Pages

Monday, January 11, 2016

டாக்டர் பட்டத்தையும் துணை கலெக்டர் வேலையையும் உதறி தள்ளிய வாலிபர்

தான் பெற்ற டாக்டர் பட்டத்தையும், வகித்து வந்த துணை கலெக்டர் வேலையையும் 24 வயதுடைய வாலிபர் ஒருவர் உதறி தள்ளியுள்ளது அனைவரின் கேள்வியாக எழுந்துள்ளது.


ரோமன் சைனி மத்திய பிரதேச மாநிலம் ஜபல்பூர் மாவட்டத்தில் துணை கலெக்டராக பணிபுரிந்து வருகிறார். இவர் எம்.பி.பி.எஸ் படித்து முடித்துள்ளார். இளைஞர்கள் தன்னை போல் வாழ்க்கையில் அனைவரும் உயர வேண்டும் என்ற நோக்கில் தான் பார்த்து வந்த துணை கலெக்டர் பதவி மற்றும் எம்.பி.பி.எஸ். பட்டத்தையும் பொருட்படுத்தாமல் வேலையை விட்டு விட்டு இளைஞர்களுக்காக unacademy.in என்ற இணையதளத்தை உருவாக்கி, அதன்மூலம், இன்றைய இளைஞர்களுக்கு வழிகாட்டுகிறார்.

இது குறித்து அவர் கூறுகையில்,

என் நண்பரின் அலோசனைப்படி இளைஞர்களுக்காக இந்த unacademy.in என்ற இணையதளத்தை துவக்கி, அதிலேயே நாங்கள் இருவரும் முழு ஈடுபாட்டுடன் செயலாற்றி வருவதாக கூறினார்.

அன்அகாடமி.இன் டுவிட்டரில் இதுவரை 20,000 பேர் பின்பற்றி வருகிறார்கள். 64,000 பேர் பேஸ்புக்கை லைக் செய்துள்ளதாக சைனி கூறியுள்ளார்.

No comments:

Post a Comment