தமிழக சட்டசபை கூட்டத்தொடர் வருகிற 24-ந் தேதி (நாளை மறுநாள்) காலை 10மணிக்கு தொடங்கும் என்று கடந்த வாரம் சட்டப்பேரவை செயலாளர் ஜமாலுதீன் அறிவித்து இருந்தார்.
அலுவல் ஆய்வுக்குழு கூட்டம்
இந்த நிலையில், சட்டசபை கூட்டத்தொடரை எத்தனை நாட்கள் நடத்துவது என்பதை முடிவுசெய்வதற்காக, சபாநாயகர் ப.தனபால் தலைமையில் நேற்று அலுவல் ஆய்வுக்குழு கூட்டம் நடைபெற்றது.சென்னை தலைமைச்செயலகத்தில் நடந்த இந்த கூட்டத்தில், அவை முன்னவரும், நிதியமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம், அமைச்சர்கள் நத்தம் விஸ்வநாதன், வைத்திலிங்கம், எடப்பாடி பழனிச்சாமி, தி.மு.க. கொறடா சக்கரபாணி, மார்க்சிஸ்ட்கம்யூனிஸ்டு கட்சி உறுப்பினர் பீம்ராவ், இந்திய கம்யூனிஸ்டு கட்சி உறுப்பினர்ஆறுமுகம், புதிய தமிழகம் கட்சி உறுப்பினர் டாக்டர் கிருஷ்ணசாமி உள்பட எதிர்கட்சி உறுப்பினர்கள் கலந்துகொண்டனர்.கூட்டம் நிறைவடைந்த நிலையில், சபாநாயகர் ப.தனபால் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.
அப்போது அவர் கூறியதாவது:-31-ந் தேதி (திங்கட்கிழமை) சமூக நலம் மற்றும் சத்துணவுத் திட்டத்துறை, மாற்றுத்திறனாளிகள் நலத்துறை, தகவல் தொழில்நுட்பவியல் துறை ஆகியவற்றின் மீதானமானிய கோரிக்கை விவாதம் நடைபெறும். செப்டம்பர் 1-ந் தேதி (செவ்வாய்க்கிழமை) உயர்கல்வித்துறை, பள்ளிக்கல்வித்துறை, தமிழ் வளர்ச்சித்துறை மீதான மானிய கோரிக்கை விவாதம் நடைபெறும்.
No comments:
Post a Comment