தமிழகம் முழுவதும் மிகவும் குறைவான திறன் அடைவு உள்ள அரசு தொடக்க, நடுநிலைப் பள்ளிகளில் தமிழ், ஆங்கிலத்தில் வாசிப்புத் திறன் மற்றும் கணிதத் திறன்களில் மாணவர்களது அடைவுத் திறனின் தற்போதைய நிலை குறித்து ஆய்வு செய்து உடனடியாக அறிக்கை அனுப்பும்படி தொடக்கக் கல்வி இயக்ககம் அனைத்து மாவட்டத் தொடக்கக் கல்வி அலுவலர்களுக்கும் அண்மையில் உத்தரவிட்டிருந்தது.
சேலம் மாவட்டத்தில் உள்ள அரசுப் பள்ளிகளில் மாணவர்களின் கற்றல் அடைவுத் திறன் குறித்து கல்வித் துறை அதிகாரிகள் ஆய்வு நடத்தி வருகின்றனர்.
அதைத்தொடர்ந்து, சேலம் மாவட்டம் முழுவதும் அண்மையில் 21 ஒன்றியங்களின் உதவித் தொடக்கக் கல்வி அலுவலர்களும், தாம் பணிபுரியும் ஒன்றியம் தவிர்த்து பிற ஒன்றியங்களுக்குச் சென்று ஆய்வு செய்து அறிக்கை தர அனைத்து உதவித் தொடக்கக் கல்வி அலுவலர்களுக்கும் மாவட்டத் தொடக்கக் கல்வி அலுவலர் உத்தரவிட்டிருந்தார்.
அதைத்தொடர்ந்து, ஒவ்வொரு உதவித் தொடக்கக் கல்வி அலுவலர்களும், மிகவும் குறைவான அடைவுத் திறன் உள்ள 5 பள்ளிகளுக்குச் சென்றனர்.
அங்கு 2ஆம் வகுப்பு முதல் 8ஆம் வகுப்பு வரையில் மாணவர்களிடம் தமிழ், ஆங்கிலத்தில் வாசிப்புத் திறன், கணித அடிப்படைச் செயல்பாடுகள் போன்றவற்றில் ஆய்வு மேற்கொண்டனர். மேலும், பள்ளிகளில் கற்றல் அட்டைகள், சுகாதார செயல்பாடுகள், வகுப்பு ஆசிரியர் மாணவர்களை குழுக்கள் அடிப்படையில் அமர்த்தியுள்ளனரா என்று ஆய்வுகள் மேற்கொண்டனர்.
நிகழ் கல்வியாண்டின் ஆரம்ப மாதமான ஜூன் முதல் டிசம்பர் வரையில் மாணவர் திறன்களில் முன்னேற்றம் அடைந்துள்ளனரா என்றும் ஆய்வு செய்தனர்.
No comments:
Post a Comment