ஈரோடு சென்னிமலை சாலையில்
உள்ள வேலைவாய்ப்பு அலுவலகத்தில்
தனியார் வேலைவாய்ப்பு முகாம்
வெள்ளிக்கிழமை (ஜனவரி 8) நடைபெற
உள்ளது.
இதுகுறித்து ஈரோடு மாவட்ட
ஆட்சியர் எஸ்.பிரபாகர் திங்கள்கிழமை
வெளியிட்ட செய்தி:
தமிழ்நாடு திறன் மேம்பாட்டு இயக்கம்
மற்றும் மாவட்ட வேலைவாய்ப்பு
அலுவலகம் ஈரோடு இணைந்து நடத்தும்
தனியார் வேலைவாய்ப்பு முகாம்
ஜனவரி 8-ஆம் தேதி காலை 10 மணிக்கு
சென்னிமலை சாலையில் உள்ள மாவட்ட
வேலைவாய்ப்பு அலுவலகத்தில்
நடைபெற உள்ளது.
இதில் முன்னணி தனியார் நிறுவனங்கள்
கலந்துகொண்டு ஆள்களை தேர்வு
செய்ய உள்ளனர். இம்முகாமில் 8-ஆம்
வகுப்பு தேர்ச்சி, 10-ஆம் வகுப்பு
தேர்ச்சி மற்றும் தோல்வி,
செக்யூரிட்டி சர்வீஸ், ஐ.டி.ஐ., பிட்டர்,
டர்னர், மோட்டார் மெக்கானிக் உள்ளிட்ட
அனைத்து பிரிவுகள், இலகு ரக வாகன
ஓட்டுநர்கள் டிப்ளமோ படித்தவர்கள்,
கம்ப்யூட்டர் ஆபரேட்டர்கள் மற்றும் பட்டப்
படிப்பு முடித்தவர்களுக்கு பல்வேறு
காலிப் பணியிடங்களுக்கான நேர்முகத்
தேர்வு நடக்கிறது.
தனியார் துறையில் இம்முகாம் மூலம்
பணியமர்த்தம் செய்யப்படுவதால் தங்களது
வேலைவாய்ப்பு பதிவு எண் ரத்து
செய்யப்படமாட்டாது.
எனவே, ஈரோடு மாவட்டத்தைச் சேர்ந்த
படித்த இளைஞர்கள் மற்றும் வேலை
அளிப்பவர்கள் இந்த வாய்ப்பினை
பயன்படுத்தி கொள்ள வேண்டும் எனத்
தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment