Pages

Wednesday, January 20, 2016

வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது பிஎஸ்எல்வி சி-31 ராக்கெட்


கடல் ஆய்வுக்கான ஐ.ஆர்.என்.எஸ்.எஸ் 1இ என்ற செயற்கைக் கோளுடன் பிஎஸ்எல்வி சி-31 ராக்கெட் இன்று (புதன்கிழமை) காலை 9.31 வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டது.


5-வது செயற்கைக்கோள்:

கடல் ஆய்வுக்காக இதுவரை 4 செயற்கைக் கோள்கள் வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டுவிட்டது.

இந்நிலையில், 5-வது செயற்கைக்கோள் ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ்தவான் விண்வெளி மையத்தில் இருந்து விண்ணில் செலுத்தப்பட்டுள்ளது.

இதேபோல் இன்னும் 2 செயற்கைகோள்களை கடல் சார் ஆராய்ச்சிக்காக இஸ்ரோ நிறுவனம் அனுப்பவுள்ளது.

உள்நாட்டிலேயே வடிவமைக்கப்பட்டது:

1,425 கிலோ எடையுள்ள இந்த செயற்கைக் கோள் 44.4 மீட்டர் உயரம் கொண்டது. உள் நாட்டிலேயே வடிவமைக்கப்பட்டுள்ள இந்த செயற்கைக்கோள் பூமியில் இருந்து குறைந்தபட்சம் 284 கி.மீ., அதிகபட்சம் 20,657 கி.மீ. கொண்ட வட்டப் பாதையில் நிலை நிறுத்தப்பட்டது.

இதன் ஆயுட்காலம் 12 ஆண்டுகள். இதன்மூலம் இயற்கை சீற்றம், இயற்கை பேரிடர் மேலாண்மை, கடல்சார் செயல்பாடுகளை கண்காணிக்க முடியும்.

பிரதமர் வாழ்த்து:

ஐஆர்என்எஸ்எஸ் 1இ என்ற செயற்கைக் கோளுடன் பிஎஸ்எல்வி சி-31 ராக்கெட் வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டு அதன் சுற்றுவட்டப்பாதையில் நிலைநிறுத்தப்பட்டதற்கு பிரதமர் நரேந்திர மோடி இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment