆம் தேதியன்று பள்ளி வகுப்புகள் முடிந்த பிறகு மோடி உரை நிகழ்த்தினார். இதனால், மாணவர்கள் சிரமத்துக்கு ஆளானதாக சர்ச்சை எழுந்தது. இந்நிலையில், இந்த ஆண்டில் மோடி உரை நிகழ்த்துவது குறித்து மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சக அதிகாரிகள் வியாழக்கிழமை ஆலோசனை நடத்தினர்.

செவிலியர் பட்டயப் படிப்பு: 31-இல் கலந்தாய்வு

நிகழ் கல்வியாண்டு செவிலியர் பட்டயப் படிப்பில் 2000 இடங்களுக்கு சேர்க்கை நடைபெறவுள்ளது என மருத்துவக் கல்வி தேர்வுக்குழு அறிவித்துள்ளது.
 இதற்கான அறிவிப்பு சுகாதாரத் துறையின் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

மழலையர் பள்ளிகளுக்கான புதிய விதிமுறைகள் ஒரு வாரத்துக்குள் அமல்படுத்தப்படும்: ஐகோர்ட்டில் அரசு தகவல்

சென்னை வில்லிவாக்கத்தை சேர்ந்தவர் வக்கீல் பாலசுப்பிரமணியன். இவர், ஐகோர்ட்டில் ஒரு பொதுநல மனு தாக்கல் செய்தார். அந்த மனுவில், ‘தமிழகத்தில்760 மழலையர் பள்ளிகள் முறையான அனுமதி எதுவும் பெறாமல் செயல்படுகின்றன.இந்த பள்ளிகள் பெற்றோரிடம் இருந்து பெரும் தொகையை கல்வி கட்டணமாக வசூலிக்கின்றன. 

ஆசிரியர் பதவி உயர்வு கவுன்சிலிங்கில் மாற்றுத்திறனாளிகளுக்கு 3 சதவீதம் இடஒதுக்கீடு உண்டா? தமிழக அரசுக்கு ஐகோர்ட்டு கேள்வி

சென்னை ஐகோர்ட்டில் ஆசிரியர் ஒருவர் பொதுநல மனு ஒன்றை தாக்கல் செய்தார். அந்த மனுவில், ‘தலைமை ஆசிரியர் பதவி உயர்வுக்கான கவுன்சிலிங் கடந்த ஏப்ரல் மாதம் நடந்தது. இதில் ஏராளமான ஆசிரியர்கள் கலந்துக் கொண்டுள்ளனர்.மாற்றுத்திறனாளிகளுக்கு வேலை வாய்ப்பு மற்றும் பதவி உயர்வின்போது மொத்த இடங்களில் 3 சதவீதம் ஒதுக்கீடு செய்ய வேண்டும் என்று சட்டம் உள்ளது.

அன்பாசிரியர் - சித்ரா: அஞ்சல் அட்டை முதல் யூடியூப் வரை அசத்தும் ஆசிரியை!

"பெரிய அளவில் பணம் சம்பாதிப்பதற்குப் பதிலாக, பெரிய மாற்றத்தை விதைக்க ஆசைப்பட்டேன். அதனாலேயே ஆசிரியர் ஆனேன்!"- தகவல் மற்றும் தகவல் தொடர்பு தொழில்நுட்பத்தில் சாதித்ததற்காக குடியரசுத் தலைவரிடம் தேசிய விருது, அப்துல் கலாமின் பாராட்டு, மைக்ரோசாப்ட்டின் உலகளாவிய மன்ற, தேசத்தின் சாதனையாளர் விருது, நல்லாசிரியர் விருது மற்றும் ஏராளமான தேசிய, மாநில, ஊரக விருதுகள் பெற்ற சித்ரா என்னும் அரசுப் பள்ளி ஆசிரியரின் வார்த்தைகள் இவை.

ஈராசிரியர் பள்ளிகள் பதிவை கொண்டு ஓராசிரியர் பள்ளியாக மாற்றக் கூடாது.(RTI) தகவல் .



ஸ்மார்ட் சிட்டி திட்ட தமிழகத்தில் 12 நகரங்கள் தேர்வு

ஸ்மார்ட் நகரங்கள் என்றால் அனைத்து விதமான கட்டமைப்பு- பொருளாதார, நிதி, சமுதாய மற்றும் உள்கட்டமைப்பு, நவீன தொழில்நுட்பத்தை பயன்படுத்தி நகர மக்களின் வாழ்க்கை
தரத்தை உயர்த்துவதற்கான திட்டமாகும்.

வேலூர் மாவட்ட பட்டதாரி மற்றும் இடைநிலை ஆசிரியர்களுக்கு இணையதளவழியில் மாவட்ட மாறுதல்---கலந்தாய்வு அட்டவணை மற்றும் நடைபெறும் இடம்!!


ALM-SCIENCE Traning fr upper primary trs.


பாடவேளை குறைவால் கட்டாய மாறுதல்? சமூக அறிவியல் ஆசிரியர்கள் கலக்கம்


நீங்களும் கல்விக் கடன் பெறலாம் !

      உயர் கல்வி பெறுவதற்கு போதிய பண வசதி இல்லாத மாணவர்களும், கல்வி பயில வேண்டும் என்பதன் அடிப்படையில் உருவாக்கப்பட்டதே இந்த கல்விக் கடன் வாய்ப்பாகும்.
உயர் கல்வி பயிலும் அனைத்து மாணவர்களும் இந்த கல்விக் கடனைப் பெற முயற்சிக்கலாம். கல்விக் கடன் பெற முயற்சிக்கும் மாணவர்கள் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில், அங்கீகரிக்கப்பட்ட பாடப்பிரிவை தேர்வு செய்ய வேண்டியது மிகவும் அவசியமாகும்.

Thursday, August 27, 2015

SSA- PART TIME INSTRUCTORS- DEPLOYMENT WITH IN DISTRICT - UPPER PRIMARY BASED ON TOTAL NO OF STUDENT IN (6-8)



தமிழ்நாடு கால்நடை பராமரிப்பு துறையில் 1101 பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன

தமிழ்நாடு கால்நடை பராமரிப்பு துறையில் பல்வேறு பணிகளில் நிரப்பப்பட உள்ள 1101 பணியிடங்களுக்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

1. பணி: கால்நடை ஆய்வாளர் நிலை -2 (பயிற்சி)

காலியிடங்கள்: 294

தகுதி: பிளஸ் 2 தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்

சம்பளம்: மாதம் ரூ.5,200 - 20,200 + தர ஊதியம் ரூ.2,400 மற்றும் இதர சலுகைகள்.

2. பணி: கதரியக்கர் (Radiographer)
காலியிடங்கள்: 24
தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சியுடன் Radiological Assistantகோர்ஸ் முடித்து இருக்க வேண்டும். அத்துடன் இயற்பியல் துறையில் பட்டம் பெற்றவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும்.
சம்பளம்: மாதம் ரூ.5,200 - 20,200 + தர ஊதியம் ரூ.2,800 மற்றும் இதர சலுகைகள்.

3. பணி: ஆயாவக உதவியாளர்
காலியிடங்கள்: 17
தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
சம்பளம்: மாதம் ரூ.4,800 - 10,000 + தர ஊதியம் ரூ.1,400 மற்றும் இதர சலுகைகள்.

