பொள்ளாச்சி கல்வி மாவட்டத்தில், தேசிய வருவாய் வழி மற்றும் திறன் படிப்பு உதவித்தொகை தேர்வு வரும் 27ம் தேதி நடைபெறுகிறது.
பொள்ளாச்சி கல்வி மாவட்ட அதிகாரிகள் கூறியதாவது:
தேசிய வருவாய் வழி மற்றும் திறன் படிப்புதவி திட்டத்தின் கீழ், படிப்புதவித்தொகை எட்டாம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்கு வழங்கப்பட உள்ளது. உதவித்தொகை வழங்க மாணவர்களை தெரிவு செய்யும் பொருட்டு, இத்தேர்வு வரும் 23ம் தேதி வட்டார அளவில், தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டு நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது.
சில மாவட்டங்களில் கன மழை காரணமாக, பள்ளிகளுக்கு வெகு நாட்கள் விடுமுறை அளிக்கப்பட்டதாலும், பருவத்தேர்வுகள் ஜனவரி மாதத்தில் நடைபெறவுள்ளதாலும், மாணவர்களின் நலன் கருதி தேர்வு தள்ளி வைக்கப்பட்டு, வரும் 27ம் தேதி நடைபெற உள்ளது என அறிவிக்கப்படுகிறது.
No comments:
Post a Comment