உலகில் 2016-ம் ஆண்டில் வாழ்வதற்கு சிறந்த நாடுகள் பட்டியலில் ஜெர்மனி முதலிடம் பிடித்து உள்ளது. சுவிட்சர்லாந்து நாட்டை சேர்ந்த உலக பொருளாதார மையம் வெளியிட்டு உள்ள தகவலில் 2016-ம் ஆண்டில் வாழ்வதற்கு சிறந்த நாடுகள் பட்டியலில் ஜெர்மனி முதலிடம் பிடித்து உள்ளது. உலக பொருளாதார மையமானது சுமார் 60-து நாடுகளில் ஆய்வு செய்து உள்ளது. நிலைத்தன்மை, துணிச்சல், கலாச்சார செல்வாக்கு, தொழில் முனைவோர், பாரம்பரியம், வணிகம், வாழ்க்கை தரம் மற்றும் பொருளாதார செல்வாக்கு போன்ற 24 தகுதிகளை கொண்டு இப்பட்டியல் தயாரிக்கப்பட்டு வெளியிடப்பட்டு உள்ளது. வாஷிங்டன் போஸ்ட் தகவலின்படி, தகவலை சேகரிக்க 16,200 அதிகமான மக்களிடம் கணக்கெடுப்பு நடத்தப்பட்டு உள்ளது என்றும் இவர்களில் 4,500 பேர் தொழில் நிறுவனங்களில் மூத்த அதிகாரிகளாக உள்ளவர்கள் என்றும் பிறர் சாதாரண மக்கள் என்றும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
2016-ல் முதல் 10 இடங்களை பிடித்த நாடுகள்:-
1) ஜெர்மனி
2) கனடா
3) இங்கிலாந்து
4) அமெரிக்கா
5) சுவிடன்
6) ஆஸ்திரேலியா
7) ஜப்பான்
8) பிரான்ஸ்
9) நெதர்லாந்து
10) டென்மார்க்
இந்தியா 22 வது இடத்தை பிடித்து உள்ளது, ஆனால், அதன் மேல்வரும் பொருளாதாரம் பட்டியலில் முதலிடத்தை பிடித்தது என்று பிரதமர் மோடி மற்றும் அவருடைய நடவடிக்கைக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டு உள்ளது. இந்தியாவை தொடர்ந்து அடுத்த இடங்களை போர்ச்சுக்கல், ரஷியா மற்றும் இஸ்ரேல் 3, 24 மற்றும் 25-வது இடங்களை பிடித்து உள்ளது.
No comments:
Post a Comment