4. பணி: ஆய்வுக் கூட தொழில்நுட்பாளர்
காலியிடங்கள்: 02தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சியுடன் மெட்ராஸ் கால்நடை மருத்துவக் கல்லூரி நடத்தும் 12 மாத கால ஆய்வுக் கூட தொழில்நுட்பாளர் கோர்ஸ்ம் முடித்திருக்க வேண்டும்.
சம்பளம்: மாதம் ரூ.5,200 - 20,200 + தர ஊதியம் ரூ.2,400 மற்றும் இதர சலுகைகள்.

5. பணி: மின்னாளர் (Electrician)
காலியிடங்கள்: 03
தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சியுடன் எலக்ட்ரிக்கல் ஒயரிங் டிரேடில் ஐடிஐ அல்லது டிப்ளமோ முடித்து 1 வருட பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
சம்பளம்: மாதம் ரூ.5,200 - 20,200 + தர ஊதியம் ரூ.2,400 மற்றும் இதர சலுகைகள்.
தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். எழுத்துத் தேர்வு அந்தந்த மாவட்ட தலைநகரங்களில் வைத்து நடத்தப்படும்.

6. பணி: அலுவலக உதவியாளர்

காலியிடங்கள்: 36

தகுதி: எட்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

சம்பளம்: மாதம் ரூ.4,800 - 10,000 + தர ஊதியம் ரூ.1,300 மற்றும் இதர சலுகைகள்.

7. பணி: கால்நடை பராமரிப்பு உதவியாளர்

காலியிடங்கள்: 725

தகுதி: எட்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

சம்பளம்: மாதம் ரூ.4,800 - 10,000 + தர ஊதியம் ரூ.1,400 மற்றும் இதர சலுகைகள்.

தேர்வு செய்யப்படும் முறை: நேர்முகத் தேர்வின் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். நேர்முகத் தேர்வு கால்நடை பராமரிப்பு மருத்துவப் பணிகள் இயக்குநரகத்தில் நடைபெறும்.

வயதுவரம்பு: 01.07.2015 தேதியின்படி 18 - 30க்குள் இருக்க வேண்டும். இடஒதுக்கீடு பிரிவினருக்கு அரசுவிதிகளின்படி வயதுவரம்பு தளர்வு அளிக்கப்படும்.

விண்ணப்பக் கட்டணம்: ரூ.100. இதனை இயக்குநர், கால்நடை பராமரிப்பு (ம) மருத்துவப் பணிகள், சென்னை - 6 என்ற பெயரில் சென்னையில் மாற்றத்தக்க வகையில் தேசியமயமாக்கப்பட்ட ஏதாவதொரு வங்கியில் டி.டி.யாக எடுத்து அனுப்ப வேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை: www.tn.gov.in என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து பூர்த்தி செய்து தேவையான சான்றிதழ்கள் சுய சான்று செய்து வங்கி டி,டி. இணைத்து அஞ்சலில் விண்ணப்பிக்க வேண்டும்.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி: 15.09.2015

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி:
The Director, Department of Animal Husbandry and Medical Service, Central Office Building, Block-II, DMS Complex, Chennai - 600006.

மேலும் விண்ணப்பதாரர்களுக்கு எழும் சந்தேகங்களுக்கு முழுமையான விவரங்கள் அறிய www.tn.gov.in என்ற இணையதளத்தை பார்க்கவும்.

TRB : முதுகலை பட்டதாரி ஆசிரியர் காலி பணியிடங்களுக்கான போட்டி தேர்வு விரைவில் அறிவிப்பு....


அரசு ஊழியர்களுக்கு எட்டு மாதம் பிரசவ விடுமுறை - மத்திய அமைச்சர் கோரிக்கை


தொடக்கப்பள்ளி தலைமையாசிரியர், பட்டதாரி ஆசிரியர், பட்டதாரி தலைமையாசிரியராக பணிப்புரிந்த காலத்தினையும் கணக்கில்கொண்டு தொடக்கப்பள்ளி தலைமையாசிரியர் பதவியில் "தேர்வுநிலை" அனுமதித்து ஆணை - ஆலந்தூர் கூடுதல் உதவித் தொடக்கக் கல்வி அலுவலரின் செயல்முறைகள்


POST CONTINUANCE ORDERS

ஓணம் பண்டிகையை முன்னிட்டு சென்னை கல்வி மாவட்டத்திற்கு நாளை (28.08.2015) விடுமுறை - செயல்முறைகள்


உங்களை தேடி வருகிறது இசை, ஓவிய கல்வி மையம்

'தமிழகம் முழுவதும், அரசு மற்றும் தனியார் கல்வி அமைப்புகள் மற்றும் சபாக்கள் மூலம், 250 இடங்களில் நேரடி இசை, ஓவிய கல்வி மையங்கள் அமைக்கப்படும்' என, தமிழ்நாடு இசை மற்றும் கவின்கலைப் பல்கலை அறிவித்துள்ளது.

போட்டியில் ஜெயித்தால் ஜப்பானில் படிக்கலாம்!

பெட்ரோலிய எரிபொருள் சேமிப்பு குறித்து, சிறந்த ஓவியம் வரையும் மற்றும் கட்டுரை எழுதும் மாணவர், ஜப்பான் நாட்டில் மேற்படிப்பு படிக்க, அனைத்து வசதிகளும் செய்து தரப்படும்' என, பெட்ரோலியத்துறை அறிவித்துள்ளது

புத்தகத் திருவிழாவில் மாணவர் கலைப் போட்டி:ரூ.1,000 - ரூ.5,000 பரிசு வெல்லலாம்

மதுரை புத்தகத் திருவிழாவில் மாணவர் களின் கலைத்திறனை ஊக்குவிக்கும் வகையில் நடக்கும் போட்டிகளில், வெற்றி பெறும் மாணவர்கள் ரூ.1,000 முதல் ரூ.5,000 வரை புத்தகங்களை பரிசாக வெல்லலாம். புத்தகத்திருவிழா மதுரை தமுக்கம் மைதானத்தில் நாளை (ஆக., 28) துவங்கி செப்., 7 வரை நடக்கிறது. 

பள்ளி மாணவர்களுக்கான பாரம்பரிய கலை போட்டிகள்

பாரம்பரிய கலைகளை அறியும் வகையில், பள்ளி மாணவர்கள் இடையே, 'கலை போட்டிகள்' நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இதற்காக, 10 லட்சம் ரூபாய் பரிசுத்தொகையாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் உள்ள ஒவ்வொரு மாநிலத்திற்கும் அடையாளமாக, பாரம்பரிய கலைகள் உண்டு. 

அரசு வேலைக்காக காத்திருப்போர் எண்ணிக்கை... 86 லட்சம்! : நான்கு ஆண்டுகளில், 1.81 லட்சம் பேருக்கு அரசு வேலை - வேலை வாய்ப்பு துறை அமைச்சர் மோகன்

தமிழகத்தில், வேலை வாய்ப்பு மையங்களில் பதிவு செய்து, அரசு வேலை வாய்ப்புக்காக, 86 லட்சம் பேர் காத்திருக்கின்றனர். வேலை வாய்ப்பு அலுவலகங்களில், அரசு வேலைக்காக மனுக்கள் குவிந்து வருகின்றன.

மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி 6 சதவீதம் உயர்த்தப்படவுள்ளது;

 அடுத்த மாதம் நடைபெறவுள்ள அமைச்சரவை கூட்டத்தில் முடிவு
மத்திய அரசு ஊழியர்களுக்கு ஆண்டுதோறும் ஜனவரி மற்றும் ஜூலை மாதங்களில் அகவிலைப்படி உயர்வு வழங்கப்பட்டு வருகிறது. அதே போல் இந்த ஆண்டும் ஜூலை மாதத்திற்கு உரிய அகவிலைப்படி 6 சதவீதம் உயர்த்த மத்திய அரசு முடிவு செய்துள்ளது.

அரசு தொழிற் பயிற்சி நிலையங்களில் ஒன்பது புதிய தொழில் பிரிவுகள்


         எட்டு அரசு தொழிற் பயிற்சி நிலையங்களில், வேலைவாய்ப்பை ஏற்படுத்தித் தரும் 9 புதிய தொழில் பிரிவுகள் தொடங்கப்படும் என்று தொழிலாளர்-வேலைவாய்ப்புத் துறை அமைச்சர் ப.மோகன் தெரிவித்தார்.சட்டப் பேரவையில் அந்தத் துறையின் மானியக் கோரிக்கை மீது புதன்கிழமை நடைபெற்ற விவாதங்களுக்கு அமைச்சர் மோகன் பதிலளித்து வெளியிட்ட அறிவிப்பு:

ஒரே இடத்துக்கு 2 பேர் நியமனம் நீலகிரியில் இடியாப்ப சிக்கல்

          நீலகிரி மாவட்டத்தில், ஒரே இடத்துக்கு, இரண்டு ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டுள்ளதால், யாருக்கு பணி ஒதுக்குவது என்ற குழப்பம் ஏற்பட்டுள்ளது.பட்டதாரி மற்றும் முதுகலை பட்டதாரி ஆசிரியர்களுக்கான விருப்ப மாறுதல் மற்றும் பதவி உயர்வு நடவடிக்கைகள், நேற்று முன்தினம் முடிவுக்கு வந்தன.தஞ்சை மாவட்டத்தில் உள்ள, அரசு மேல்நிலைப்பள்ளி ஒன்றில் பணியாற்றிய முதுகலை ஆசிரியருக்கு, நீலகிரி மாவட்டம், கோத்தகிரி பள்ளிக்கு, 23ம் தேதி பணி இட மாறுதல் வழங்கப்பட்டது.

பெற்றோர் 'ஆதார்' மூலம் குழந்தைகளுக்கும் பதிவு!

பெற்றோர் ஆதார் அட்டை நகல் மூலம், மாணவர்களுக்கு, ஆதார் அட்டை முகாம் நடத்த, பள்ளி கல்வித்துறை நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.

Wednesday, August 26, 2015

7 வது ஊதியக்குழு பரிந்துரைகள் சமர்ப்பிக்க காலக்கெடு டிசம்பர் 31 வரை நீடிப்பு

48 லட்சம் மத்திய அரசு ஊழியர்களின் சம்பளத்தையும், 55 லட்சம் ஓய்வூதியதாரர்களின் ஓய்வூதியத்தையும் மாற்றி அமைப்பதற்காக நீதிபதி ஏ.கே. மாத்தூர் தலைமையில் 7–வது சம்பள கமிஷனை முந்தைய மன்மோகன் சிங் அரசு அமைத்தது.

கணினி பயிற்றுனர்களுக்கு மாறுதல் கலந்தாய்வு கிடையாது -RTI Letter

பள்ளிக்கல்வி - 4 முதல் 9 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு "எரிசக்தி சேமிப்பு" ஓவியப் போட்டி - முதல் பரிசு ரூ.20000/- வழிகாட்டுதல்கள் - இயக்குனர் செயல்முறைகள்

பொது விடுமுறை - 2015ம் ஆண்டு ஓணம் பண்டிகையை முன்னிட்டு கோயம்புத்தூர் மாவட்ட அரசு அலுவலங்கள், கல்வி நிறுவனங்களுக்கு 28.08.2015 அன்று உள்ளூர் விடுமுறை அறிவித்து உத்தரவு


அகஇ - 28 & 29 அன்று ஹைதராபாத் - இல் நடைபெறவுள்ள பணிமனையில் கலந்துக்கொள்ளும் மேற்ப்பார்வையாளர்களை விடுவித்து அனுப்ப திட்ட இயக்குனர் உத்தரவு - மேற்ப்பார்வையாளர் பட்டியல் வெளியீடு - இயக்குனர் செயல்முறைகள்

TRB:ஆசிரியர் தேர்வு வாரியம்-RTI Letter


பள்ளிக்கல்வி - பணி நிரவல் செய்வதற்கான புதிய விண்ணப்ப படிவம்


SEPTEMBER DIARY...

September Diary :HS&HrSec
9- Grievance day
15-Sama ubakarma (RL)
17-Vinayagar sathurthi (RL)
19 to 25 -First term exam
23-Arabath (RL)
24-Pakrith (GH)
26 to Oct 4-
I st Term Holidays
September Diary :ELEMENTARY
5- Grievance day(AEEO)
15-Sama ubakarma (RL)
17-Vinayagar sathurthi (RL)
14 to 25 -First term exam
23-Arabath (RL)
24-Pakrith (GH)
26 to Oct 4-
I st Term Holidays

வாழ்ந்த போது ஒரு மனிதருக்கு அஞ்சல் தலை வெளியிடப்பட்ட முதல் பெருமை அன்னை தெரசாவுக்கு மட்டுமே உரியது - அன்னை தெரசா பிறந்த நாள் ஆகஸ்டு 26

தொண்டின் மறு உருவம் அன்னை தெரசா

ஆதரவற்றோருக்கு பற்றுக்கோடாகத் திகழ்ந்த அன்னை தெரசா, மனிதக் குலத்துக்குக் கிடைத்த பேரருளாளராகப் போற்றப்படுகிறார்.

மத்திய அரசு ஊழியர்களுக்கான 7–வது சம்பள கமிஷன் அறிக்கை அடுத்த மாதம் தாக்கல் நீதிபதி ஏ.கே. மாத்தூர் அறிவிப்பு

       48 லட்சம் மத்திய அரசு ஊழியர்களின் சம்பளத்தையும், 55 லட்சம் ஓய்வூதியதாரர்களின் ஓய்வூதியத்தையும் மாற்றி அமைப்பதற்காக நீதிபதி ஏ.கே. மாத்தூர் தலைமையில் 7–வது சம்பள கமிஷனை முந்தைய மன்மோகன் சிங் அரசு அமைத்தது. 10 ஆண்டுகளுக்கு ஒரு முறை இப்படி சம்பள கமிஷன் அமைப்பது வழக்கமான ஒன்றாகும்.

