Pages

Thursday, January 28, 2016

தற்கொலை எண்ணம்; மாணவர்களுக்கு இலவச கவுன்சிலிங்


தற்கொலை எண்ணம் கொண்ட, மாணவர்கள் தொடர்பு கொண்டு, ஆலோசனை பெறும் வகையில், இலவச ஆலோசனை மையத்தை, ஓய்வு பெற்ற பேராசிரியர் துவக்கி உள்ளார்.


பெசன்ட் நகரில், மூத்தோர் சங்கம் மூலம், பல்வேறு சமூக பணிகளை செய்து வருபவர், அண்ணா பல்கலையில் பணியாற்றி, ஓய்வு பெற்ற பேராசிரியர் விஸ்வநாதன். அவர், தன் ஆலோசனை மையம் குறித்து கூறியதாவது:

சமீப காலமாக, மாணவர்களின் தற்கொலை செய்திகள் மனதை பதற வைக்கின்றன. என்னுடைய பல ஆண்டு கால ஆசிரியர் அனுபவத்தில், பல மாணவர்களையும் அவர்களின் பிரச்னைகளையும் அறிந்து இருக்கிறேன். தீர்க்க முடியாததாக அவர்கள் கருதிக் கொண்டிருக்கும் பிரச்னைக்கு, அனுபவசாலிகளான எங்களால், தீர்வு சொல்ல முடியும். தற்போது, மாணவர்கள் அதிகமான படிப்பு சுமை, கடன் சுமை உள்ளிட்ட பல்வேறு மனஅழுத்தங்களில் சிக்கி தவிக்கின்றனர். அவர்கள் யாருடனும் மனம் விட்டு பேசுவதில்லை. அதனால் தான், அவர்களுக்கு வாழ்க்கை இருட்டாக தெரிகிறது. பிரச்னைகளில் உள்ளவர்கள், நண்பர்களுடனோ, பெற்றோருடனோ பேச வேண்டும்.

அப்படியும் முடியாதவர்கள், எங்களை தொடர்பு கொண்டு, அவர்களின் பிரச்னையை கூறினால், எந்த மாதிரியான பிரச்னையாக இருந்தாலும், அதற்கு உரிய தீர்வை கூற முடியும். அப்படி, கடந்த காலங்களில் மனம் விட்டு பேசியவர்கள், தற்போது, பல்வேறு நாடுகளில் நல்ல வேலையில், நன்றாக உள்ளனர். எந்த பிரச்னைக்கும் தீர்வு உள்ளது. இவ்வாறு, அவர் கூறினார். தொடர்புக்கு: 98842 24480

No comments:

Post a Comment