Pages

Friday, January 8, 2016

ஒன் டிக்கெட்; ஒன் ஐ.டி.,' திட்டம் அறிமுகம் முன்பதிவில் பெயர் மாறினால் டிக்கெட் ரத்து


ரயில் பயணத்துக்காக, டிக்கெட் முன்பதிவு செய்தால் மட்டும் போதாது; அதில் உள்ள பெயரும், டிக்கெட் பரிசோதகரிடம் காட்டும் அடையாள அட்டையில் உள்ள பெயரும் ஒன்றாக இருக்க வேண்டும். இல்லையெனில், டிக்கெட் ரத்தாகி விடும்' என, ரயில்வே வாரியம் எச்சரித்துள்ளது.'


ரயில் டிக்கெட் முன்பதிவு செய்யும் விண்ணப்பத்தில், முழு பெயரை குறிப்பிடும் முறை விரைவில் அமல்படுத்தப்படும்' என, சில நாட்களுக்கு முன், ரயில்வே வாரியம் அறிவித்திருந்தது.இந்நிலையில், முன்பதிவு செய்யப்பட்ட டிக்கெட்டுக்களை, கள்ள மார்க்கெட்டில் அதிக விலைக்கு விற்பனை செய்வதை தடுக்க, 'ஒன் டிக்கெட், ஒன் ஐ.டி.,' என்ற திட்டத்தை, புத்தாண்டு முதல், ரயில்வே வாரியம் அமல்படுத்தி உள்ளது. அதன்படி, டிக்கெட் முன்பதிவு செய்யும் போது குறிப்பிடும் பெயரும், ரயில் பயணத்தின் போது, டிக்கெட் பரிசோதகரிடம் காட்டும் அடையாள அட்டையில் உள்ள பெயரும் ஒன்றாக இருக்க வேண்டும்.

வேறுபட்டிருந்தால், அந்த டிக்கெட் உடனடியாக ரத்து செய்யப்படும். இதனால், பயணம் செய்வோர் பாதிக்கப்படுவதுடன், அவர்கள் அபராதமும் செலுத்த வேண்டிய நிலை உருவாகும். இதுகுறித்த சுற்றறிக்கை அனைத்து மண்டலங்களுக்கும் அனுப்பப்பட்டுள்ளது. '24 மணி நேரத்திற்கு முன் விண்ணப்பம் தர வேண்டும்' ரயில்வே அதிகாரிகள் கூறியதாவது: மும்பையில் இருந்து புறப்படும் ரயில்களில், பெயர் வேறுபாடு காரணமாக, தினமும், 10 டிக்கெட்டுகள் வரை ரத்தாகின்றன. இத்திட்டத்தால், கள்ள மார்க்கெட்டில் ரயில் டிக்கெட் வாங்குவோர், அதிகளவில் பிடிபடுகின்றனர்.

'டிக்கெட் முன்பதிவு செய்தவருக்கு பதில், அவருடைய தாய், தந்தை, சகோதரர், சகோதரி, மனைவி, மகன் அல்லது மகள் பயணம் செய்யலாம்' என, முன்னர் அறிவிக்கப்பட்டது. அதற்கு, பயணத்துக்கு, 24 மணி நேரத்திற்கு முன், முன்பதிவு செய்தவர், அவருக்கு பதில், யார் பயணம் செய்யப் போகின்றனர் என்பதை குறிப்பிட்டு, விண்ணப்பிக்க வேண்டும். அப்போது தான், அந்த டிக்கெட்டில் வேறு ஒருவர் பயணம் செய்ய முடியும். இவ்வாறு ரயில்வே அதிகாரிகள் கூறினர்.

No comments:

Post a Comment