10ம் வகுப்பு மாணவர்களுக்கு பாதிப்பு

          கல்வித்துறையில், 3,000 பட்டதாரி ஆசிரியர்களுக்கு, பணி நிரவல் என்ற பெயரில், இன்று பணிமாறுதல் வழங்கப்பட உள்ளது. அதனால், 10ம் வகுப்பு மாணவர்கள் கடுமையாக பாதிப்பட வாய்ப்பு உள்ளதாக, ஆசிரியர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

வருமான வரிக் கணக்கு தாக்கல்: நாளை முதல் சிறப்பு கவுன்ட்டர்கள்

      தமிழகம் உள்பட இந்தியா முழுவதும் நிதியாண்டு 2014-15-ஆம் ஆண்டுக்கான வருமான வரிக் கணக்கை சம்பளதாரர்கள் தாக்கல் செய்ய, வரும் 31-ஆம் தேதி கடைசி நாள் என வருமான வரித் துறை தெரிவித்துள்ளது.இதுதொடர்பாக வருமான வரித் துறையின் சார்பில் வெள்ளிக்கிழமை வெளியிடப்பட்ட அறிக்கை:

மாணவர்கள் தமிழ் வாசித்தால் ரூ.50 ஆயிரம் பரிசு

     அனைத்து மாநிலங்களிலும், அந்தந்த மாநில மொழியை ஊக்குவிக்க, மத்திய அரசின் அனைவருக்கும் கல்வி இயக்ககமான, சர்வ சிக்ச அபியான் - எஸ்.எஸ்.ஏ., திட்டத்தில் பரிசு வழங்கப்பட உள்ளது. 

அரசுப் பள்ளிகளில் சுகாதாரக் குழு அமைக்கப்படுமா?

     மாணவர்களிடம் சுகாதாரம் குறித்த விழிப்புணர்வை உருவாக்கும் நோக்கிலும், தனி மனித ஒழுக்கம் வளரும் விதத்திலும், அரசுப் பள்ளிகளில் சுகாதாரக் குழுக்கள் ஏற்படுத்த வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தொழிற்கல்வி ஆசிரியர்கள் 3ஆம் கட்ட கவன ஈர்ப்பு போராட்டம் நடத்த முடிவு

      தொழிற்கல்வி ஆசிரியர்கள் கோரிக்கையை வலியுறுத்தி, 3-ஆம் கட்ட கவன ஈர்ப்பு போராட்டம் நடத்த தமிழ்நாடு மேல்நிலைப் பள்ளி தொழிற்கல்வி ஆசிரியர் கழகத்தின் மாநிலப் பொதுக்குழுவில் முடிவு செய்யப்பட்டுள்ளதாக அதன் மாநில பொதுச் செயலர் செ.நா.ஜனார்த்தனன் தெரிவித்தார்.
இதுகுறித்த அவரது அறிக்கை:

பிளஸ் 2 துணை தேர்வு சான்றிதழ் வினியோகம்

           

சி.பி.எஸ்.இ.பள்ளிகளில் சமஸ்கிருத வாரம் :இன்று முதல் கொண்டாட உத்தரவு

       அனைத்து சி.பி.எஸ்.இ., பள்ளிகளிலும், இன்று முதல் செப்., 1ம் தேதி வரை, சமஸ்கிருத வாரம் கொண்டாட, மத்திய இடைநிலை கல்வி வாரியம் உத்தரவிட்டு உள்ளது.இதுதொடர்பாக, சி.பி.எஸ்.இ., பள்ளிகளுக்கு, நேற்று அவசர சுற்றறிக்கை அனுப்பப்பட்டு உள்ளது.

Tuesday, August 25, 2015

பள்ளிக்கல்வி - 01/08/2015 நிலவரப்படி உபரிப்பணி இடங்களை பணி நிரவல் செய்ய இயக்குனர் உத்தரவு - செயல்முறைகள்



பி.டி.எஸ்., சீட் எண்ணிக்கை உயர்த்தப்படும்

பல் மருத்துவக் கல்லுாரியில், நாற்பதாக உள்ள பி.டி.எஸ்., சீட் எண்ணிக்கை நுாறாக உயர்த்தப்படும் என, முதல்வர் ரங்கசாமி பேசினார். கோரிமேடு மகாத்மாகாந்தி அரசு பல் மருத்துவ கல்லுாரியில், முதலாமாண்டு வகுப்பு துவக்க விழா நேற்று நடந்தது. கல்லுாரி டீன் ரமேஷ் வரவேற்றார். சேர்மன் டாக்டர் லுாயி கண்ணையா தலைமை தாங்கினார். ஜெயபால் எம்.எல்.ஏ., வாழ்த்தி பேசினார். முதலாமாண்டு வகுப்பை முதல்வர் ரங்கசாமி குத்துவிளக்கேற்றி துவக்கி வைத்தார். முதலாமாண்டு மாணவர்கள் 40 பேருக்கு சேர்க்கை ஆணை வழங்கி முதல்வர் ரங்கசாமி பேசியதாவது:

தமிழகம் முழுவதும் பணி நிரவல் பட்டியலில் உள்ள ஆசிரியர்களின் எண்ணிக்கை மூவாயிரத்திலிருந்து ஆயிரமாக குறைக்கப்பட வாய்ப்பு!

தற்போது பள்ளிக்கல்விதுறையில் மே மாதம் நடத்தப்பட வேண்டிய பணி நிரவலை ஆசிரியர்களின் குடும்பம் மற்றும் பள்ளி மாணவர்களின் நலன் கருதி அறவே ரத்து செய்திட நமது மாநிலத்தலைவர் கு.தியாகராஜன் தலைமையிலான மாநில பொறுப்பாளர்கள் முயற்சி மேற்கொண்டு வருகிறார்கள் . இந்தக்கோரிக்கையை தொடர்ந்து வலியுறுத்தி வரும் அதே நேரத்தில்

நமது தொடர் முயற்சியின் பலனாக தமிழகம் முழுவதும் பணி நிரவல் பட்டியலில் உள்ள  ஆசிரியர்களின் எண்ணிக்கை மூவாயிரத்திலிருந்து ஆயிரமாக குறைக்கப்பட இருப்பதாக அறிகிறோம்....

பொதுப்படையாக ஆசிரியர் மாணவர் விகிதத்தை கடந்தவாரம் 1: 35 என்ற அடிப்படையில் ஆயத்த வேளையில் பள்ளிக்கல்வித்துறை ஈடுபட்டிருந்த வேளையில் நமது சங்கம் கொடுத்த நெருக்கடியின் காரணமாக  1:30 என்று கணக்கிட இயக்குனர் உத்தரவிட  நாம் அழுத்தம் கொடுத்ததன் விளைவாக  குறைந்த பட்சமாக 1: 25 என்ற அளவில் குறைத்திட இயக்குனரிடம் தினமும் பேசி வருகிறோம். இதன் பயனாக இந்தக்கோரிக்கை குறித்து பரிசீலிக்க முழு முயற்சி எடுப்பதாக தெரிவித்துள்ளார் .

மேலும் சொந்த மாவட்டத்திற்குள்ளாகவே மட்டுமே பணி நிரவல் செய்யப்பட வேண்டும் . என்று கோரிக்கை விடுத்துள்ளதன் பலனாக மாவட்டம் விட்டு மாவட்டம் பணி நிரவல் அறவே இருக்காது என்கிற உறுதியை உங்களுக்கு தெரிவித்துக்கொள்கிறோம்,

பணி நிரவலை காரணம் காட்டி உங்களது பெயரை நிரவல் பட்டியலில் இருந்து நீக்கிவிடுவதாக கூறி மாவட்ட அலுவலக மட்டத்தில் உங்களிடம் பணம் பறிக்கும் வேலையை சில கல்வித்துறை தரகர்கள் செய்வதாக அறிகிறோம்.

