பல்வேறு முக்கிய துறைகளில் பணியாற்றும் 122 துணை செயலாளர்கள் சரிவர செயல்படாமல் இருப்பது தொடர்பாக அவர்களின் பணித்திறன் குறித்த அறிக்கையை சம்பந்தப்பட்ட அமைச்சகங்களிடம் மத்திய பணியாளர் நலத்துறை கோரியுள்ளது.
அதிமுக்கிய பொறுப்புகளில் உள்ள அதிகாரிகளையும், அவ் வளவாக முக்கியத்துவம் இல்லாத பொறுப்புகளில் உள்ள அதிகாரி களையும் அவ்வப்போது சுழற்சி முறையில் மாற்றுவது மற்றும், பணியில் சிரத்தையாக செயல்படாத அதிகாரிகள் குறித்து மறு ஆய்வு செய்வது தொடர்பாக மத்திய அமைச்சரவைச் செய லாளர் பிரதீப் குமார் சின்ஹா அறிவுறுத்தல் வழங்கியுள்ளார்.
இதைத்தொடர்ந்து, சம்பந்தப் பட்ட அமைச்சகங்களிடம் 122 இணைச் செயலாளர்களின் பணித் திறன் குறித்த அறிக்கையை பணி யாளர் நலத்துறை கோரியுள்ளது.
இந்த 122 பேரில், 17 பேர் பாது காப்பு அமைச்சகத்திலும், 13 பேர் உயர் கல்வித் துறையிலும், 7 பேர் சுகாதாரம் மற்றும் குடும்பநலத் துறையிலும், வணிகம், உணவு மற்றும் பொதுப்பங்கீடு, வருவாய், ஊரக வளர்ச்சித் துறையில் தலா 6 பேர் பணிபுரிகின்றனர்.
இதுதவிர, தேசிய புலனாய்வு வலையமைவு (நேட்கிரிட்), தேசிய பாதுகாப்பு குழு செயலகம் ஆகிய மிக முக்கிய பொறுப்பில் தலா ஒருவர் பணிபுரிகிறார்.
தொழிலாளர் மற்றும் வேலை வாய்ப்பு, சுற்றுச்சூழல், வனம் மற்றும் பருவகால மாறுபாடு, தொழிற் கொள்கை, சட்ட விவ காரம், உணவு பதப்படுத்துதல், நிதி, விமானப் போக்குவரத்து உள்ளிட்ட அமைச்சகங்களிலும் இவர்கள் பணிபுரிகின்றனர்.
சரியாக பணிபுரியாத அலுவலர் களை கட்டாய பணி ஓய்வில் அனுப்ப பரிந்துரை செய்யப்பட் டுள்ளது. 35 வயதுக்கு முன்பு மத்திய அரசுப்பணியில் ஏ அல்லது பி பிரிவு அலுவலராக இணைந்து 50 வயதைக் கடந்து விட்டால், பொதுநலன் கருதி அவரை கட்டாய ஓய்வு பெறச் செய்ய விதி முறை வகை செய்கிறது. அதே போல சி பிரிவு பணியாளர் 55 வய தைக் கடந்து விட்டால், அவரையும் ஓய்வு பெறச் செய்யலாம்.
கடந்த நவம்பரில் கருத்தரங்கு ஒன்றில் பேசிய பிரதமர் நரேந்திர மோடி, பணி செய்வதில் திருப்தி இன்மை காரணமாக மூத்த அதிகாரிகளில் 45 சதவீதம் பேர் நீக்கப்படலாம் அல்லது ஓய் வூதியம் நிறுத்த நடவடிக்கைக்கு ஆளாக்கப்படுவர் என கூறியது குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment