புதுடில்லி: இ.பி.எப்.ஓ., எனப்படும், வருங்கால வைப்பு நிதி அமைப்பு, நடப்பு, 2015 - 16ம் நிதியாண்டில், பி.எப்., முதலீடுகளுக்கு, 9 சதவீத வட்டி வழங்கலாம் என, எதிர்பார்க்கப்படுகிறது.
இ.பி.எப்.ஓ., அறக்கட்டளை நிர்வாகியும், பாரதிய தொழிலாளர் சங்க செயலருமான பானுசுரே, டில்லியில், நிருபர்களிடம் நேற்று கூறியதாவது:
இ.பி.எப்.ஓ.,வின் நிதித் தணிக்கை மற்றும் முதலீட்டுக்குழு கூட்டம் சமீபத்தில் நடந்தது. அதில், நடப்பு நிதியாண்டில், பி.எப்., முதலீடுகளுக்கு, 8.95 சதவீதம் வட்டி வழங்கலாம் என, பரிந்துரைத்தது. இம்மாத முடிவில், தணிக்கைக் குழு, மீண்டும் ஆலோசனைக் கூட்டம் நடத்த உள்ளது.
அப்போது, சமீபத்திய நிலவரப்படி, வருவாய் மதிப்பீடு செய்யப்படும். அப்போது, பி.எப்., மீதான வட்டி, 9 சதவீதமாக அளிக்கப்பட வாய்ப்பு உள்ளது. குழு பரிந்துரைக்கும் வட்டி வீதம், பி.எப்.ஓ.,வின் மத்திய அறக்கட்டளை நிர்வாகிகள் குழுவால் அங்கீகரிக்கப்பட வேண்டும். அதன்பின், நிதியமைச்சகம் அறிவிப்பு வெளியிடும். இவ்வாறு அவர் கூறினார்.
No comments:
Post a Comment