தமிழ் வளர்ச்சித் துறை சார்பில் நடத்தும் கவிதை, கட்டுரை, பேச்சுப் போட்டிகளில் பங்கேற்க சென்னை மாவட்ட மாணவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.கல்லூரி மாணவர்களுக்கான போட்டிகள் 27-ஆம் தேதியும், பிளஸ் 1, பிளஸ் 2 மாணவர்களுக்கான போட்டிகள் 28-ஆம் தேதியும் சென்னை காயிதே மில்லத் அரசு மகளிர் கலைக் கல்லூரியில் காலை 9 மணி முதல் நடைபெறவுள்ளன.
தலைப்பு போட்டி தொடங்கும் முன் அறிவிக்கப்படும். மாணவர்கள் போட்டி நடக்கும் நாளன்று கல்லூரி, பள்ளிகளில் உரிய படிவத்தில் பரிந்துரைக் கடிதம் பெற்று வர வேண்டும் என்று தமிழ் வளர்ச்சித் துறை தெரிவித்துள்ளது.
No comments:
Post a Comment