மாவட்ட அளவில் உங்களின் பெயரை நீக்கவோ சேர்க்கவோ யாருக்கும் அதிகாரம் இல்லை என்பதோடு இது சார்ந்து இயக்குனர் அவர்களிடம் தொடர்ந்து பேசிவருவதால் தற்போது பட்டியலில் இருக்கும் ஆசிரியர்களின் எண்ணிக்கை வெகுவாக குறைக்கப்படஇருக்கிறது மேலும் இந்தாண்டு பணி நிரவல் என்பது பெரும்பாலான ஆசிரியர்களுக்கு பாதகம் ஏற்படுத்தாத வண்ணம் மிகக்குறைந்த ஆசிரியர்களுக்கே மட்டும் நடந்திட அனைத்து முயற்சிகளையும் நமது சங்கம் செய்து வருகிறது
என்பதை உங்களுக்கு தெரிவித்துக்கொள்கிறோம்.
எனவே இது சார்ந்து யாரிடமும் பணம் கொடுத்து ஏமாற வேண்டாம் என அன்புடன் எச்சரிக்கிறோம் .......

நேயமுடன்...
பொதுப்பணியில்
கு.தியாகராஜன் - மாநிலத்தலைவர்
தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்கம்

போதிய ஆசிரியர்களை நியமிக்கக் கோரி மாணவர்கள் சாலைமறியல் ஒரு மணிநேரம் போக்குவரத்து பாதிப்பு

உசிலம்பட்டி அருகே போதிய ஆசிரியர்களை நியமிக்கக் கோரி உசிலம்பட்டி–எழுமலை சாலையில் மாணவர்கள் சாலைமறியலில் ஈடுபட்டனர். இதனால் அந்த பகுதியில் ஒரு மணிநேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. பற்றாக்குறைஉசிலம்பட்டி அருகே உள்ளது தாடையம்பட்டி. இந்த ஊரில் அரசு கள்ளர் மேல்நிலைப் பள்ளி உள்ளது. இந்தப் பள்ளியில் 455 மாணவ மாணவிகள் படிக்கின்றனர்.

நீதிமன்ற அவமதிப்பு வழக்காகல்வித்துறை எச்சரிக்கை அலறும் கல்விப்பணியாளர்கள்.

யாரேனும் நீதிமன்ற அவமதிப்பு தொடர்ந்தால், வழக்குகளை கவனிக்கும்
பணியாளர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என, கல்வித்துறை எச்சரித்துள்ளது. இதனால் கல்வித்துறை பணியாளர்கள் மன உளைச்சலில் உள்ளனர். கல்வித்துறையில் ஆசிரியர் நியமனம், ஊதிய உயர்வு, பதவி உயர்வு, தகுதித்தேர்வு குறித்த ஏராளமான வழக்குகள் நீதிமன்றங்களில் நிலுவையில் உள்ளன.

அகஇ - 100% வாசித்தல் திறன் பெற்ற பள்ளிகளுக்கு ஊக்கத்தொகை - இயக்குனர் செயல்முறைகள்

பள்ளிக்கல்வி - பெற்றோர் ஆசிரியர் கழகத்தின் மூலம் வெளியிடப்படும் செய்தி இதழில் வெளியிட மாணவர்கள் படைப்புகளை வரவேற்று இயக்குனர் செயல்முறைகள்

பள்ளிக்கல்வி - பெற்றோர் ஆசிரியர் கழகத்தின் மூலம் வெளியிடப்படும் செய்தி இதழில் மாணவர்கள் படைப்புகள் வெளியிட மாவட்ட வாரியாக அட்டவணை வெளியீடு

தமிழக பள்ளிக்கல்வித் (தொ.க.து-க்கும்) துறையால் தொடர் மற்றும் முழுமையான மதிப்பீட்டு முறையின்படி கல்விசார் & கல்வி

இணைச்செயல்பாடுகளில் மாணவர்களின் கற்றல் அடைவினை மதிப்பிட்டுத் தரநிலைப்படுத்தும் பணியில் பராமரிக்க வேண்டிய பதிவேடுகளாக அரசால் அறிவுறுத்தப்பட்டவை 4 மட்டுமே!

SABL - குறித்து RTI - 2005 இல் பெறப்பட்ட தகவல்

அங்கன்வாடி பயிற்சிக்கு ரூ.3.31 கோடி

           ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி மேம்பாட்டு திட்டப்படி, அங்கன்வாடி பணியாளர்கள் மற்றும் உதவியாளர்களுக்கு சிறப்பு பயிற்சி அளிக்க, 3.31 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது.இந்த திட்டத்திற்கு, 2013 - 14ல், 3.02 கோடி; 2014 - 15ல், 3.31 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டது. 

இந்திய ரூபாய் அச்சடிக்கும் செலவீனம்

ரூபாய் நோட்டுகளை அச்சடிக்க எவ்வளவு செலவாகிறது தெரியுமா?

7 th PAY COMMISSION : எழாவது ஊதியக்குழு பரிந்துரைக்கு முன்பே 15.79% சம்பள உயர்வு அறிவித்த அமைச்சர்


தமிழக கால்நடை துறையில் 1180 பணியிடங்கள்

தமிழக கால்நடை பராமரிப்புத் துறையில் 1180 பணியிடங்கள் அறிவிக்கப்பட்டு உள்ளன. 8-ம் வகுப்பு படித்தவர்கள், 12-ம் வகுப்பு முடித்தவர்கள் இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்கலாம்.இது பற்றிய விரிவான விவரம் வருமாறு:-

100% தேர்ச்சிக்காக மாணவர்களை பள்ளிகள் கட்டாய தோல்வி அடையச் செய்கின்றனவா? அரசு பதிலளிக்க உத்தரவு

பள்ளிகளில் 100 சதவீத தேர்ச்சிக்காக ஒன்பதாம் வகுப்பில் சுமாராகப் படிக்கும் மாணவர்களை கட்டாயமாக தோல்வியடையச் செய்வதாகக் கூறப்படும் புகார் குறித்து அரசு பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்ற மதுரைக்கிளை திங்கள்கிழமை உத்தரவிட்டது.

மாவட்டக் கல்வி அலுவலர் பதவி; நிரப்பப்படாத 75 பணியிடங்கள்: தலைமை ஆசிரியர்கள் புகார்

மாவட்டக் கல்வி அலுவலர், மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் அளவிலான 75 காலிப் பணியிடங்கள் பல மாதங்களாக நிரப்பப்படாமலேயே உள்ளதாக தலைமையாசிரியர்கள் புகார் தெரிவித்தனர்.

பள்ளிகளை கட்டுப்படுத்த எத்தனை இயக்குனரகம்?

