Pages

Saturday, January 30, 2016

100 சதவீதம் தபால் ஓட்டு: தேர்தல் அதிகாரி அறிவுரை


'தேர்தல் பணியில் ஈடுபடுவோர் அனைவரும், தபால் ஓட்டு போடுவதை உறுதி செய்ய வேண்டும்' என, கலெக்டர்களுக்கு, தமிழக தலைமை தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானி அறிவுரை வழங்கினார்.தமிழக சட்டசபை தேர்தல் விரைவில் வர உள்ளதால், சென்னை மண்டலத்திற்குட்பட்ட, சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், வேலுார், திருவண்ணாமலை, விழுப்புரம், கடலுார், கிருஷ்ணகிரி மாவட்டங்களைச் சேர்ந்த கலெக்டர்கள், மாவட்ட வருவாய் அலுவலர்கள், காவல் துறை அதிகாரிகளுக்கான பயிற்சி, சென்னை அண்ணா மேலாண்மை பயிற்சி நிலையத்தில், நேற்று நடந்தது.


தமிழக தலைமை தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானி, இணை தேர்தல் அதிகாரி சிவஞானம் ஆகியோர் பயிற்சி அளித்தனர்.தேர்தல் பணியில் ஈடுபடுவோர் அனைவரும், தபால் ஓட்டு போடுவதை, அதிகாரிகள் உறுதிப்படுத்த வேண்டும். மாற்றுத்திறனாளி வாக்காளர் ஓட்டளிப்பதற்கு வசதியாக, ஓட்டுச்சாவடிகளில் தேவையான வசதி செய்து தர வேண்டும் என, அறிவுறுத்தினர். மேலும், தேர்தலின்போது பயன்படுத்தப்பட உள்ள மென்பொருள் மற்றும் தேர்தல் நிர்வாகம் குறித்தும் பயிற்சி அளிக்கப்பட்டது.

No comments:

Post a Comment