பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு முதல் & இரண்டாம் திருப்புத் தேர்வுகளை பிப்ரவரி மாதம் நடத்த வேண்டும் என்று பள்ளிக் கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.
10 மற்றும் 12 வகுப்புகளுக்கான செய்முறை தேர்வுகளையும் பிப்ரவரி மாதமே நடத்தி முடிக்க வேண்டும் என்றும் தேர்வுத்துறை உத்தரவிட்டு அதற்கான தேதிகளையும் அறிவித்துள்ளது.
முதல் திருப்பத் தேர்வு:
பிப்ரவரி 1 மொழித்தாள் -1,
2ம் தேதி மொழித்தாள்-2,
3ம் தேதி ஆங்கிலம் தாள்-1,
4ம் தேதி ஆங்கிலம் தாள் -2
6ம் தேதி கணக்கு,
8ம் தேதி அறிவியல்,
10ம் தேதி சமூக அறிவியல்.
இரண்டாம் திருப்பத் தேர்வு :
பிப்ரவரி 15ம் தேதி கணக்கு,
16ம் தேதி அறிவியல்,
17ம் தேதி சமூக அறிவியல்,
மார்ச் 5ம் தேதி மொழித்தாள் -1,
7ம் தேதி மொழித்தாள் -2,
8ம் தேதி ஆங்கிலம் தாள் -1,
9ம் தேதி ஆங்கிலம் தாள் -2 தேர்வு எழுத வேண்டும்.
இந்த தேர்வுகள் முடிந்ததும் செய்முறைத் தேர்வுக்கும், அதைத் தொடர்ந்து பொதுத் தேர்வுக்கும் தயாராக வேண்டும். தொடர்ச்சியாக மாற்றி மாற்றி தேர்வு எழுத வேண்டிய கட்டாயத்துக்கு மாணவர்கள் தள்ளப்பட்டுள்ளதால் இரவு பகலாக கண்விழித்து படிக்கும் நிலையும், மன உளைச்சலுக்கு ஆளாகும் அவலமும் ஏற்பட்டுள்ளது.
No comments:
Post a Comment