'தமிழகத்தில், சமச்சீர் கல்விச் சட்டம் அமலுக்கு வந்தாலும், ஐந்துக்கும் மேற்பட்ட இயக்குனரகங்களால், பள்ளிகள் ஒழுங்கின்றி செயல்படுகின்றன. எனவே, ஒரே இயக்குனரகம் கொண்டு வர வேண்டும்' என, தனியார் பள்ளி அதிபர்களும், பெற்றோரும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தமிழக பள்ளி ஆசிரியருக்கு தகவல் தொழில்நுட்ப விருது

மத்திய அரசின் தகவல் தொழில்நுட்ப கற்பித்தல் விருதுக்கு, உத்திரமேரூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி ஆசிரியர் அன்பழகன், தேர்வு செய்யப்பட்டுள்ளார். அவர், அடுத்த மாதம், 5ம் தேதி, ஜனாதிபதியிடம் விருது பெறுகிறார்.மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை சார்பில், தகவல்தொடர்பு மற்றும் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி கற்பிக்கும் சிறந்த ஆசிரியர்களுக்கு, 2010 முதல் ஆண்டுதோறும், தகவல் தொழில்நுட்ப கற்பித்தல் விருது வழங்கப்படுகிறது. இந்த விருதை, தமிழகத்தில் இதுவரை, ஐந்து ஆசிரியர்கள் பெற்றுள்ளனர்.கடந்த, 2014 - 15ம் ஆண்டிற்கான விருதுக்கு, தமிழகம், இமாச்சல பிரதேசம், கர்நாடகா, உத்தரகண்ட், அரியானா, ம.பி., மற்றும் டில்லி மாநிலங்களின், ஒன்பது ஆசிரியர்கள் தேர்வாகியுள்ளனர்.

தலைமை ஆசிரியர் பணி கலந்தாய்வு யாருமே விரும்பாத அரசுப்பள்ளிகள்

ராமநாதபுரம்:தலைமை ஆசிரியர் பணி கலந்தாய்வின்போது ராமநாதபுரம் மாவட்டத்தில் 12 அரசு மேல்நிலைப்பள்ளிகளை தேர்வு செய்ய, யாரும் முன்வரவில்லை.ஆசிரியர்களுக்கு மாறுதல், பதவி உயர்வு கலந்தாய்வு சமீபத்தில் நடந்தது. ராமநாதபுரம் மாவட்டத்தில் வேதாளை, ரெட்டையூரணி, புதுமடம், பெரியபட்டினம், எஸ்.பி.பட்டினம், சனவேலி, திருவாடானை, தொண்டி அரசு ஆண்கள் மற்றும் மகளிர் மேல்நிலைப்பள்ளிகள், மங்களக்குடி, பாண்டுகுடி, ஆர்.எஸ்.மங்கலம், திருப்பாலைக்குடி அரசு மேல்நிலைப்பள்ளிகளில் தலைமை ஆசிரியர் பணியிடம் காலியாக உள்ளதாக தெரிவிக்கப்பட்டது.இப்பணியிடங்களை நிரப்ப ஆக., 12ல் மாவட்டத்திற்குள் மற்றும் மாவட்டம் விட்டு மாவட்டம் மாறுதல் மற்றும் ஆக., 14ல் பதவி உயர்வு கலந்தாய்வு நடந்தது. 

முதுநிலை ஆசிரியர் பணியிடங்கள் விரைவில் வருகிறது அறிவிப்பு

திண்டுக்கல்:முதுநிலை ஆசிரியர்களுக்கான புதிய பணியிடங்கள் விரைவில் அறிவிக்கப்பட உள்ளன.இலவச 'லேப்டாப்,' சைக்கிள், உதவித்தொகை போன்ற நலத்திட்டங்களால் அரசு பள்ளிகளில் பிளஸ் 1 ல் மாணவர்கள் சேர்க்கை 10 சதவீதம் அதிகரித்துள்ளது. இதனால் முதுநிலை ஆசிரியர்களுக்கு பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. இதையடுத்து ஒவ்வொரு மாவட்டத்திலும் மாணவர்களின் எண்ணிக்கைக்கு தகுந்தாற்போல் தேவையுள்ள ஆசிரியர்கள், பணியிட விபரங்களை பள்ளிக் கல்வித்துறை கேட்டு பெற்றுள்ளது.
அதில் ஒவ்வொரு மாவட்டத்திலும் தலா 25 முதல் 50 பணியிடங்கள் தேவையுள்ளதாக அறிக்கை அனுப்பப்பட்டுள்ளது. இப்பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு சட்டசபையில் கல்வித்துறை மானியக் கோரிக்கையில் வெளியிடப்படும் என, எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் இப்பணியிடங்கள் டி.ஆர்.பி., மூலம் நிரப்பப்பட உள்ளன.

பள்ளிகளில் ஆய்வுக்குழு அரசுக்கு 'நோட்டீஸ்'

மதுரை:பத்தாம் வகுப்பு தேர்ச்சிக்காக, ஒன்பதாம் வகுப்பு மாணவர்களை தோல்வியடையச் செய்வது குறித்து பள்ளிகளில் ஆய்வு செய்ய, சிறப்புக்குழு அமைக்கக் கோரி தாக்கலான வழக்கில், அரசுக்கு, 'நோட்டீஸ்' அனுப்ப, உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டு உள்ளது. 

இன்ஜி., கல்லூரி அங்கீகாரம் ஏ.ஐ.சி.டி.இ., புது முடிவு

இன்ஜினியரிங் மற்றும் தொழில்நுட்ப கல்லுாரிகளுக்கு, அங்கீகாரம் வழங்கும் முறையில் மாற்றம் கொண்டு வர, அகில இந்திய தொழில்நுட்பக் கல்விக் கவுன்சிலான - ஏ.ஐ.சி.டி.இ., முடிவு செய்துள்ளது. பொறியியல் மற்றும் முதுகலை பொறியியல் படிப்புகளை நடத்தும், நாட்டில் உள்ள அனைத்து தொழில்நுட்பக் கல்லுாரிகளும், ஏ.ஐ.சி.டி.இ.,யில், அங்கீகாரம் பெற வேண்டும். அங்கீகாரம் இல்லாத கல்லுாரிகள், மாணவர்களை சேர்க்க முடியாது. 

குரூப் - 2 தேர்வில் முதல் 10 இடங்களில் பி.இ., பட்டதாரிகள் வணிகவரித்துறை துணை ஆணையர் பதவி ஒதுக்கீடு

சென்னை:தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையமான, டி.என்.பி.எஸ்.சி., நடத்திய குரூப் -- 2 தேர்வில், நான்கு லட்சம் பேர் பங்கேற்றதில், முதல், 10 இடங்களில், பி.இ., பட்டதாரிகள் பிடித்துள்ளனர்.முதன்மை தேர்வுகுரூப் - 2வில் இடம்பெறும் வணிகவரித் துறை துணை ஆணையர், சார் - பதிவாளர் உள்ளிட்ட, 19 பதவிகளில், 1,130 காலியிடங்களுக்கான முதல்நிலை போட்டித்தேர்வு, 2013 டிசம்பரில் நடந்தது; அதில், 4.19 லட்சம் பேர் எழுதினர்; 11,497 பேர் தேர்ச்சி பெற்று, கடந்த ஆண்டு நவம்பரில், முதன்மை தேர்வு எழுதினர்.இதில், 5,635 பேர் தேர்ச்சி பெற்றனர்; மார்ச் மாதம், சான்றிதழ் சரிபார்ப்பு நடந்தது; 2,266 பேர் நேர்முகத் தேர்வுக்கு தகுதி பெற்றனர். அவர்களில், 2,222 பேருக்கு, பணி நியமன கலந்தாய்வு நேற்று துவங்கியது.

Monday, August 24, 2015

டி.என்.பி.எஸ்.சி.,குருப் - II கலந்தாய்வு தேதி மாற்றம்

ஓணம் பண்டிகையை முன்னிட்டு வரும் ஆகஸ்ட் 28 அன்று சென்னை மாவட்டத்திற்கு உள்ளூர்  விடுமுறையாக அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே, அன்று நடைபெறவிருந்த ஒருங்கிணைந்த குடிமைப்பணிகளுக்கான தேர்வு- II, 2013-2014ல் அடங்கிய பதவிகளுக்கான கலந்தாய்வு ஆகஸ்ட் 29ம் தேதியில் நடைபெறும்.

பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை - பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் மாணவர்களுக்கான "கல்வி உதவித்தொகை "விண்ணப்பிக்கும் வழிமுறைகள் - செயல்முறைகள்

7979 POSTS -AZ CONTINUATION ORDER FOR AUGUST-2015

வேலூர் மாவட்டத் தொடக்கக் கல்வி List of Holidays...


வட்டார வள மைய மேற்பார்வையாளரின் பொறுப்புகள் - RTI தகவல் நாள் : 17/08/2015

B.Ed Syllabus: ஆசிரியர் கல்வியில் 'சிலபஸ்' இழுபறி. பி.எட்., படிப்பு மாணவர் சேர்க்கை ரத்தாக வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.


சமச்சீர் பாடத்திட்ட பிரச்னையை போல், பி.எட்., பாடத்திட்டத்திலும் குளறுபடி ஏற்பட்டுள்ளது. அதனால், இந்த ஆண்டு, பி.எட்., மாணவர் சேர்க்கை நடக்குமா அல்லது ரத்தாகுமா என்ற குழப்பம் உருவாகி உள்ளது.

முப்பருவ சமச்சீர் முறை அனைத்து மாநிலங்களிலும் பின்பற்றப்படுமா? மத்திய அரசு ஆய்வு!


தமிழகத்தில், பள்ளி மாணவர்களின் புத்தகச்சுமையை குறைக்க, தமிழக அரசு மேற்கொள்ளும் முறையை, அனைத்து மாநிலங்களும் பின்பற்ற, மத்திய அரசு விரைவில் அறிவுறுத்த உள்ளது. மத்திய மனித வள மேம்பாட்டு துறை அமைச்சர் ஸ்மிருதி இரானி தலைமையில், கல்வி தொடர்பான மத்திய ஆலோசனை குழு கூட்டம், டில்லியில் நேற்று நடைபெற்றது. அனைத்து மாநில கல்வி அமைச்சர்களும் பங்கேற்ற அந்த கூட்டத்தில் எடுக்கப்பட்ட முக்கிய முடிவுகளாவன.

SSA திட்டத்தில் இல்லாத பள்ளிகளுக்கும் மூன்று ஆசிரியர்கள் நியமிக்க வேண்டும்!

மாணவர்களின் நலன் கருதி, கல்வி உரிமை சட்டத்தை பின்பற்றி, அரசு நடுநிலை பள்ளிகளில் கூடுதல் ஆசிரியர் நியமிக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.சர்வ சிக்ஷா அபியான் (எஸ்.எஸ்.ஏ.,) திட்டத்தில் இருந்த அரசு துவக்கப்பள்ளிகள்,நடுநிலை பள்ளிகளாக தரம் உயர்த்தப்பட்டன.

மாணவர்களின் ஆங்கில அறிவினை வளர்க்க உதவும் Educational Softwares:

1. Beans word game:

LSRW எனப்படும் (Listening) கவனித்தல், (Speaking) பேசுதல், (Reading) படித்தல் 
மற்றும் (Writing) எழுத்துதல் திறனை வளர்க்க உதவுகிறது. இதில் படங்கள்
 முதலில் கண்பிக்கப்பட்டு பிறகு அவற்றை எப்படி வாசிப்பது என வாசித்து
காட்டும். மாணவர்கள் நன்கு கவனித்து அவற்றை சரியாக Type செய்ய 
வேண்டும். இவ்வாறு பத்து பத்து படங்களாக காண்பிக்கப்பட்டு அவற்றின் 
பெயர்களை தெரிந்துகொண்ட பிறகு பாராட்டு கோப்பை கிடைப்பதால் 
மாணவர்கள்  மகிழ்ச்சியுடன் கற்றல் செயலில் ஈடுபடுகின்றனர்.

Online Income Tax Paying Method e - ITR Form Filling Tutorial

Tamil step by step tutorial with pictures.
Go to the Income tax website and get the User ID and Password.
The Already registered persons may Log in.
Those who did not register already must register by click the Register Yourself Link.
Click the Individual link on the next page.
Before filling the informations on the next page, You must go to the income tax link and get the important informations about the tax.
PAN number, Surname, D.O.B should be filled in the Roll No.5 related questions.
In the same way you will fill the step 1, step 2, after that you got a link by yours mail address. By click the new link your account will be activated successfully.
After the activation of your account you Log in by using yours User ID and Password.
If you Log in you see the quick e-file ITR and click it.
You filled the page like the below method. The PAN number is already filled.
After summit the you got the next page.
In this page you see 6 windows and SUBMIT, Save DrafF, Exit Buttons.
The First me is self-details page. The first part is already filled. You have to filled the coloumn 7.
The second part have to be filled like the below method.
The person who paid extra tax and want to refund only filled the Column 20 (Tax Refundable)
You have to filled the Income details by using the form 16.
Before registering you can tick the red box, If you worked in two varies places and you already paid in those two places and you already pain these two places you can click the add button. In the Tax details page you have to filled the paid details.
In the taxes paid and verification page we have to filled only the bank account details. The other informations are already filled.
If you donate amount to any welfare organisations, you filled it on 80 G page.
After filled all the details you can click the submit Button.
If your details are fully filled accurately, the ITR V form can be appeared. We can download it.
The PDF Format ITR V form should be opened by Password. The password is your PAN number and DOB. If your pan no ABCDE12345F and DOF: 24.8.2001 the password is abcde12345f24082001
You can take print out the page and signed it. You can send the print out to the given address. within 90 days by ordinary post / Speed post. (not by Registered post)
E-Verify facility will be launched this year onwards. e-Verified persons does not send their ITR-V forms to the Income tax department.
The last date for submitting your income tax is 31.08.2015

கல்வித்துறையின் நடவடிக்கை:தலைமை ஆசிரியர்கள் அதிருப்தி

பள்ளி மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டால், தலைமை ஆசிரியர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்ற பள்ளி கல்வித்துறையின் உத்தரவால், தலைமை ஆசிரியர்கள் அதிருப்தி அடைந்துள்ளனர்.

TNPSC: குரூப் 4 பணியிடங்களுக்கான அறிவிப்பு செப்டம்பரில் வெளியிடப்படும்: டிஎன்பிஎஸ்சி

    சுமார் 800 விஏஓ பணியிடங்களுக்கான அறிவிப்பு செப்டம்பரில் வெளியிடப்படும் என்று டிஎன்பிஎஸ்சி தலைவர்(பொறுப்பு) பாலசுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், 

Seventh Pay Commission May Recommend Permanent Pay Panel

The Seventh Pay Commission is likely to recommend the government to form a permanent pay panel to give recommendations to the government from time to time on issues pertaining to pay structure of central government employees.

ஏழாவது ஊதியக் குழுவின் அறிக்கை செப்டம்பர் 2015 இரண்டாவது வாரத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ளது.

The Hindi daily Dainik Baskar quoted in its report published on 22.8.2015 about report of Seventh pay commission that the pay commission report will be submitted by second week of September 2015,According to its report the Seventh Pay Commission report to be submitted to the government will be examined by  the senior CoS, which will take two months.
Then it will be submitted to the Ministry of Finance, which will be  implemented from 1st  January, 2016,According to sources the fitment formula 2.86 would be recommended by 7th pay commission.

மாணவர்கள் சாப்பாட்டில் கை வைக்கிறது மத்திய அரசு

பள்ளிகளில் மதிய உணவு தயாரிக்க, கூடுதலாக தேவைப்படும் மானியமில்லாத சிலிண்டர்களுக்கான பணத்தை மத்திய அரசு வழங்க மறுப்பதால், மாநிலங்களின் மதிய உணவு திட்டம் தோல்வி அடையும் நிலை ஏற்பட்டுள்ளது. நாடு முழுவதும் பள்ளிகளில் மதிய உணவு தயாரிக்க, மானிய விலையில் சமையல் காஸ் சிலிண்டர்களை மத்திய அரசு வழங்குகிறது. ஆனால், பல நேரங்களில், மானிய சிலிண்டர் மட்டும் உணவு தயாரிக்க போதுமானதாக இருப்பதில்லை. இதனால், சந்தை விலையில், சமையல் காஸ் சிலிண்டர்கள் வாங்கப்படுகின்றன.அவற்றிற்கான பணத்தை, மாநில அரசுகளுக்கு, மத்திய அரசு திரும்ப வழங்கி வந்தது.

கடந்த ஏப்ரல் முதல், அனைத்து மாநிலங்களுக்கும் மத்திய அரசு பிறப்பித்த உத்தரவில், 'மானியமில்லாத சிலிண்டர்களுக்கான பணத்தை தர முடியாது' என தெரிவிக்கப்பட்டது. செலவினங்களை குறைக்கும் நோக்கில், மத்திய அரசு இந்த அறிவிப்பை வெளியிட்டது. இந்த அறிவிப்பு, மாணவர்களுக்கு போதுமான உணவு தயாரிக்க முடியாத நிலையை ஏற் படுத்தி விடுவ தால், உன்னதமான மதிய உணவு திட்டம் பாழாகும் நிலை ஏற்பட்டுள்ளதாக, மாநில அரசுகள் கருதுகின்றன.இதுகுறித்து, அமைச்சர் ஸ்மிருதி இரானி தலைமையிலான, மத்திய மனித வள மேம்பாட்டுத் துறை மற்றும் அருண் ஜெட்லி தலைமையிலான நிதித் துறைக்கு கடிதம் எழுத மாநில அரசுகள் முடிவு செய்துள்ளன.

மதிய உணவு திட்டம் :

* நாடு முழுவதும், ஒன்றாம் வகுப்பு முதல், எட்டாம் வகுப்பு வரை, 10 கோடி மாணவர்களுக்கு மதிய உணவு வழங்கப்படுகிறது.

* இதற்கான செலவில், 90 சதவீதத்தை, வட கிழக்கு மாநிலங்களுக்கு மத்திய அரசு வழங்குகிறது. பிற மாநிலங்களுக்கு, 75 சதவீத செலவுத்தொகையை வழங்குகிறது.

* 2014 - 15ல், 13 ஆயிரம் கோடியை மத்திய அரசு ஒதுக்கியது. நடப்பு நிதியாண்டில், 9,000 கோடி ரூபாயாகக் குறைத்துள்ளது. மதிய உணவு திட்டத்தில், பீகாரில், 1.38 கோடி மாணவர்கள் பயன் பெற்று வருகின்றனர். எவ்வித முறைகேடுகளும் நடைபெறாத வகையில் திறம்பட நடத்தி வருகிறோம். இந்நிலையில், மானியமில்லாத சிலிண்டர்களுக்கான பணத்தை வழங்க மத்திய அரசு மறுப்பதால், மாற்று முறைகளை நாட வேண்டியிருக்கும். அதனால் குழப்பங்கள் ஏற்படும். பி.கே.ஷாஹி கல்வி அமைச்சர், பீகார்

பள்ளிகளில் பிளாஸ்டிக்குக்கு தடை பள்ளிக்கல்வி துறை அறிவிப்பு

அரசு மற்றும் தனியார் பள்ளிகளில், பிளாஸ்டிக் பயன்பாட்டுக்கு, பள்ளிக் கல்வித்துறை தடை விதித்துள்ளதோடு, தேசிய பசுமைப் படை அமைக்கவும் உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தில் உள்ள பெரும்பாலான சந்தைகள், கடைகள், வணிக வளாகங்களில், பிளாஸ்டிக் பைகள், 'யூஸ் அன்ட் த்ரோ' பொருட்கள், அதிக அளவில் பயன்படுத்தப்படுகின்றன. இந்த பிளாஸ்டிக் பொருட்கள், குப்பைகளாகத் தேங்கி, சுற்றுச்சூழலுக்கு மாசு ஏற்படுத்துகின்றன. கழிவுநீர், மழைநீர் சேகரிப்பு குழாய்களில் அடைப்பு ஏற்படுத்துவதுடன், பல இடங்களில் நீர் நிலைகளையும் மாசு படுத்துகின்றன.

பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு ரேசன் கார்டு கட்டாயம்

பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 தேர்வு எழுத உள்ள மாணவர்கள் ரேஷன் அட்டை நகல்களை பள்ளியில் சமர்ப்பிக்க வேண்டும் என்று பள்ளி கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது. பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 வகுப்பு மாணவர்களுக்கான பொதுத் தேர்வு மார்ச் 2016ல் தொடங்க உள்ளது. இதையடுத்து, தமிழகம், புதுச்சேரியில் பள்ளிகள் மூலம் தேர்வு எழுத உள்ள மாணவர்களின் பட்டியல் தயாரிக்கும் பணியில் தேர்வுத்துறை ஈடுபட்டுள்ளது. தேர்வு எழுத உள்ள மாணவர்களுக்கான சான்றுகள் தயாரிக்கும்போது அதில் எந்த குழப்பமும் ஏற்படாமல் இருக்க பெயர், பிறந்த தேதி, பெற்றோர் பெயர், சாதி உள்ளிட்ட விவரங்கள் சேகரிக்கப்படுகின்றன.

பள்ளிக்கல்வி - பள்ளிகள் பின்பற்ற வேண்டிய மழைகால முன் எச்சரிக்கை நடவடிக்கை - இயக்குனர் செயல்முறைகள்